என்விடிஏ 2013.3 பயணர் வழிகாட்டி

உள்ளடக்க அட்டவணை

1. அறிமுகம்

NonVisual Desktop Access (NVDA), விண்டோஸ் இயக்கமுறைமைக்கான இலவச திறமூல திரைநவிலி. பார்வையுள்ளவர்கள் கொடுக்கும் விலைக்கு மேல் எந்த விலையும் கொடுக்காமல், பார்வையற்றவர்களும், பார்வை குறைபாடுள்ளவர்களும் குரல்/பிரெயில் பின்னூட்டம் மூலம் விண்டோஸுடன்கூடிய கணினியை இயக்கலாம். சமூகத்தினரின் பங்களிப்புடன் என்விடிஏவை உருவாக்கியிருப்பது NV Access நிறுவனம்.

1.1. பொது அம்சங்கள்

பார்வையற்றவர்களும், பார்வை குறைபாடுள்ளவர்களும் விண்டோஸ் இயக்கமுறைமை/மூன்றாம் தரப்பு பயன்பாடுகளை அணுகவும், அவைகளுடன் அளவளாவவும் என்விடிஏ பயன்படுகிறது.

தலையாய சிறப்புக் கூறுகள்:

1.2. அனைத்துலக மயமாக்கம்

மக்கள் உலகின் எப்பகுதியிலிருந்தாலும், எந்த மொழியை பேசினாலும், எல்லோரும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த சமவாய்ப்பு இருக்க வேண்டும் என்பது மிகத் தேவையானதாகும். ஆங்கிலம் தவிர, பிற 44 மொழிகளில் என்விடிஏ மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவை ஆஃப்ரிகான்ஸ், அல்பேனிய, அம்ஹாரிக், அரபி, அரகனீய, பிரேசில் போர்ச்சுகீஸிய, பல்கேரிய, க்ரோயேஷிய, செக், டச், டேனிஷ், ஃபார்சிய, ஃபின்னிஷ், பிரெஞ்சு, களீஷிய, கிரேக்க, ஜார்ஜிய, ஜெர்மானிய, ஹீப்ரு, ஹிந்தி, ஹங்கேரிய, ஐஸ்லாந்திய, அயர்லாந்திய, இத்தாலிய, ஜப்பானிய, கொரிய, நேபாள, நார்வே, போலிஷ், போர்ச்சுகீஸிய, ரோமானிய, ருஷ்ய, செர்பிய, ஸ்லோவாக்கிய, ஸ்லோவேனிய, ஸ்பானிய, ஸ்வீடிஷ், தமிழ், தாய், பாரம்பரிய மற்றும் எளிமையாக்கப்பட்ட சீனம், துருக்கிய, உக்ரேனிய, மற்றும் வியட்னாமிய மொழிகளாகும்.

1.3. பேச்சொலிப்பான் ஆதரவு

தகவல் பின்னூட்டங்கள், இடைமுகப்பு ஆகியவை பல மொழிகளில் இருப்பதோடு, பேச்சொலிப்பானில் ஒரு மொழிக்கான ஆதரவு இருக்கும்பட்சத்தில், ஆவண உள்ளடக்கங்கள் எந்த மொழியில் இருப்பினும் படிக்கலாம்.

என்விடிஏவினுள் ஈஸ்பீக் எனப்படும் பன்மொழி திறமூல இலவச பேச்சொலிப்பான் கட்டப்பட்டு வெளிவருகிறது.

என்விடிஏ ஆதரவளிக்கும் பிற பேச்சொலிப்பான்கள் பற்றி அறிய, இவ்வழிகாட்டியிலுள்ள ஆதரவளிக்கப்படும் பேச்சொலிப்பான்கள் என்கிற தலைப்பைப் பார்க்கவும்.

1.4. பிரெயில் ஆதரவு

பயனர்கள் புத்தாக்க பிரெயில் காட்சியமைவு வைத்திருக்கும்பட்சத்தில், என்விடிஏ, தகவல் வெளியீட்டைப் பிரெயிலில் கொடுக்கும். இதுகுறித்து மேலும் அறிய, இவ்வழிகாட்டியிலுள்ள ஆதரவளிக்கப்படும் பிரெயில் காட்சியமைவுகள் என்கிற தலைப்பைப் பார்க்கவும்.

என்விடிஏ பல மொழிகளிலுள்ள குறுக்கப்படாத/குறுக்கப்பட்ட பிரெயிலுக்கு ஆதரவளிப்பதுடன், பல மொழிகளின் கணினி பிரெயிலுக்கும் ஆதரவளிக்கிறது.

1.5. உரிமம் மற்றும் பதிப்புரிமை

பதிப்புரிமை (C) {ஆண்டுகள்} என்விடிஏ பங்களிப்பாளர்கள்

இது இரண்டாம் பொது பதிப்பு உரிமத்தின் கீழ் வருகிறது. இம்மென்பொருளை தாங்கள் மாற்றவோ, பிறருடன் பகிர்ந்து கொள்ளவோ தடையில்லை. அப்படி செய்யும்பொழுது, இம்மென்பொருளின் உரிமத்தையும், திறமூலத்தையும் கேட்பவர்களுக்குக் கொடுக்க வேண்டும். இந்த விதி, இம்மென்பொருளின் மூலத்திற்கும், மாற்றப்பட்ட வடிவத்திற்கும், இம்மென்பொருளிலிருந்து பெறப்பட்ட பிற பணிகளுக்கும் பொருந்தும். கூடுதல் தகவல்களுக்கு, முழு உரிம விவரங்களைக் காணவும்.

2. கணினித் தேவைகள்

3. என்விடிஏவைப் பெற்று நிறுவுதல்

இதுவரை தங்களிடம் என்விடிஏ இல்லையென்றால், இதன் படியொன்றை, என்விடிஏவின் இணையப் பக்கத்திலிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம்:

இந்த இணையப்பக்கத்தில் உள்ள "தரவிறக்கம்" உட்பிரிவிற்குச் சென்று, அண்மைய என்விடிஏவை தரவிறக்கிக் கொள்ளலாம்.

தரவிறக்கப்பட்ட கோப்பினை செலுத்தியவுடன், என்விடிஏவின் தற்காலிக படி ஒன்று இயக்கப்படும். பிறகு, என்விடிஏவை நிறுவ வேண்டுமா, பெயர்த்தகு படியை உருவாக்க வேண்டுமா, அல்லது தற்காலிக என்விடிஏவை தொடர்ந்து இயக்க வேண்டுமா என்றுக் கேட்கப்படும்.

தங்களின் கணினியில் என்விடிஏவை எப்பொழுதும் பயன்படுத்துவதாக இருந்தால், என்விடிஏவை நிறுவுவது ஏற்றதாக இருக்கும். என்விடிஏ நிறுவப்பட்டால், சாளரத்தில் புகுபதிவு செய்தவுடன் என்விடிஏ தானாக துவங்கும் வசதியை ஏற்படுத்திக் கொள்ளலாம். மேலும், மேசைத்தள குறுக்கு விசை, துவக்குப் பட்டியல் உருப்படி ஆகியவைகளும் தோற்றுவிக்கப்படும். சாளர புகுபதிவு, பிற பாதுகாப்பான திரைகளை என்விடிஏ நிறுவப்பட்டிருந்தால்தான் படிக்க இயலும், பெயர்த்தகு, அல்லது தற்காலிக என்விடிஏவைக் கொண்டு இத்திரைகளை படிக்க இயலாது. நிறுவப்பட்டிருக்கும் என்விடிஏவைக் கொண்டு எந்நேரத்திலும் பெயர்த்தகு என்விடிஏவை உருவாக்கிக் கொள்ளலாம்.

யுஎஸ்பி பெருவிரல் இயக்ககம், அல்லது பிற எழுதப்படக் கூடிய ஊடகங்களில் என்விடிஏவை எடுத்துச் செல்ல விரும்பினால், பெயர்த்தகு படி உருவாக்கத்தை தாங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். பிறிதொரு தருணம், தங்களின் கணினியில் என்விடிஏவை நிறுவ விரும்பினால், அதை பெயர்த்தகு படியைக் கொண்டு நிறுவிக் கொள்ளலாம். ஆனால், குறுந்தட்டு போன்ற படிக்க மட்டுமேயான ஊடகங்களில் என்விடிஏவை படியெடுக்க விரும்பினால், என்விடிஏவின் தரவிறக்கு கோப்பினை படியெடுக்கவும். படிக்க மட்டுமேயான ஊடகங்களிலிருந்து பெயர்த்தகு என்விடிஏவை இயக்கும் வசதி தற்போதைக்கு இல்லை.

செய்முறை விளக்கங்கள் போன்றவைகளுக்கு என்விடிஏவை தற்காலிகமாக பயன்படுத்தும் விருப்பத் தேர்வும் உண்டு. ஒவ்வொரு முறையும் என்விடிஏவின் தற்காலிக படியை இயக்குவது கால விரயத்தை ஏற்படுத்தும்.

3.1. தற்காலிக/பெயர்த்தகு படிகளில் இருக்கும் கட்டுப்பாடுகள்

புகுபதிவு செய்யும்பொழுதும், அதன் பின்னரும் தற்காலிக மற்றும் பெயர்த்தகு என்விடிஏ தானாக இயங்குவதில்லை என்பதோடு, கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளும் அவைகளுக்குண்டு:

3.2. என்விடிஏவை நிறுவுதல்

தரவிறக்கப்பட்ட கோப்பிலிருந்து என்விடிஏவை நேரடியாக நிறுவுவதாக இருந்தால், 'என்விடிஏவை நிறுவுக' பொத்தானை அழுத்தவும். இந்த சாளரத்தை தாங்கள் ஏற்கனவே மூடியிருந்தாலோ, அல்லது பெயர்த்தகு படியிலிருந்து என்விடிஏவை நிறுவ விரும்பினாலோ, என்விடிஏ பட்டியலின் கருவிகள் உட்பட்டியலில் இருக்கும் 'என்விடிஏவை நிறுவுக' உருப்படியைத் தேர்ந்தெடுக்கவும்.

தோன்றும் நிறுவு உரையாடல் பெட்டி, தாங்கள் என்விடிஏவை நிறுவ விரும்புகிறீர்களா என்பதை உறுதிபடுத்திக் கொண்டு, ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள என்விடிஏவை இந்நிறுவுதல் இற்றைப்படுத்துமா என்பதையும் அரிவிக்கும். 'தொடர்க' பொத்தானை அழுத்தியவுடன் என்விடிஏ நிறுவப்படத் தொடங்கும். இவ்வுரையாடல் பெட்டியில் கொடுக்கப்பட்டிருக்கும் மேலும் சில விருப்பத் தேர்வுகள் குறித்து கீழே விளக்கப்பட்டுள்ளன. நிறுவுதல் முடிந்தவுடன் என்விடிஏ வெற்றிகரமாக நிறுவப்பட்டதாக அறிவிக்கப்படும். 'சரி' பொத்தானை அழுத்தியவுடன் புதிதாக நிறுவப்பட்டிருக்கும் என்விடிஏ மறுதுவக்கப்படும்.

3.2.1. சாளர புகுபதிவுத் திரையில் துவக்குக

இந்த விருப்பத் தேர்வு, சாளர புகுபதிவுத் திரையில் கடவுச்சொல்லை உள்ளீடு செய்யும் முன்னர் என்விடிஏவை பயன்படுத்த வேண்டுமா என்று தீர்மானிக்க உதவுகிறது. இதில், பயனர் கணக்கு கட்டுப்பாடு, பிற பாதுகாப்பான திரைகளும் அடங்கும்.

3.2.2. மேசைத்தள படவுருவையும் கட்டுப்பாடு+நிலைமாற்றி+n குறுக்கு விசையையும் உருவாக்குக

இந்த விருப்பத் தேர்வு, மேசைத்தளத்தில் என்விடிஏவின் படவுருவை உருவாக்க வேண்டுமா என்று தீர்மானிக்க உதவுகிறது. இப்படவுரு உருவாக்கப்பட்டால், அதற்கு கட்டுப்பாடு+நிலைமாற்றி+n குறுக்கு விசை ஒதுக்கப்படும். இவ்விசையைக் கொண்டு எந்நேரத்திலும் என்விடிஏவை இயக்கலாம்.

3.2.3. பெயர்த்தகு அமைவடிவத்தைத் தற்போதைய பயனர் கணக்கில் படியெடுக்கவும்

இந்த விருப்பத் தேர்வு, நிறுவப்பட்டிருக்கும் என்விடிஏவின் பயனர் அமைவடிவத்தை, தற்போது இயக்கத்தில் இருக்கும் பயனர் கணக்கில் படியெடுக்க வேண்டுமா என்று தீர்மானிக்க உதவுகிறது. இது, பிற பயனர் கணக்கிலும், சாளர புகுபதிவு, பிற பாதுகாப்பான திரைகளிலும் பயனர் அமைவடிவத்தை படியெடுக்காது. இந்த விருப்பத் தேர்வு, பெயர்த்தகு படியிலிருந்து என்விடிஏவை நிறுவும்பொழுதுதான் காண்பீர்கள். தரவிறக்கப்பட்டுள்ள என்விடிஏ செலுத்து தொகுப்பிலிருந்து என்விடிஏவை நேரடியாக நிறுவும்பொழுது இந்த விருப்பத் தேர்வு கொடுக்கப்பட்டிருக்க மாட்டாது.

3.3. பெயர்த்தகு படியை உருவாக்குதல்

தரவிறக்கப்பட்ட கோப்பிலிருந்து பெயர்த்தகு படியை நேரடியாக உருவாக்குவதாக இருந்தால், 'பெயர்த்தகு படியை உருவாக்குக' பொத்தானை அழுத்தவும். இந்த சாளரத்தை தாங்கள் ஏற்கனவே மூடியிருந்தாலோ, அல்லது நிறுவப்பட்டிருக்கும் என்விடிஏவிலிருந்து பெயர்த்தகு படியை உருவாக்க விரும்பினாலோ, என்விடிஏ பட்டியலின் கருவிகள் உட்பட்டியலில் இருக்கும் 'பெயர்த்தகு படியை உருவாக்குக' உருப்படியைத் தேர்ந்தெடுக்கவும்.

தோன்றும் உரையாடல் பெட்டி, பெயர்த்தகு என்விடிஏவை தாங்கள் எங்கு உருவாக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க உதவும். பெயர்த்தகு என்விடிஏவை தங்கள் கணினியின் வன்தட்டிலோ, யுஎஸ்பி பெருவிரல் இயக்ககத்திலோ, பிற பெயர்த்தகு ஊடகங்களிலோ உருவாக்கிக் கொள்ளலாம். இதில், இயக்கத்தில் இருக்கும் என்விடிஏவின் பயனர் அமைவடிவத்தை, பெயர்த்தகு படியில் படியெடுக்க வேண்டுமா என்று தீர்மானிக்க ஒரு விருப்பத் தேர்வும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விருப்பத் தேர்வு, நிறுவப்பட்டுள்ள என்விடிஏவிலிருந்து பெயர்த்தகு படியை உருவாக்கும்பொழுதுதான் இருக்கும், தரவிறக்கப்பட்டுள்ள செலுத்து தொகுப்பிலிருந்து பெயர்த்தகு படியை உருவாக்கும்பொழுது இருக்காது. 'தொடர்க' பொத்தானை அழுத்தியவுடன் பெயர்த்தகு படி உருவாக்கப்படத் தொடங்கும். உருவாக்கம் முடிந்தவுடன் பெயர்த்தகு படி வெற்றிகரமாக உருவாக்கப்பட்டதாக ஒரு உரை அறிவிக்கும். இவ்வுரையாடல் பெட்டியை மூட 'சரி' பொத்தானை அழுத்தவும்.

4. என்விடிஏவை துவக்குதல்

4.1. என்விடிஏவை செலுத்துதல்

என்விடிஏ ஏற்கனவே நிறுவப்பட்டிருந்தால், அதை செலுத்துவது மிக எளிதாகும். கட்டுப்பாடு+நிலைமாற்றி+n கூட்டு விசையை அழுத்தியோ, அல்லது துவக்குப் பட்டியலிலுள்ள என்விடிஏவைத் தேர்ந்தெடுத்தோ செலுத்தலாம். கூடுதலாக, 'இயக்கு' உரையாடலில் 'nvda' என்று தட்டச்சிடப்பட்டு உள்ளிடு விசையை அழுத்தினாலும், என்விடிஏ செலுத்தப்படும்.

பெயர்த்தகு படியை செலுத்த, என்விடிஏ வைக்கப்பட்டுள்ள இடத்திற்குச் சென்று, nvda.exe கோப்பின் மீது உள்ளிடு விசையை அழுத்தவும்.

என்விடிஏ துவக்கப்படும்பொழுது, ஏறுமுகமான சிற்றொலிகளை முதலில் கேட்பீர்கள். தங்களின் கணினி, அல்லது பெயர்த்தகு படி வைக்கப்பட்டுள்ள ஊடகத்தின் வேகம் குறைவாக இருந்தால், என்விடிஏ துவங்க தாமதமாகும். என்விடிஏ துவங்க மிகவும் தாமதமானால், "என்விடிஏ ஏற்றப்படுகிறது, கருணைக் கூர்ந்து காத்திருக்கவும்..." என்று அறிவிக்கப்படும்.

என்விடிஏ பேசாதிருந்தாலோ, சாளரப் பிழை ஒலி எழுந்தாலோ, இறங்குமுகமான சிற்றொலிகள் எழுப்பப்பட்டாலோ, என்விடிஏவில் பிழை என்று பொருள். இப்பிழை குறித்து என்விடிஏ மேம்படுத்துநர்களிடம் தாங்கள் தெரிவிக்க வேண்டும். இதை எவ்வாறு செய்வதென்று [என்விடிஏ இணையதளத்தை] பார்க்கவும்.

என்விடிஏ முதன்முதலாக துவங்கும்பொழுது, வரவேற்பு உரையாடல் பெட்டி தோன்றும். இப்பெட்டியில், என்விடிஏ மாற்று விசைக் குறித்தும், என்விடிஏ பட்டியல் குறித்தும் சில அடிப்படைத் தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும். (இத்தலைப்புகள் குறித்து தொடர்ந்து வரும் உட்பிரிவுகளைக் காணவும்.) மேலும், இந்த வரவேற்பு உரையாடல் பெட்டியில் மூன்று தேர்வுப் பெட்டிகள் காணப்படும். முதற் பெட்டி, முகப்பெழுத்துப் பூட்டு விசையை என்விடிஏ மாற்று விசையாகப் பயன்படுத்த வேண்டுமா என்பதைக் கட்டுப்படுத்த கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பெட்டி, தாங்கள் சாளரத்தில் புகுபதிவு செய்தவுடன் என்விடிஏ தானாகத் துவங்க வேண்டுமா என்பதை தீர்மானிக்கக் கொடுக்கப்பட்டுள்ளது. இதை நிறுவு வகை படிகளில் மட்டுமே காண்பீர்கள். மூன்றாம் பெட்டி, இந்த வரவேற்பு உரையாடல் ஒவ்வொரு முறையும் என்விடிஏ துவங்கும்பொழுது காட்டப்பட வேண்டுமா எந்பதைக் கட்டுப்படுத்த கொடுக்கப்பட்டுள்ளது.

4.2. என்விடிஏ விசைப்பலகை கட்டளைகள் குறித்து

4.2.1. என்விடிஏ மாற்று விசை

என்விடிஏவிற்கான விசைப்பலகை கட்டளைகள், ஒன்று, அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட விசைகளுடன் என்விடிஏ மாற்று விசையையும் அழுத்துவதாக அமைந்திருக்கும். மேசைக்கணினி விசைப்பலகையின் எண் திட்டில் அமைந்துள்ள உரை மறுபரிசீலனைக் கட்டளைகள், இதற்கு விதிவிலக்காக அமைந்துள்ளன. இது தவிர, பிற விதிவிலக்குகளும் இதற்குண்டு.

முதன்மை செருகு விசை, எண் திட்டு செருகு விசை, முகப்பெழுத்துப் பூட்டு விசை, ஆகிய மூன்று விசைகளை என்விடிஏ மாற்று விசையாக பயன்படுத்த என்விடிஏவை அமைவடிவமாக்கலாம்.

இயல்பில், முதன்மை செருகு விசையும், எண் திட்டு செருகு விசையும், என்விடிஏ மாற்று விசைகளாக அமைந்துள்ளன.

ஒரு என்விடிஏ மாற்று விசையை, கணினியின் இயல்பு விசையாகப் பயன்படுத்த வேண்டுமென்றால், அவ்விசையை தொடர்ந்து இருமுறை அழுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, முகப்பெழுத்துப் பூட்டு விசை என்விடிஏ மாற்று விசையாக அமைந்திருக்கும்பொழுது, தாங்கள் முகப்பெழுத்துப் பூட்டு விசையை இயக்க வேண்டுமென்றால், அவ்விசையை தொடர்ந்து இருமுறை அழுத்த வேண்டும்.

4.2.2. விசைப்பலகை வரைவுகள்

என்விடிஏ தற்பொழுது இரு விசைக் கட்டளை தொகுப்புகளைக் கொண்டுள்ளது. மேசைக்கணினிக்கு ஒருவரைவும், மடிக்கணினிக்கு ஒரு வரைவும் உள்ளது. என்விடிஏ, மேசைக்கணினி வரைவை இயல்பான வரைவாகக் கொண்டுள்ளது. இருப்பினும், மடிக்கணினி வரைவிற்கு மாறும் வசதியுமுள்ளது. விசைப்பலகை வரைவை மாற்றியமைக்க, என்விடிஏ பட்டியலிலுள்ள முதன்மை விருப்பங்கள் உட்பட்டியலில் இருக்கும் விசைப்பலகை அமைப்புகள் உரையாடல் பெட்டிக்குச் செல்லவும்.

மேசைக்கணினி வரைவில், எண் திட்டு விசைகளை என்விடிஏ, எண் பூட்டு இடப்பட்டிருக்கும்பொழுது மிகுதியாகப் பயன்படுத்துகிறது. பெரும்பாலான மடிக்கணினிகளில் எண் திட்டு இருப்பதில்லை. ஆகவே, மடிக்கணினி வரைவில் முகப்பெழுத்துப் பூட்டு, என்விடிஏ மாற்று விசையாகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்விசையுடன், தேவைப்படுமானால், கட்டுப்பாடு, மாற்றழுத்தி, போன்ற பிற விசைகளையும் அழுத்திப் பிடித்துக் கொண்டு, விசைப்பலகையின் வலப்பக்க விசைகளை (j k l 8 9 0 போன்றவை) அழுத்த வேண்டும். தங்கள் மடிக்கணினியில் இந்த வசதி இல்லாதிருந்தாலோ, எண் பூட்டினை நிறுத்த இயலாதிருந்தாலோ, மடிக்கணினி வரைவிற்கு தாங்கள் மாறிக் கொள்ளலாம்.

4.3. என்விடிஏ தொடு சைகைகள்

தொடு திரையும், விண்டோஸ் 8, அல்லது அதற்கும் மேலான இயக்கமுறைமையையும் கொண்ட கணினியில் என்விடிஏவை பயன்படுத்தும்பொழுது, அத்தொடு திரையின் மூலம் என்விடிஏவைக் கட்டுப்படுத்தலாம். என்விடிஏ இயக்கத்தில் இருக்கும்பொழுது, எல்லா தொடு உள்ளீடுகளும் என்விடிஏவிற்கு நேரடியாக அனுப்பப்படும். ஆகவே, என்விடிஏ இல்லாமல் செயற்படுத்தப்படும் இயல்புத் தொடு கட்டளைகள் செயற்படாது.

4.3.1. திரையை ஆராய்தல்

திரையின் ஓரிடத்தில் இருக்கும் கட்டுப்பாட்டையோ, உரையையோ அறிவிக்க செய்வதுதான், தொடு திரையைக் கொண்டு செய்யும் அடிப்படை செயலாகும். இதை செய்ய, ஏதேனும் ஒருவிரலை, திரையில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வைக்கவும். மேலும், திரையில் விரலை வைத்து அங்குமிங்கும் நகர்த்தும்பொழுது, விரல் செல்லுமிடங்களில் உள்ள கட்டுப்பாடுகளையும், உரைகளையும் படிக்கும்.

4.3.2. தொடு சைகைகள்

தொடர்ந்து வரும் பகுதிகளில், என்விடிஏவின் கட்டளைகள் விளக்கப்படும்பொழுது, தொடு கட்டளைகள் சிலவும் பட்டியலிடப்படும். இத்தொடு கட்டளைகளைக் கொண்டு, தொடு திரையில் சில கட்டளைகளை செயற்படுத்தலாம். தொடு திரையில் என்விடிஏவின் தொடு கட்டளைகளை எவ்வாறு செயற்படுத்தப்பட வேண்டுமென்று கீழ்க்கண்டவாறு அறிவுறுத்தப்படுகிறது:

தட்டுதல்

ஒன்று, அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட விரல்களைக் கொண்டு திரையைத் தட்டுதல்.

ஒருவிரலைக் கொண்டு ஒரு முறை தட்டினால், அது தட்டுதல் என்று அறியப்படும். இருவிரல்களைக் கொண்டு ஒரே நேரத்தில் தட்டினால், அது ிரு விரல் தட்டுதல் என்று அறியப்படும். இருவிரல்களுக்கு மேலான தட்டுதல்களும் இதுபோன்றே எண்ணிக்கைகளைக் கொண்டு அறியப்படுகின்றன.

ஒரே மாதிரியான தட்டுதலை, ஒரு முறைக்கு மேல் தொடர்ந்து தட்டினால், அதை பல தட்டுதல் சைகையாக என்விடிஏ புரிந்துக் கொள்ளும். இரு முறை தட்டினால், அது இரு முறை தட்டுதல் என்று அறியப்படும். மும்முறை தட்டினால், அது மும்முறை தட்டுதல் என்று அறியப்படும். மும்முறைக்கு மேலான தட்டுதல்களும் இதுபோன்றே எண்ணிக்கைகளைக் கொண்டு அறியப்படுகின்றன. மேற்கூறிய பல தட்டுதல் சைகைகள், எத்தனை விரல்கள் பயன்படுத்தப்பட்டன என்பதையும் அறிகின்றன. ஆகவே, இருவிரல் மும்முறை தட்டுதல், நால்விரல் தட்டுதல் போன்று பல வகைகளில் தட்டுதல்கள் அமையும்.

சுண்டுதல்

திரையின் குறுக்கே தங்களின் விரலை விரைவாக தேய்க்கவும்.

திசையைக் கொண்டு, சுண்டுதல் சைகைகள் இந்த நான்கு விதங்களில் அமையும்: இடது சுண்டுதல், வலது சுண்டுதல், மேல் சுண்டுதல் மற்றும் கீழ் சுண்டுதல்.

தட்டுதல் சைகை போலவே, சுண்டுதல் சைகையிலும் ஒன்றிற்கும் மேற்பட்ட விரல்களைப் பயன்படுத்தலாம். ஆகவே, இருவிரல் மேல் சுண்டுதல், நான்கு விரல் இடது சுண்டுதல் போன்று எல்லா சைகைகளையும் செய்ய இயலும்.

4.3.3. தொடு நிலைகள்

தொடு சைகைகளைக் காட்டிலும் என்விடிஏ கட்டளைகள் மிகுந்து இருப்பதால், பல்வேறு கட்டளைகளை செயற்படுத்த, பல தொடு நிலைகள் கொடுக்கப்பட்டுள்ளன. உரை நிலை, பொருள் நிலை ஆகிய இரு நிலைகள் உள்ளன. தொடு சைகைகளைத் தொடர்ந்து, அடைப்புக் குறியினுள் எந்த தொடு நிலை என்பதையும் இந்த ஆவணத்தில் பட்டியலிடப்படும் சில என்விடிஏ கட்டளைகள் கொண்டிருக்கும். எடுத்துக்காட்டாக, மேல் சுண்டுதல் (உரை நிலை) என்றால், இந்த சைகை, உரை நிலையில் மட்டுமே செயற்படும். ஒரு கட்டளைக்கு குறிப்பான நிலை ஏதும் இணைக்கப்படாமல் இருந்தால், அக்கட்டளை எந்த நிலையிலும் செயற்படும்.

தொடு நிலைகளை மாற்றியமைக்க, ஒரு மூவிரல் தட்டுதலை செயற்படுத்தவும்.

4.4. விசை உள்ளீடு உதவி

பல என்விடிஏ விசை மற்றும் தொடு கட்டளைகள் குறித்து இவ்வழிகாட்டியில் தொடர்ந்து வரும் தலைப்புகளில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இக்கட்டளைகளின் பயன்பாடு குறித்து எளிதாக அறிய, விசை உள்ளீடு உதவியைப் பெறலாம்.

விசை உள்ளீடு உதவியை இயக்க, என்விடிஏ+1 விசையை அழுத்தவும். விசை உள்ளீடு உதவியை நிறுத்த, என்விடிஏ+1 விசையை மீண்டும் அழுத்தவும். விசை உள்ளீடு உதவி இயக்கத்தில், ஒரு விசையை அழுத்தும்பொழுது, அல்லது ஒரு தொடு சைகையை செயற்படுத்தும்பொழுது, அதற்கான செயற்பாடு ஏதேனும் இருந்தால், அதை அறிவிக்கும். விசை உள்ளீடு உதவி நிலையில், கட்டளைகள் உண்மையில் செயற்படுத்தப்படுவதில்லை.

4.5. என்விடிஏ பட்டியல்

முதன்மை விருப்பங்கள் உட்பட்டியலில் உள்ள பல என்விடிஏ அமைப்புகள் உரையாடல்களை இயக்கவும், உதவி பெறவும், அமைவடிவத்தை சேமிக்கவும், சேமிக்கப்பட்ட அமைவடிவத்திற்கு திரும்பிச் செல்லவும், பேச்சு அகராதிகளை மாற்றியமைக்கவும், என்விடிஏவை விட்டு வெளியேறவும் என்விடிஏ பட்டியல் உதவுகிறது.

கணினி இயங்கிக் கொண்டிருக்கும்பொழுது என்விடிஏ பட்டியலை எந்த நேரமும் இயக்க, விசைப் பலகையில் என்விடிஏ+n விசையை அழுத்தவும், அல்லது தொடு திரையில் இருவிரல் இரு முறை தட்டுதலை செயற்படுத்தவும். என்விடிஏ பட்டியலை இயக்க மாற்று வழியாக கணினித் தட்டையும் (System Tray) பயன்படுத்தலாம். என்விடிஏ படவுருவின் மீது சொடுக்கியின் வலது பொத்தானை அழுத்தவும்,, அல்லது தத்தல் விசையை அழுத்தி கணினித் தட்டை சென்றடைந்த பிறகு, இடது, அல்லது வலதம்பு விசைகளை அழுத்தி, என்விடிஏ படவுருவிற்குச் சென்று, அதன் மீது 'பயன்பாடுகள்' விசையை அழுத்தினால், என்விடிஏ பட்டியல் தோன்றும். என்விடிஏ பட்டியல் தோன்றியவுடன், அம்பு விசைகளை அழுத்தி பட்டியல் உருப்படிகளுக்கிடையே நகரவும். ஒரு உருப்படியை இயக்க, அதன் மீது உள்ளிடு விசையை அழுத்தவும்.

4.6. அடிப்படை என்விடிஏ கட்டளைகள்

பெயர் மேசைக்கணினி விசை மடிக்கணினி விசை தொடு விளக்கம்
பேச்சை நிறுத்து கட்டுப்பாடு கட்டுப்பாடு இருவிரல் தட்டுதல் உடனடியாக பேச்சை நிறுத்திக் கொள்ளும்
பேச்சை தற்காலிகமாக நிறுத்து மாற்றழுத்தி மாற்றழுத்தி ஏதுமில்லை மாற்றழுத்தி விசையை அழுத்தினால், உடனடியாக பேச்சை தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளும். மீண்டும் மாற்றழுத்தி விசையை அழுத்தினால், நிறுத்திய இடத்திலிருந்து பேச்சைத் தொடரும் (இதற்கு பேச்சொலிப்பானின் ஆதரவு தேவை)
என்விடிஏ பட்டியல் என்விடிஏ+n என்விடிஏ+n இருவிரல் இரு முறை தட்டுதல் பல அமைப்புகள் உரையாடல்களை இயக்கவும், உதவி பெறவும், என்விடிஏவை விட்டு வெளியேறவும், என்விடிஏ பட்டியலைத் தோற்றுவிக்கும்
பேச்சு நிலையை மாற்று என்விடிஏ+s என்விடிஏ+s ஏதுமில்லை பேசு, சிற்றொலிகளை எழுப்பு, நிறுத்து, ஆகிய மூன்று நிலைகளுக்கு ஊடாகச் சுழற்றும்
உள்ளீடு உதவியை மாற்றியமை என்விடிஏ+1 என்விடிஏ+1 ஏதுமில்லை இந்நிலையில் விசைகளுடன் கட்டப்பட்டுள்ள என்விடிஏ விசைக் கட்டளைகளை விளக்கும்
என்விடிஏவை விட்டு வெளியேறு என்விடிஏ+q என்விடிஏ+q ஏதுமில்லை என்விடிஏவை விட்டு வெளியேறும்
விசையை நேரடியாக அனுப்பு என்விடிஏ+f2 என்விடிஏ+f2 ஏதுமில்லை இவ்விசைக்குப் பிறகு அழுத்தப்படும் விசை, அது என்விடிஏ கட்டளை விசையாக இருப்பினும், அதை என்விடிஏ கையாளாமல், கணினிக்கு நேரடியாக அனுப்பி வைக்கும்
பயன்பாட்டின் தூங்கு நிலை இயக்கு, அல்லது நிறுத்து என்விடிஏ+மாற்றழுத்தி+s | என்விடிஏ+மாற்றழுத்தி+z ஏதுமில்லை ஒரு பயன்பாட்டிற்கான பேச்சையும், பிரெயில் காட்சியமைவையும் நிறுத்தும். இவ்விசையை மீண்டும் அழுத்தினால், பேச்சையும், பிரெயில் காட்சியமைவையும் மீண்டும் இயக்கும். பயன்பாடுகளுக்கென்று தனிப்பட்ட பேச்சு வசதி இருக்கும் நிலையில் இது பயன்படும்

4.7. கணினித் தகவலை அறிவித்தல்

பெயர் விசை விளக்கம்
தேதி/நேரம் அறிவிப்பு என்விடிஏ+f12 ஒருமுறை அழுத்தினால், தற்போதைய நேரத்தை அறிவிக்கும்; இருமுறை அழுத்தினால், இன்றைய தேதியை அறிவிக்கும்
மின்கல நிலைமை அறிவிப்பு என்விடிஏ+மாற்றழுத்தி+b மாறுதிசை மின்னோட்டம், அல்லது மின்கலம் செயலிலுள்ளதா என்று அறிவிக்கும். மின்கலமாக இருந்தால், அதன் தற்போதைய சேமிப்பு அளவை அறிவிக்கும்
பிடிப்புப்பலகை உரை அறிவிப்பு என்விடிஏ+c பிடிப்புப்பலகையில் உரை ஏதுமிருந்தால், அதை அறிவிக்கும்

5. என்விடிஏவுடன் வழிநடத்தல்

கணினியை ஆராயவும், அதனூடாக வழிநடக்கவும், என்விடிஏ பயன்படுகிறது. இதை எளிய நிலையிலும், மறுபரிசீலனைச் சுட்டியின் மூலமாகவும் செய்யலாம்.

5.1. பொருட்கள்

ஒவ்வொரு பயன்பாடும், இயக்கமுறைமையும் தன்னுள்ளாகப் பொருட்களைக் கொண்டுள்ளது. உரையின் சிறு பகுதி, தேர்வுப் பெட்டி, தொகு களம், பொத்தான், வரிசைப் பட்டியல் போன்ற ஒவ்வொரு உருப்படியும் ஒரு பொருளாகும்.

5.2. கணினிக் குவிமையத்தைக் கொண்டு வழிநடத்தல்

குவிமையம் என்று பொதுவாகக் குறிக்கப்படும் கணினிக் குவிமையம், விசைப்பலகையில் தட்டச்சிடப்படும் விசைகளை உள்வாங்கும் பொருளாகும். எடுத்துக்காட்டாக, தாங்கள் ஒரு தொகு களத்தில் தட்டச்சிடுகிறீர்கள் என்று வைத்துக் கொண்டால், அந்தத் தொகு களம் குவிமையத்தில் உள்ளது என்று பொருள்.

தத்தல், அல்லது மாற்றழுத்தி+தத்தல் விசையை அழுத்தி, குவிமையத்தை பொருட்களின் ஊடாக நகர்த்தல், நிலைமாற்றி விசையை அழுத்தி, கிடநீளப் பட்டியலை் அடைந்து, அம்பு விசைகளைக் கொண்டு அதனுளிருக்கும் உருப்படிகளுக்கு நகர்தல், நிலைமாற்றி+தத்தல் விசையை அழுத்தி, செயற்பட்டுக் கொண்டிருக்கும் பயன்பாடுகளுக்கு மாறுதல் போன்ற முறைகளே, பொதுவாக சாளரத்தில் இருக்கும் பொருட்களுக்கிடையே நகரும் முறையாகும். இப்படி செய்யும்பொழுது, குவிமையத்தில் இருக்கும் பொருளின் பெயர், விளக்கம், வகை, நிலை, குறுக்கு விசை போன்ற தகவல்களை என்விடிஏ அறிவிக்கும்.

கணினிக் குவிமையத்தில் இருக்கும்பொழுது, பொருட்களினூடாக நகர சில விசைக் கட்டளைகள் உதவுகின்றன.

பெயர் மேசைக்கணினி விசை மடிக்கணினி விசை விளக்கம்
தற்போதைய குவிமையத்தை அறிவி என்விடிஏ+தத்தல் என்விடிஏ+தத்தல் குவிமையத்தில் இருக்கும் பொருளையோ, கட்டுப்பாட்டையோ அறிவிக்கும். இருமுறை அழுத்தினால், அறிவிப்பை எழுத்துகளாகப் படிக்கும்
தலைப்பை அறிவி என்விடிஏ+t என்விடிஏ+t முன்னணியில் இருக்கும் சாளரத்தின் தலைப்பைப் படிக்கும். இருமுறை அழுத்தினால், தலைப்பை எழுத்துகளாகப் படிக்கும். மும்முறை அழுத்தினால், தலைப்பைப் பிடிப்புப்பலகைக்கு படியெடுக்கும்
இயக்கத்திலிருக்கும் சாளரத்தை அறிவி என்விடிஏ+b என்விடிஏ+b இயக்கத்திலிருக்கும் சாளரத்தின் உரைகளையும், கட்டுப்பாட்டுப் பொருட்களையும் அறிவிக்கும்
நிலைமைப்பட்டையை அறிவி என்விடிஏ+முடிவு என்விடிஏ+மாற்றழுத்தி+முடிவு நிலைமைப்பட்டை இருந்தால், அதைப் படிக்கும். வழிகாட்டிப் பொருளையும் அவ்விடத்திற்கு நகர்த்தும்

5.3. கணினிச் சுட்டியுடன் வழிநடத்தல்

வழிநடத்தல், தொகுத்தல் போன்ற செயல்களை ஆதரிக்கும் பொருட்கள் & குவிமையத்தில் இருக்கும்பொழுது, அப்பொருட்களினுள் இருக்கும் உரையினூடே தொகு சுட்டி என்றும் அழைக்கப்படும் கணினிச் சுட்டியைக் கொண்டு நகரலாம்.

கணினிச் சுட்டியைக் கொண்டுள்ள பொருள் குவிமையத்தில் இருக்கும்பொழுது, அப்பொருளினுள் இருக்கும் உரையிநூடே நகர, அம்பு, பக்கம் மேல், பக்கம் கீழ், தொடக்கம், முடிவு போன்ற விசைகளைப் பயன்படுத்தலாம். குவிமையத்தில் இருக்கும் பொருள் தொகு களமாக இருந்தால், அதனுள் இருக்கும் உரையைத் திருத்தலாம். உரையினூடே வரியுருக்களாகவோ, சொற்களாகவோ, வரிகளாகவோ நகரும்பொழுதும், தெரிவு, அல்லது தெரிவு நீக்கம் செய்யும்பொழுதும் என்விடிஏ அறிவிக்கும்.

கணினிச் சுட்டித் தொடர்பாக கீழ்க்கண்ட விசைக் கட்டளைகளை என்விடிஏ அளிக்கிறது:

பெயர் மேசைக்கணினி விசை மடிக்கணினி விசை விளக்கம்
எல்லாம் படி என்விடிஏ+கீழம்பு என்விடிஏ+a கணினிச் சுட்டி இருக்குமிடத்திலிருந்து ஆவணத்தை முழுமையாகப் படிக்கும். அப்படிப் படிக்கும்பொழுது, கணினிச் சுட்டியும் உடன் நகரும்
தற்போதைய வரியைப் படி என்விடிஏ+மேலம்பு என்விடிஏ+l கணினிச் சுட்டி இருக்கும் வரியைப் படிக்கும். இருமுறை அழுத்தினால், வரியை எழுத்துகளாகப் படிக்கும்
தெரிவாகியுள்ள உரையைப் படி என்விடிஏ+மாற்றழுத்தி+மேலம்பு என்விடிஏ+மாற்றழுத்தி+s தற்பொழுது தெரிவாகியிருக்கும் உரையைப் படிக்கும்

ஒரு அட்டவணைக்குள் இருக்கும்பொழுது, கீழ்க்கண்ட விசைக் கட்டளைகளைப் பயன்படுத்தலாம்:

பெயர் விசை விளக்கம்
முந்தைய செங்குத்து வரிசைக்குச் செல் நிலைமாற்றி+கட்டுப்பாடு+இடதம்பு தற்போதைய கிடை வரிசையில் இருந்து கொண்டே, முந்தைய செங்குத்து வரிசைக்குக் கணினிச் சுட்டியை நகர்த்தும்
அடுத்த செங்குத்து வரிசைக்குச் செல் நிலைமாற்றி+கட்டுப்பாடு+வலதம்பு தற்போதைய கிடை வரிசையில் இருந்து கொண்டே, அடுத்த செங்குத்து வரிசைக்குக் கணினிச் சுட்டியை நகர்த்தும்
முந்தைய கிடை வரிசைக்குச் செல் நிலைமாற்றி+கட்டுப்பாடு+மேலம்பு தற்போதைய செங்குத்து வரிசையில் இருந்து கொண்டே, முந்தைய கிடை வரிசைக்குக் கணினிச் சுட்டியை நகர்த்தும்
அடுத்த கிடை வரிசைக்குச் செல் நிலைமாற்றி+கட்டுப்பாடு+கீழம்பு தற்போதைய செங்குத்து வரிசையில் இருந்து கொண்டே, முந்தைய கிடை வரிசைக்குக் கணினிச் சுட்டியை நகர்த்தும்

5.4. பொருள் வழிநடத்தல்

பெரும்பாலான தருணங்களில், [கணினிக் குவிமையத்தையும்&SystemFocus], கணினிச் சுட்டியையும் நகர்த்தும் கட்டளைகளைக் கொண்டு பயன்பாடுகளுடன் அளவளாவுவீர்கள். ஆனால், சில தருணங்களில், ஒரு பயன்பாட்டையோ, இயக்கமுறைமையையோ குவிமையத்தை விட்டு விலகாமல் ஆராய முற்படுவீர்கள். அதேபோல், விசைப்பலகை மூலம் சென்றடைய முடியாத சில பொருட்களையும் அணுகி ஆராய முற்படுவீர்கள். இதுபோன்ற தருணங்களில், தாங்கள் பொருள் வழிகாட்டியைப் பயன்படுத்தலாம்.

பல பொருட்களுக்கிடையே ஒவ்வொன்றாக நகரவும், ஒரு பொருளின் தகவலை அறியவும் பொருள் வழிகாட்டி துணைப் புரிகிறது. ஒரு பொருளுக்கு நகரும்பொழுது, குவிமையம் இருக்கும்பொழுது எப்படி என்விடிஏ அப்பொருளின் தகவலை அறிவிக்குமோ, அவ்வாறே பொருள் வழிகாட்டி மூலம் நகரும்பொழுதும் அறிவிக்கும். திரையில் தோன்றும் உரைகளை இருப்பது இருப்பதுபோலவே ஆராய, திரை மறுபரிசீலனையைப் பயன்படுத்தலாம்.

ஒவ்வொரு பொருளுக்கும் முன்னும் பின்னும் நகர்வதைத் தவிர்க்க, கணினியில் பொருட்களின் நிலைகள் அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அறிவது என்னவென்றால், ஒரு பொருள் தனக்குள் பிற பொருட்களைக் கொண்டிருக்கும். ஆகவே, பிற பொருட்களைக் கொண்டிருக்கும் பொருளுக்குள் முதலில் சென்று, அதனுள் இருக்கும் தேவையான பொருளுக்கு செல்ல வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒரு வரிசைப் பட்டியல் பல உருப்படிகளைக் கொண்டிருக்கும். ஒரு உருப்படியை சென்றடைய, முதலில் அவ்வரிசைப் பட்டியலுக்குள் செல்ல வேண்டும். வரிசைப் பட்டியல் உருப்படியை அடைந்த பின்னர், அம்பு விசைகளை அழுத்தினால், அதே பட்டியலில் இருக்கும் பிற உருப்படிகளுக்கு நகர்வீர்கள். வரிசைப் பட்டியல் உருப்படி குவிமையத்தில் இருக்கும்பொழுது, 'பின்நகர்' விசையை அழுத்தினால், அவ்வுருப்படிகளைக் கொண்டிருக்கும் பொருளான வரிசைப் பட்டியலுக்குச் செல்வீர்கள். இதன் பிறகு, பிற பொருட்களை தாங்கள் ஆராய விரும்பினால், தற்பொழுது குவிமையத்தில் இருக்கும் வரிசைப் பட்டியலை விட்டு நகரலாம். அதுபோலவே, ஒரு கருவிப்பட்டையை அணுகும்பொழுது, முதலில் அதனுள் நுழைந்த பின்னரே, அதற்குள் இருக்கும் கட்டுப்பாடுகளை அணுக முடியும்.

தற்பொழுது மறுபரிசீலனை செய்யப்படும் பொருள்தான் வழிகாட்டிப் பொருளாகும். பொருள் மறுபரிசீலனை நிலையில் இருக்கும் பொழுது, ஒரு பொருளுக்கு நகர்ந்த பின்னர், அப்பொருளின் உள்ளடக்கங்களை உரை மறுபரிசீலனைக் கட்டளைகளைக் கொண்டு மறுபரிசீலனை செய்யலாம். இயல்பில், பொருள் வழிகாட்டி, கணினிக் குவிமையத்தைத் தொடர்ந்து செல்லும். இருப்பினும், இத்தன்மையை இயக்கவோ, நிறுத்தவோ வசதியுண்டு.

இயல்பில், பொருள் வழிநடத்துதலையும், உரை மறுபரிசீலனையையும் பிரெயில் பின்தொடர்வதில்லை. மாறாக, குவிமையத்தையும், சுட்டிையும் தான் பிரெயில் பின்தொடர்கிறது. பொருள் வழிநடத்துதலையும், உரை மறுபரிசீலனையையும் பிரெயில் பின்தொடர வேண்டுமென தாங்கள் விரும்பினால், பிரெயில் கட்டப்படுவதை மறுபரிசீலனைக்கு மாற்றவும்.

பொருட்களாக நகர, பின்வரும் விசைகளைப் பயன்படுத்தவும்:

பெயர் மேசைக்கணினி விசை மடிக்கணினி விசை தொடு விளக்கம்
தற்போதைய பொருளை அறிவி என்விடிஏ+எண் திட்டு 5 என்விடிஏ+மாற்றழுத்தி+o ஏதுமில்லை தற்போதைய பொருளை அறிவிக்கும். இருமுறை அழுத்தினால், தகவலை எழுத்துகளாக படிக்கும். மும்முறை அழுத்தினால், பொருளின் தகவலையும், மதிப்பையும் பிடிப்புப்பலகைக்கு படியெடுக்கும்
பொருளைக் கொண்ட பொருளுக்கு நகர் என்விடிஏ+எண் திட்டு 8 என்விடிஏ+மாற்றழுத்தி+மேலம்பு மேல் சுண்டுதல் (பொருள் நிலை) வழிகாட்டிப் பொருளைக் கொண்ட பொருளுக்கு நகரும்
முந்தைய பொருளுக்கு நகர் என்விடிஏ+எண் திட்டு 4 என்விடிஏ+மாற்றழுத்தி+இடதம்பு இடது சுண்டுதல் (பொருள் நிலை) தற்போதைய வழிகாட்டிப் பொருளின் முந்தைய பொருளுக்கு நகரும்
அடுத்தப் பொருளுக்கு நகர் என்விடிஏ+எண் திட்டு 6 என்விடிஏ+மாற்றழுத்தி+வலதம்பு வலது சுண்டுதல் (பொருள் நிலை) தற்போதைய வழிகாட்டிப் பொருளின் அடுத்த பொருளுக்கு நகரும்
உள்ளிருக்கும் முதற்பொருளுக்கு நகர் என்விடிஏ+எண் திட்டு2 என்விடிஏ+மாற்றழுத்தி+கீழம்பு கீழ் சுண்டுதல் (பொருள் நிலை) வழிகாட்டிப் பொருளுக்குள் இருக்கும் முதல் பொருளுக்கு நகரும்
குவிமையத்திலிருக்கும் பொருளுக்கு நகர் என்விடிஏ+எண் திட்டு கழித்தல் என்விடிஏ+பின் நகர் ஏதுமில்லை கணினிக் குவிமையத்திலிருக்கும் பொருளுக்கு நகர்ந்து, அப்பொருளில், கணினிச் சுட்டியிருந்தால், அவ்விடத்திற்கு மறுபரிசீலனைச் சுட்டியையும் நகர்த்தும்
தற்போதைய வழிகாட்டிப் பொருளை இயக்கு என்விடிஏ+எண் திட்டு உள்ளிடு என்விடிஏ+உள்ளிடு இரு முறை தட்டுதல் கணினிக் குவிமையத்தில் இருக்கும் ஒரு பொருளை சொடுக்கி/உள்ளிடு விசை எப்படி இயக்குமோ, அவ்வியக்கத்தை நிகழ்த்தும்
தற்போதைய மறுபரிசீலனை நிலைக்கு, கணினிக் குவிமையத்தை, அல்லது சுட்டியை நகர்த்து என்விடிஏ+மாற்றழுத்தி+எண் திட்டு கழித்தல் என்விடிஏ+மாற்றழுத்தி+பின் நகர் ஏதுமில்லை ஒருமுறை அழுத்தினால், கணினிக் குவிமையத்தைத் தற்போதைய வழிகாட்டிப் பொருளுக்கு நகர்த்தும், இருமுறை அழுத்தினால், கணினிச் சுட்டியை, மறுபரிசீலனைச் சுட்டிக்கு நகர்த்தும்
வழிகாட்டிப் பொருளின் பரிமாணங்களை அறிவி என்விடிஏ+எண் திட்டு அழி என்விடிஏ+அழி ஏதுமில்லை இடது/மேல் விளிம்பிலிருந்து பொருளின் நிலை, பொருளின் அகலம்/உயரம் போன்ற தகவல்களை விழுக்காடுகளில் அறிவிக்கும்

குறிப்பு: எண் திட்டு விசைகள் சரிவர இயங்க, எண் பூட்டு நீக்கப்பட்டிருக்க வேண்டும்.

5.5. உரை மறுபரிசீலனை

திரை, தற்போதைய ஆவணம், அல்லது தற்போதைய பொருள் ஆகியவைகளின் உள்ளடக்கங்களை வரியுருக்களாகவும், சொற்களாகவும், வரிகளாகவும் மறுபரிசீலனை செய்ய என்விடிஏ உதவுகிறது. சாளரக் கட்டளைகள் மையம் போன்ற கணினிச் சுட்டி இல்லாத இடங்களில் இது பயன்படும். எடுத்துக்காட்டாக, ஒரு உரையாடல் பெட்டியில் இருக்கும் நீண்ட உரையை மறுபரிசீலனை செய்ய இதை பயன்படுத்துவீர்கள்.

மறுபரிசீலனைச் சுட்டி நகரும்பொழுது, கணினிச் சுட்டியும் உடன் நகர்வதில்லை என்பதால், தற்போதைய தொகு நிலையை விட்டு விலகாமல், உரைகளை மறுபரிசீலனை செய்ய இயலும். ஆனால், இயல்பில், கணினிச் சுட்டி நகரும்பொழுது, மறுபரிசீலனைச் சுட்டியும் உடன் நகரும். இத்தன்மையை இயக்கவோ, நிறுத்தவோ வசதியுண்டு.

இயல்பில், பொருள் வழிநடத்துதலையும், உரை மறுபரிசீலனையையும் பிரெயில் பின்தொடர்வதில்லை. மாறாக, குவிமையத்தையும், சுட்டிையும் தான் பிரெயில் பின்தொடர்கிறது என்பதை கவனிக்கவும். பொருள் வழிநடத்துதலையும், உரை மறுபரிசீலனையையும் பிரெயில் பின்தொடர வேண்டுமென தாங்கள் விரும்பினால், பிரெயில் கட்டப்படுவதை மறுபரிசீலனைக்கு மாற்றவும்.

உரைகளை மறுபரிசீலனை செய்ய, பின்வரும் விசைக் கட்டளைகள் பயன்படும்:

பெயர் மேசைக்கணினி விசை மடிக்கணினி விசை தொடு விளக்கம்
மறுபரிசீலனையில் இருக்கும் மேல் வரிக்கு நகர் மாற்றழுத்தி+எண் திட்டு 7 என்விடிஏ+கட்டுப்பாடு+தொடக்கம் ஏதுமில்லை மறுபரிசீலனைச் சுட்டியை மேல் வரிக்கு நகர்த்தும்
மறுபரிசீலனையில் இருக்கும் முந்தைய வரிக்கு நகர் என்விடிஏ+எண் திட்டு 7 என்விடிஏ+மேலம்பு மேல் சுண்டுதல் (உரை நிலை) மறுபரிசீலனைச் சுட்டியை முந்தைய வரிக்கு நகர்த்தும்
தற்போதைய வரியை அறிவி எண் திட்டு 8 என்விடிஏ+மாற்றழுத்தி+முற்றுப் புள்ளி ஏதுமில்லை மறுபரிசீலனைச் சுட்டியினிடத்திலிருக்கும் வரியைப் படிக்கும், இருமுறை அழுத்தினால், வரியை எழுத்துகளாகப் படிக்கும், மும்முறை அழுத்தினால், வரியை எழுத்து விளக்கங்களைக் கொண்டுப் படிக்கும்
மறுபரிசீலனையில் இருக்கும் அடுத்த வரிக்கு நகர் எண் திட்டு 9 என்விடிஏ+கீழம்பு கீழ் சுண்டுதல் (உரை நிலை) மறுபரிசீலனைச் சுட்டியை அடுத்த வரிக்கு நகர்த்தும்
மறுபரிசீலனையில் இருக்கும் கீழ் வரிக்கு நகர் மாற்றழுத்தி+எண் திட்டு 9 என்விடிஏ+கட்டுப்பாடு+முடிவு ஏதுமில்லை மறுபரிசீலனைச் சுட்டியை கீழ் வரிக்கு நகர்த்தும்
மறுபரிசீலனையில் இருக்கும் முந்தைய சொல்லிற்கு நகர் எண் திட்டு 4 என்விடிஏ+கட்டுப்பாடு+இடதம்பு இருவிரல் இடது சுண்டுதல் (உரை நிலை) மறுபரிசீலனைச் சுட்டியை முந்தைய சொல்லிற்கு நகர்த்தும்
மறுபரிசீலனையில் இருக்கும் தற்போதைய சொல்லை அறிவி எண் திட்டு 5 என்விடிஏ+கட்டுப்பாடு+முற்றுப் புள்ளி ஏதுமில்லை மறுபரிசீலனைச் சுட்டியினிடத்திலிருக்கும் சொல்லைப் படிக்கும், இருமுறை அழுத்தினால், அச்சொல்லை எழுத்துகளாகப் படிக்கும், மும்முறை அழுத்தினால், அச்சொல்லை எழுத்து விளக்கங்களைக் கொண்டுப் படிக்கும்
மறுபரிசீலனையில் இருக்கும் அடுத்த சொல்லிற்கு நகர் எண் திட்டு 6 என்விடிஏ+கட்டுப்பாடு+வலதம்பு இருவிரல் வலது சுண்டுதல் (உரை நிலை) மறுபரிசீலனைச் சுட்டியை அடுத்த சொல்லிற்கு நகர்த்தும்
மறுபரிசீலனையில் இருக்கும் வரியின் துவக்கத்திற்கு நகர் மாற்றழுத்தி+எண் திட்டு 1 என்விடிஏ+தொடக்கம் ஏதுமில்லை மறுபரிசீலனைச் சுட்டியை வரியின் துவக்கத்திற்கு நகர்த்தும்
மறுபரிசீலனையில் இருக்கும் முந்தைய எழுத்திற்கு நகர் எண் திட்டு 1 என்விடிஏ+இடதம்பு இடது சுண்டுதல் (உரை நிலை) மறுபரிசீலனைச் சுட்டியை முந்தைய எழுத்திற்கு நகர்த்தும்
மறுபரிசீலனையில் இருக்கும் தற்போதைய எழுத்தை அறிவி எண் திட்டு 2 என்விடிஏ+முற்றுப் புள்ளி ஏதுமில்லை மறுபரிசீலனைச் சுட்டியினிடத்திலிருக்கும் எழுத்தை படிக்கும், இருமுறை அழுத்தினால், அவ்வெழுத்திற்கான விளக்கத்தை படிக்கும், மும்முறை அழுத்தினால், அவ்வெழுத்திற்கான எண் மதிப்பை அறிவிக்கும்
மறுபரிசீலனையில் இருக்கும் அடுத்த எழுத்திற்கு நகர் எண் திட்டு 3 என்விடிஏ+வலதம்பு வலது சுண்டுதல் (உரை நிலை) மறுபரிசீலனைச் சுட்டியை அடுத்த எழுத்திற்கு நகர்த்தும்
மறுபரிசீலனையில் இருக்கும் வரியின் முடிவிற்கு நகர் மாற்றழுத்தி+எண் திட்டு 3 என்விடிஏ+முடிவு ஏதுமில்லை மறுபரிசீலனைச் சுட்டியை வரியின் முடிவிற்கு நகர்த்தும்
மறுபரிசீலனைச் சுட்டியைக் கொண்டு எல்லாம் படி எண் திட்டு கூட்டல் என்விடிஏ+மாற்றழுத்தி+a மூவிரல் கீழ் சுண்டுதல் (உரை நிலை) மறுபரிசீலனைச் சுட்டியினிடத்திலிருந்து எல்லாவற்றையும் படிக்கும். மறுபரிசீலனைச் சுட்டியும் உடன் நகரும்
மறுபரிசீலனைச் சுட்டியினிடத்திலிருந்து படியெடு என்விடிஏ+f9 என்விடிஏ+f9 ஏதுமில்லை மறுபரிசீலனைச் சுட்டியினிடத்திலிருந்து படியெடுக்கத் துவக்கத்தைக் குறித்துக் கொள்ளும். ஆனால், அடுத்ததாக விளக்கப்படும் என்விடிஏ+f10 விசையை அழுத்திய பிறகுதான் உரை பிடிப்புப்பலகைக்கு படியெடுக்கப்படும்
மறுபரிசீலனைச் சுட்டி வரை படியெடு என்விடிஏ+f10 என்விடிஏ+f10 ஏதுமில்லை என்விடிஏ+f9 விசை மூலம் குறிக்கப்பட்ட துவக்கத்திலிருந்து, தற்போதைய மறுபரிசீலனைச் சுட்டியினிடம் வரை பிடிப்புப்பலகைக்கு படியெடுக்கும்
உரையின் வடிவூட்டத்தை அறிவி என்விடிஏ+f என்விடிஏ+f ஏதுமில்லை மறுபரிசீலனைச் சுட்டியினிடத்திலிருக்கும் உரையின் வடிவூட்டத்தை அறிவிக்கும்

குறிப்பு: எண் திட்டு சரிவர இயங்க, எண் பூட்டு நீக்கப்பட்டிருக்க வேண்டும்.

மேசைக்கணினி வரைவை பயன்படுத்தும் பொழுது, மேற்கூறிய மறுபரிசீலனை விசைகளை நினைவில் கொள்ள, எண் திட்டில் அவை அமைக்கப்பட்டிருக்கும் முறையை கவனிக்கவும். மேலிருந்து கீழாக இருப்பவை: வரி, சொல், வரியுரு. இடமிருந்து வலமாக இருப்பவை: முந்தையது, தற்போதையது, அடுத்தது. கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைவு, இதை தெளிவாக்கும்:

முந்தைய வரி தற்போதைய வரி அடுத்த வரி
முந்தைய சொல் தற்போதைய சொல் அடுத்த சொல்
முந்தைய வரியுரு தற்போதைய வரியுரு அடுத்த வரியுரு

5.6. மறுபரிசீலனை நிலைகள்

தெரிவு செய்யப்பட்டிருக்கும் மறுபரிசீலனையின் நிலையைப் பொறுத்து, தற்போதைய பொருள், தற்போதைய ஆவணம், அல்லது திரை ஆகியவைகளின் உள்ளடக்கங்களை உரை மறுபரிசீலனைக் கட்டளைகளைக் கொண்டு என்விடிஏ மறுபரிசீலனை செய்யும். என்விடிஏவில் காணப்பட்ட தட்டை மறுபரிசீலனை என்கிற பழைய கோட்பாட்டிற்கு மாற்றாக இருப்பதுதான் இந்த மறுபரிசீலனை நிலைகள்.

பின் வரும் கட்டளைகள், மறுபரிசீலனை நிலைகளுக்கிடையே மாற பயன்படுகிறது.

பெயர் மேசைக்கணினி விசை மடிக்கணினி விசை தொடு விளக்கம்
அடுத்த மறுபரிசீலனை நிலைக்கு மாறு என்விடிஏ+எண் திட்டு 7 என்விடிஏ+பக்கம் மேல் இருவிரல் மேல் சுண்டுதல் கிடைப்பிலிருக்கும் அடுத்த மறுபரிசீலனை நிலைக்கு மாறுகிறது
முந்தைய மறுபரிசீலனை நிலைக்கு மாறு என்விடிஏ+எண் திட்டு 1 என்விடிஏ+பக்கம் கீழ் இருவிரல் கீழ் சுண்டுதல் கிடைப்பிலிருக்கும் முந்தைய மறுபரிசீலனை நிலைக்கு மாறுகிறது

5.6.1. பொருள் மறுபரிசீலனை

பொருள் மறுபரிசீலனை நிலையில் இருக்கும் பொழுது, வழிகாட்டி பொருளின் உள்ளடக்கங்களை மட்டுமே தங்களால் மறுபரிசீலனை செய்ய இயலும். பொதுவில், தொகு களம், அல்லது பிற அடிப்படை ஆவண கட்டுப்பாடுகள் போன்ற பொருட்களில், இவைகள் உரை உள்ளடக்கங்களாக இருக்கும். பிற பொருட்களுக்கு, பெயர் மற்றும் மதிப்பாக இருக்கலாம். அல்லது, இவைகளில் ஏதேனும் ஒன்றாகவும் இருக்கலாம்.

5.6.2. ஆவண மறுபரிசீலனை

இணையப் பக்கம் போன்ற உலாவும் நிலை ஆவணத்திலோ, அல்லது லோட்டஸ் சிம்ஃபனி போன்ற ஆவணத்திலோ வழிகாட்டிப் பொருள் இருக்கும் பொழுது, ஆவண மறுபரிசீலனை நிலைக்கு மாற இயலும். முழு ஆவணத்தின் உரையையும் மறுபரிசீலனை செய்ய, ஆவண மறுபரிசீலனை அனுமதிக்கிறது.

பொருள் மறுபரிசீலனை நிலையிலிருந்து ஆவண மறுபரிசீலனை நிலைக்கு மாறும் பொழுது, வழிகாட்டிப் பொருள் ஆவணத்தில் இருக்கும் நிலையில் மறுபரிசீலனைச் சுட்டியை வைக்கும். மறுபரிசீலனைக் கட்டளைகளைக் கொண்டு ஆவணத்தில் வலம் வரும் பொழுது, தற்போதைய சுட்டியின் நிலையிலிருக்கும் பொருளுக்கு வழிகாட்டிப் பொருளை இற்றைப்படுத்தும்.

உலாவும் நிலை ஆவணங்களில் நகரும் பொழுது, பொருள் மறுபரிசீலனை நிலையிலிருந்து ஆவண மறுபரிசீலனை நிலைக்கு என்விடிஏ தானாக மாறுமென்பதைக் கவனிக்கவும்.

5.6.3. திரை மறுபரிசீலனை

தற்போதைய பயன்பாட்டின் திரையில் காணப்படும் உரையை, பார்வைக்கு இருப்பது போலவே மறுபரிசீலனை செய்ய, திரை மறுபரிசீலனை நிலை அனுமதிக்கிறது. இது, பிற விண்டோஸ் திரைநவிலிகளில் காணப்படும் திரை மறுபரிசீலனை, அல்லது சொடுக்கிக் குறிமுள்ளின் செயலை ஒத்தது.

திரை மறுபரிசீலனை நிலைக்கு மாறும் பொழுது, தற்போதைய வழிகாட்டிப் பொருளின் திரை நிலையில் மறுபரிசீலனைச் சுட்டியை வைக்கும். மறுபரிசீலனைக் கட்டளைகளைக் கொண்டு திரையில் வலம் வரும் பொழுது, மறுபரிசீலனைச் சுட்டியின் திரை நிலையில் இருக்கும் பொருளுக்கு வழிகாட்டிப் பொருளை இற்றைப்படுத்தும்.

புதிய திரை வரைவுத் தொழில்நுட்பங்களுக்கு தற்போதைக்கு ஆதரவளிக்க இயலவில்லையென்பதால், சில பயன்பாடுகளின் திரையில் காணப்படும் சில, அல்லது எல்லா உரைகளையும் என்விடிஏ கண்டுணர்வதில்லை.

5.7. சொடுக்கியுடன் வழிநடத்தல்

கணினிச் சொடுக்கியைப் பயன்படுத்தும்பொழுது, சொடுக்கியின் குறிமுள் நகர்கையில், நேரடியாக அதன்கீழ் இருக்கும் உரையைப் படிக்கும். ஆதரவிருந்தால், குறிமுள்ளை சுற்றியிருக்கும் உரைப் பத்தியையும் படிக்கும். ஆனால், சில கட்டுப்பாடுகளில், உரைகளை வரிகளாக மட்டுமே படிக்க முடியும்.

சொடுக்கியின் குறிமுள் நகர்கையில், அதன்கீழ் இருக்கும் பொருளின் வகையையும் அறிவிக்க என்விடிஏவை அமைவடிவமாக்கலாம். எடுத்துக்காட்டாக, பொத்தான், வரிசைப் பட்டியல், சேர்க்கைப் பெட்டி போன்றவைகளைக் கூறலாம். கட்டுப்பாடுகளில் இருக்கும் உரை போதுமான அளவு இருக்காத தருணங்களில், முழுமையாகப் பார்வையிழந்தவர்களுக்கு இது பயன்படும்.

ஒலி இசைவுகளை சிற்றொலிகளாக எழுப்புவதன் மூலம், திரையின் பரிமாணத்தை ஒப்பு நோக்கி, சொடுக்கியின் குறிமுள் திரையில் எங்கிருக்கிறது என்றரிய என்விடிஏ உதவுகிறது. குறிமுள் திரையில் எவ்வளவுக்கு எவ்வளவு உயரத்தில் உள்ளதோ, அவ்வளவுக்கு அவ்வளவு, ஒலி இசைவின் சுருதி மிகுதியாக இருக்கும். குறிமுள் திரையின் இட, அல்லது வலப் பக்கமாக இருந்தால், பிரியோசை ஒலிபெருக்கி (stereo speaker) பயனிலுள்ளதாக அனுமானித்து, சிற்றொலிகள், இட, அல்லது வலப் பக்கமாக ஒலிக்கும்.

மேற்கூறிய கூடுதல் அம்சங்கள், என்விடிஏவின் இயல்பில் இல்லை. இவ்வம்சங்களை இயக்க, என்விடிஏ பட்டியலின், முதன்மை விருப்பங்கள் உட்பட்டியலில் இருக்கும் சொடுக்கி அமைப்புகள் உரையாடலுக்கு சென்று, என்விடிஏவை அமைவடிவமாக்கலாம்.

சொடுக்கியுடன் வழிநடக்க, சொடுக்கிக் கருவி/பின்தொடர் திட்டு (Trackpad) தேவைப்பட்டாலும், என்விடிஏவில் இதற்கென்று சில விசைக் கட்டளைகள் உள்ளன.

பெயர் மேசைக்கணினி விசை மடிக்கணினி விசை விளக்கம்
இடது சொடுக்கு எண் திட்டு வகுத்தல் என்விடிஏ+இட அடைப்பு சொடுக்கியின் இடதுப் பொத்தான் ஒருமுறை சொடுக்கப்படும். இயல்பான இரட்டை சொடுக்கிற்கு, இப்பொத்தானை இருமுறை அழுத்தவும்
இடது சொடுக்குப் பூட்டு மாற்றழுத்தி+எண் திட்டு வகுத்தல் என்விடிஏ+மாற்றழுத்தி+இட அடைப்பு ஒருமுறை அழுத்தினால், சொடுக்கியின் இடதுப் பொத்தான் பூட்டப்படும். பூட்டைத் திறக்க, இவ்விசையை மீண்டும் ஒருமுறை அழுத்தவும். பொருளை இழுக்க, இவ்விசையை அழுத்தியபின், சொடுக்கியையோ, சொடுக்கியின் வழிக் கட்டளைகளையோ பயன்படுத்தலாம்
வலது சொடுக்கு எண் திட்டு பெருக்கல் என்விடிஏ+வல அடைப்பு சொடுக்கியின் வலது பொத்தான் ஒருமுறை சொடுக்கப்படும்
வலது சொடுக்குப் பூட்டு மாற்றழுத்தி+எண் திட்டு பெருக்கல் என்விடிஏ+கட்டுப்பாடு+வல அடைப்பு ஒருமுறை அழுத்தினால், சொடுக்கியின் வலது பொத்தான் பூட்டப்படும். பூட்டைத் திறக்க, இவ்விசையை மீண்டும் ஒருமுறை அழுத்தவும். பொருளை இழுக்க, இவ்விசையை அழுத்தியபின், சொடுக்கியையோ, சொடுக்கியின் வழிக் கட்டளைகளையோ பயன்படுத்தலாம்
தற்போதைய வழிகாட்டிப் பொருளுக்கு சொடுக்கியை நகர்த்து என்விடிஏ+எண் திட்டு வகுத்தல் என்விடிஏ+மாற்றழுத்தி+m சொடுக்கியின் குறிமுள்ளைத் தற்போதைய வழிகாட்டிப் பொருளுக்கும், மறுபரிசீலனைச் சுட்டிக்கும் நகர்த்தும்
சொடுக்கியின் கீழிருக்கும் பொருளுக்கு நகர்த்து என்விடிஏ+எண் திட்டு பெருக்கல் என்விடிஏ+மாற்றழுத்தி+n வழிகாட்டிப் பொருளை, தற்பொழுது சொடுக்கியின் கீழிருக்கும் பொருளுக்கு நகர்த்தும்

6. உலாவும் நிலை

சிக்கலான இணையப் பக்கங்கள் போன்று, படிக்க மட்டுமேயான ஆவணங்களைப் படிக்க என்விடிஏ உலாவும் நிலையைப் பயன்படுத்துகிறது. Mozilla Firefox, Microsoft Internet Explorer, Google Chrome, Adobe Reader, Adobe Flash போன்ற ஆவணங்கள் இதில் உள்ளடங்கும்.

உலாவும் நிலையில், எளிய ஆவணங்களை சுட்டி விசைகளைக் கொண்டு படிப்பதுபோல், படிக்க மட்டுமேயான ஆவணமும் தட்டைக் காட்சியில் வழங்கப்படும். உலாவும் நிலையில், கணினிச் சுட்டியின் எல்லா விசைக் கட்டளைகளையும் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, எல்லாம் படி, வடிவூட்டத்தை அறிவி, அட்டவணை வழிநடத்தல் கட்டளைகள் போன்றவைகளைக் கூறலாம். தாங்கள் நகரும்பொழுது, ஒரு உரை, தொடுப்பா, தலைப்பா போன்ற தகவல்களையும் அறிவிக்கும்.

சில தருணங்களில், இந்த ஆவணங்களில் இருக்கும் கட்டுப்பாடுகளுடன் தாங்கள் நேரடியாக அளவளாவ வேண்டியிருக்கும். எடுத்துக்காட்டாக, தொகு களங்களில் தட்டச்சிடவும், பட்டியல்களின் உருப்படிகளினூடே அம்பு விசைகளைக் கொண்டு நகரவும் நேரிடலாம். இதை செய்ய, தாங்கள் குவிமைய நிலைக்கு மாற வேண்டும். இந்நிலையில், அழுத்தப்படும் எல்லா விசைகளும் என்விடிஏ கையாளாமல், கணினிக்கு அனுப்பி வைக்கப்படும். உலாவும் நிலையில், குவிமைய நிலைக்கு மாற வேண்டியிருக்கும் கட்டுப்பாடுகளுக்கு தத்தல் விசையின் மூலமாகவோ, சொடுக்கியின் மூலமாகவோ நகரும்பொழுது, இயல்பில் குவிமைய நிலை தானாக இயக்கப்படும். அதேபோல், குவிமைய நிலையில் இருக்கும்பொழுது, குவிமைய நிலை தேவையில்லாத கட்டுப்பாடுகளுக்கு தத்தல் விசை மூலமாகவோ, சொடுக்கி மூலமாகவோ நகரும்பொழுது, உலாவும் நிலை தானாக இயக்கப்படும். குவிமைய நிலைத் தேவைப்படும் கட்டுப்பாடுகளில், குவிமைய நிலையை இயக்க, உள்ளிடு விசையையோ, இடைவெளிப் பட்டையையோ அழுத்தலாம். உலாவும் நிலைக்கு மாற, விடுபடு விசையை அழுத்தவும். கூடுதலாக, தாங்கள் கட்டாய குவிமைய நிலையை ஏற்படுத்தலாம். தாங்கள் மீண்டும் உலாவும் நிலைக்கு மாற விரும்பும்வரை, குவிமைய நிலை இயக்கத்தில் இருக்கும்.

பெயர் விசை விளக்கம்
உலாவும் நிலை, குவிமைய நிலைகளுக்கிடையே மாற்று என்விடிஏ+இடைவெளி உலாவும் நிலை, குவிமைய நிலை ஆகிய இருநிலைகளுக்கிடையே மாற்றியமைக்கும்
குவிமைய நிலையை விட்டு வெளியேறு விடுபடு குவிமைய நிலையிலிருக்கும்பொழுது இவ்விசையை அழுத்தினால், உலாவும் நிலைக்கு மாறும்
உலாவும் நிலை ஆவணத்தைப் புத்தாக்கு என்விடிஏ+f5 ஆவணத்தின் சில உள்ளடக்கப் பகுதிகள் திரையில் சரிவர தோன்றாதபொழுது, ஆவணத்தை மறுஏற்றம் செய்யும்
கண்டுபிடி என்விடிஏ+கட்டுப்பாடு+f தற்போதைய ஆவணத்தில் ஒரு உரையைக் கண்டுபிடிக்க, இவ்விசையை அழுத்தினால், கண்டுபிடித்தலுக்கான உரையாடல் பெட்டி தோன்றும்
அடுத்ததைக் கண்டுபிடி என்விடிஏ+f3 ஏற்கனவே தேடிய உரையின் அடுத்த மறுதோற்றம் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்கும்
முந்தையதைக் கண்டுபிடி என்விடிஏ+மாற்றழுத்தி+f3 ஏற்கனவே தேடிய உரையின் மறுதோற்றம் முந்தையதாக எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்கும்
நெடுவிளக்கத்தைத் திற என்விடிஏ+d தற்போதைய அங்கத்திற்கு நெடுவிளக்கம் ஏதேனும் இருந்தால், அதை அறிவிக்க, புதிய சாளரம் ஒன்றைத் திறக்கும்.

6.1. ஒற்றை எழுத்துடன் வழிநடத்தல்

உலாவும் நிலையில், ஒரு ஆவணத்திலிருக்கும் சில களங்களுக்கு விரைவாக சென்றடைய, ஒற்றை எழுத்துடன் வழிநடக்கும் வசதியை என்விடிஏ கொண்டுள்ளது.

உலாவும் நிலையில், கீழ்க்கண்ட விசைகளை அழுத்தினால், அடுத்ததாகத் தோன்றும் அவயவத்திற்குச் செல்லும். இவ்விசைகளுடன் மாற்றழுத்தி விசையையும் சேர்த்து அழுத்தினால், முந்தைய அவயவத்திற்குச் செல்லும்.

வரிசைப் பட்டியல்கள், அட்டவணைகள் போன்ற கொள்களங்களின் துவக்கத்திற்கு, முடிவிற்கு செல்ல:

பெயர் விசை விளக்கம்
கொள்களத்தின் துவக்கத்திற்குச் செல் மாற்றழுத்தி+கால் புள்ளி சுட்டியின் இடத்திலுள்ள வரிசைப் பட்டியல், அட்டவணை போன்ற கொள்களத்தின் துவக்கத்திற்குச் செல்லும்
கொள்களத்தின் முடிவிற்கு அப்பால் செல் கால் புள்ளி சுட்டியின் இடத்திலுள்ள வரிசைப் பட்டியல், அட்டவணை போன்ற கொள்களத்தின் முடிவிற்கு அப்பால் செல்லும்

6.2. அவயவங்களின் பட்டியல்

ஒரு ஆவணத்தின் பல்வேறு அவயவங்களான தலைப்புகள், தொடுப்புகள், நிலக்குறிகள் ஆகியவைகளின் பட்டியலை என்விடிஏ வழங்குகிறது. இம்மூன்று அவயவங்களிடையே ஒன்றைத் தேர்ந்தெடுக்க, வானொலிப் பொத்தான்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவயவங்களின் பட்டியல் உரையாடலில், தாங்கள் தேடும் அவயவத்தின் உரைகளை வடிகட்ட, ஒரு தொகு களமும் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு உருப்படியைத் தேர்ந்தெடுத்தவுடன், கொடுக்கப்பட்டுள்ள பொத்தான்களை அழுத்தி, அந்த உருப்படியை இயக்கலாம், அல்லது அந்த உருப்படிக்குச் செல்லலாம்.

பெயர் விசை விளக்கம்
உலாவும் நிலைக்கான அவயவங்களின் பட்டியல் என்விடிஏ+f7 ஆவண அவயவங்களின் உருப்படிகளைக் கொண்ட பட்டியலை வழங்குகிறது

6.3. பதிந்துள்ள பொருட்கள்

அடோபி பிளாஷ், சன் ஜாவா போன்ற தொழில்நுட்பங்களைக் கொண்டு, உள்ளடக்கங்கள் செரிவூட்டப்பட்டிருப்பதோடு, பக்கங்களில் பயன்பாடுகளும், உரையாடல்களும் காணப்படலாம். உலாவும் நிலையில் இவைகளை என்விடிஏ எதிர்கொள்ளும்பொழுது, "பதிந்துள்ள பொருள்", "பயன்பாடு", அல்லது "உரையாடல்" என்று தகுந்தவாறு அறிவிக்கும். இப்பொருட்களினுடன் அளவளாவ, அவைகளின் மீது உள்ளிடு விசையை அழுத்தலாம். பொருளை அணுக முடிந்தால், பிற பயன்பாடுகளில் செயற்படுவதுபோல, இப்பொருளின் ஊடேயும் தத்தல் விசையைக் கொண்டு வழிநடக்கலாம். பதிந்துள்ள பொருளைக் கொண்டுள்ள பக்கத்திற்குத் திரும்பிச் செல்ல, ஒரு விசைக் கட்டளையும் கொடுக்கப்பட்டுள்ளது.

பெயர் விசை விளக்கம்
பதிந்துள்ள பொருளைக் கொண்டுள்ளப் பக்கத்திற்குத் திரும்பிச் செல் என்விடிஏ+கட்டுப்பாடு+இடைவெளி பதிந்துள்ள பொருளைத் தன்னுள் கொண்டிருக்கும் ஆவணத்திற்குத் திரும்பிச் செல்லும்

7. பயன்பாடுகளுக்கான தனிப்பட்ட என்விடிஏ கட்டளைகள்

சில பணிகளை எளிதாக்கவும், திரைநவிலியை பயன்படுத்துபவர்கள் அணுக முடியாத செயல்களை செய்யவும், பயன்பாடுகளுக்கென்று வரையறுக்கப்பட்ட சில கூடுதல் கட்டளைகளை என்விடிஏ அளிக்கிறது.

7.1. மைக்ரோசாஃப்ட் எக்ஸெல்

பெயர் விசை விளக்கம்
செங்குத்து வரிசையின் தலைப்புகளை அமை என்விடிஏ+மாற்றழுத்தி+c இவ்விசையை ஒருமுறை அழுத்தினால், தற்போதைய கிடைவரிசைதான் செங்குத்து வரிசையின் தலைப்புகளை கொண்டுள்ளது என்பதை என்விடிஏவிற்கு தெரிவிக்கும். இவ்விசை அழுத்தப்பட்டப் பிறகு, இக்கிடைவரிசையின் கீழ் வரும் செங்குத்து வரிசைகளுக்கிடையே நகரும்பொழுது, செங்குத்து வரிசையின் தலைப்பு அறிவிக்கப்படும். இருமுறை அழுத்தினால், அமைப்புகள் தெளிவிக்கப்படும்.
கிடைவரிசையின் தலைப்புகளை அமை என்விடிஏ+மாற்றழுத்தி+r இவ்விசையை ஒருமுறை அழுத்தினால், தற்போதைய செங்குத்து வரிசைதான் கிடைவரிசையின் தலைப்புகளை கொண்டுள்ளது என்பதை என்விடிஏவிற்கு தெரிவிக்கும். இவ்விசை அழுத்தப்பட்டப் பிறகு, இந்த செங்குத்து வரிசைக்கு அடுத்து வரும் கிடைவரிசைகளுக்கிடையே நகரும்பொழுது, கிடைவரிசையின் தலைப்பு அறிவிக்கப்படும். இருமுறை அழுத்தினால், அமைப்புகள் தெளிவிக்கப்படும்.

7.2. மைக்ரோசாஃப்ட் பவர் பாய்ண்ட்

பெயர் விசை விளக்கம்
அறிவிப்பாளரின் குறிப்புகளின் படித்தலை மாற்றியமை கட்டுப்பாடு+மாற்றழுத்தி+s படவில்லை காட்சியில், அறிவிப்பாளரின் குறிப்புகள், படவில்லையின் மெய் உள்ளடக்கம் ஆகியவைகளுக்கிடையே அறிவிப்பை மாற்றியமைக்கிறது. திரையில் காணப்படுவதை இது மாற்றுவதில்லை. ஆனால், என்விடிஏவைக் கொண்டு ஒரு பயனர் எவைகளை படிக்கலாம் என்று வரையறுக்கிறது.

7.3. foobar2000

பெயர் விசை விளக்கம்
எஞ்சியுள்ள நேரத்தை அறிவி கட்டுப்பாடு+மாற்றழுத்தி+r ஏதேனும் ஒரு தடம் தற்போதைக்கு ஓடிக் கொண்டிருந்தால், அதன் எஞ்சியுள்ள நேரத்தை அறிவிக்கும்

குறிப்பு: எஞ்சியுள்ள நேரத்தை அறிவி குறுக்கு விசை, ஃபூபாரின் நிலைமைப்பட்டைக்கான இயல்பான வடிவூட்ட சரத்தில்தான் செயல்படும்.

7.4. Miranda IM

பெயர் விசை விளக்கம்
அண்மைய தகவலை அறிவி என்விடிஏ+கட்டுப்பாடு+1-4 அழுத்தப்பட்ட ெண்ணைப் பொருத்து, அண்மைய தகவல் ஒன்றினை அறிவிக்கும். எடுத்துக்காட்டாக, என்விடிஏ+கட்டுப்பாடு+2 விசையை அழுத்தினால், அண்மையில் வந்துள்ள இரண்டாம் தகவலை அறிவிக்கும்

7.5. Poedit

பெயர் விசை விளக்கம்
கருத்துரை சாளரத்தை அறிவிக்கவும் கட்டுப்பாடு+மாற்றழுத்தி+c கருத்துரை சாளரத்தில் கருத்துரை ஏதேனும் இருந்தால், அதை அறிவிக்கும்
மொழிபெயர்ப்பாளர்களுக்கான குறிப்புகளை அறிவிக்கவும் கட்டுப்பாடு+மாற்றழுத்தி+a மொழிபெயர்ப்பாளர்களுக்கான குறிப்புகள் ஏதேனும் இருந்தால், அதை அறிவிக்கும்

8. என்விடிஏவை அமைவடிவமாக்கல்

8.1. முதன்மை விருப்பங்கள்

என்விடிஏ பட்டியலில், முதன்மை விருப்பங்கள் உட்பட்டியலில் இருக்கும் அமைப்புகள் உரையாடல்களைக் கொண்டு என்விடிஏவின் அமைவடிவத்தை மாற்றி அமைக்கலாம். எல்லா அமைப்புகள் உரையாடல்களிலும், என்விடிஏவில் தாங்கள் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களை சேமிக்க, 'சரி' பொத்தானை அழுத்தவும். மாற்றங்களை சேமிக்காமல் வெளியேற, 'விலக்குக' பொத்தான், அல்லது விடுபடு விசையை அழுத்தவும். சில அமைப்புகளை குறுக்கு விசைகள் கொண்டும் மாற்றலாம். கீழ்வரும் உட்பிரிவுகளில், பொருத்தமான இடங்களில் குறுக்கு விசைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

8.1.1. பொது அமைப்புகள் (என்விடிஏ+கட்டுப்பாடு+g)

பொது அமைப்புகள் உரையாடலை, முதன்மை விருப்பங்கள் உட்பட்டியலில் காணலாம். இந்த உரையாடல் பெட்டி, பின்வரும் விருப்பத் தேர்வுகளைக் கொண்டுள்ளது:

மொழி

என்விடிஏவின் இடைமுகப்பு/தகவல் வழங்கும் மொழியைத் தேர்ந்தெடுக்கும் சேர்க்கைப் பெட்டி. பல மொழிகள் இருப்பினும், இயல்பில் இருப்பது "பயனர் இயல்பிருப்பு, விண்டோஸ்". இந்த விருப்பத் தேர்வு, என்விடிஏவை சாளர இயக்கமுறைமையின் இயல்பு மொழியைப் பயன்படுத்த அறிவுருத்தும்.

மொழியை மாற்றும்பொழுது, என்விடிஏ மறுதுவக்கப்பட வேண்டுமென்பதை கருணை கூர்ந்து கவனிக்கவும். மொழியை மாற்றி, 'சரி' பொத்தானை அழுத்தியவுடன், என்விடிஏ மறுதுவக்கப்பட வேண்டுமா என்று தானாகக் கேட்கப்படும். 'சரி' பொத்தானை அழுத்தவும். என்விடிஏ மறுதுவக்கப்படும்.

வெளியேறும்பொழுது அமைவடிவத்தை சேமிக்கவும்

இந்த விருப்பத் தேர்வு, ஒரு தேர்வுப் பெட்டியாகும். இதைத் தேர்வு செய்தால், வெளியேறும்பொழுது, அமைவடிவத்தை சேமி என்று என்விடிஏவிற்கு அறிவுறுத்தும்.

வெளியேறும் முன், எச்சரிக்கவும்

இந்த விருப்பத் தேர்வு, ஒரு தேர்வுப் பெட்டியாகும். இந்தத் தேர்வுப் பெட்டியை தேர்வு செய்தால், என்விடிஏவை விட்டு வெளியேறும்பொழுது, 'தாங்கள் என்விடிஏவை விட்டு கட்டாயம் வெளியேற வேண்டுமா?' என்று வினவி, ஒரு உரையாடல் பெட்டி தோன்றும்.

புகுபதிவு நிலை

என்விடிஏ செயல்பட்டு கொண்டிருக்கும்பொழுது, எந்த அளவு தகவலை செயற்குறிப்பேட்டில் சேமிக்க வேண்டும் என்று வரையறுக்கும் சேர்க்கைப் பெட்டியாகும். செயற்குறிப்பேட்டில் தகவல் குறிப்பிடும்படி சேமிக்கப்படாததால், பொதுவாகப் பயனர்கள் இதை மாற்றத் தேவையில்லை. ஆனால், என்விடிஏ மேம்படுத்துநர்களுக்கு, வழு குறித்த அறிக்கையை அளிக்க விரும்புவோர், இந்த அமைப்பை மாற்றி அமைக்க வேண்டும்.

சாளரத்தில் புகுபதிவு செய்தவுடன், என்விடிஏவை தானாக இயக்குக

இந்தத் தேர்வுப் பெட்டி, சாளரத்தில் புகுபதிவு செய்தவுடன், என்விடிஏவைத் தானாக இயக்க வேண்டுமா என்கிற விருப்பத் தேர்வை அளிக்கிறது. இந்த விருப்பத் தேர்வு, என்விடிஏ நிறுவி வகைப் படிகளிலேயே உள்ளது.

புகுபதிவு திரைகளில் என்விடிஏவைப் பயன்படுத்துக (இதற்கு நிர்வாகியின் சிறப்புரிமை தேவை)

சாளரத்தில் புகுபதிவு செய்ய, பயனர் பெயரையும், கடவுச்சொல்லையும் தாங்கள் பயன்படுத்தினால், இந்த விருப்பத் தேர்வு, புகுபதிவு சாளரத்தில் என்விடிஏவைப் பேச வைக்கும். இந்த விருப்பத் தேர்வு, என்விடிஏ நிறுவி வகைப் படிகளிலேயே உள்ளது.

சாளர புகுபதிவு, பிற பாதுகாப்பான திரைகளில் தற்போதைய அமைப்புகளைப் பயன்படுத்துக (இதற்கு நிர்வாகியின் சிறப்புரிமை தேவை)

இப்பொத்தானை அழுத்தினால், தற்போதைய அமைவடிவம், என்விடிஏவின் அடைவில் சேமிக்கப்பட்டு, சாளர புகுபதிவு, பயனர் கணக்கு கட்டுப்பாடு போன்ற பாதுகாப்பான சாளரங்களில் பயன்படுத்தப்படும். தங்களுடைய எல்லா அமைவடிவங்களும் அடைவிற்கு மாற்றப்படுவதை உறுதி செய்ய, முதலில், தங்களின் அமைவடிவத்தை என்விடிஏ+கட்டுப்பாடு+c விசைக் கட்டளை மூலமாகவோ, என்விடிஏ பட்டியலிலிருக்கும் 'அமைவடிவத்தை சேமிக்கவும்' உருப்படி மூலமாகவோ சேமிக்க வேண்டும். இந்த விருப்பத் தேர்வு, என்விடிஏ நிறுவி வகைப் படிகளிலேயே உள்ளது.

இற்றாக்கங்களுக்குத் தானாகத் துழாவுக

இந்தத் தேர்வுப் பெட்டியைத் தேர்வு செய்தால், என்விடிஏ, இற்றாக்கம் ஏதேனும் உள்ளதா என்றுத் தானாகத் துழாவி, அதை அறிவிக்கும். என்விடிஏ பட்டியலின் 'உதவி' உட்பட்டியலிளுள்ள 'இற்றாக்கத்திற்குத் துழாவுக' உருப்படியை சொடுக்குவதன் மூலமும் இற்றாக்கம் ஏதேனும் உள்ளதா என்று அறியலாம்.

8.1.2. ஒலிப்பான் தெரிவு (என்விடிஏ+கட்டுப்பாடு+s)

என்விடிஏ பயன்படுத்தும் ஒலிப்பானைத் தேர்ந்தெடுக்க, முதன்மை விருப்பங்கள் உட்பட்டியலில் இருக்கும் ஒலிப்பான் உரையாடலைத் தேர்ந்தெடுக்கவும். தாங்கள் விரும்பிய ஒலிப்பானைத் தேர்ந்தெடுத்தவுடன், 'சரி' பொத்தானை அழுத்தினால், அந்த ஒலிப்பானை என்விடிஏ ஏற்றும். ஒலிப்பானை ஏற்றுவதில் பிழை இருந்தால், என்விடிஏ அதை அறிவித்துவிட்டு, முந்தைய ஒலிப்பானையே தொடர்ந்துப் பயன்படுத்தும்.

ஒலிப்பான்

இந்த விருப்பத் தேர்வின் மூலம், என்விடிஏ, பேச்சு வெளியீட்டிற்கு பயன்படுத்த வேண்டிய ஒலிப்பானைத் தேர்ந்தெடுக்கலாம்.

என்விடிஏ ஆதரவளிக்கும் ஒலிப்பான்களின் பட்டியலைப் பற்றி அறிய, ஆதரவளிக்கப்படும் ஒலிப்பான்கள் உட்பிரிவைக் காணவும்.

'பேச்சில்லை' என்கிற உருப்படி, இந்த வரிசைப் பட்டியலில் தோன்றும் ஒரு சிறப்புக்கூறு. இதைத் தேர்ந்தெடுத்தால், எந்நிலையிலும், என்விடிஏவைப் பேச்சில்லாமல் இயக்கலாம். என்விடிஏவின் பிரெயில் காட்சியமைவைப் பயன்படுத்துபவர்களுக்கும், என்விடிஏவை உருவாக்கும் பார்வையுள்ளவர்களுக்கும் இந்த விருப்பத் தேர்வு பயன்படும்.

வெளியிடு கருவி

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒலிப்பான், எந்த ஒலி அட்டையின் மூலம் பேச வேண்டும்ென்று என்விடிஏவை அறிவுறுத்த, இந்த சேர்க்கைப் பெட்டி உதவுகிறது.

8.1.3. குரல் அமைப்புகள் (என்விடிஏ+கட்டுப்பாடு+v)

முதன்மை விருப்பங்கள் உட்பட்டியலில் இருக்கும் குரல் அமைப்புகள் உரையாடல், குரலின் ஒலியை மாற்றியமைக்கும் விருப்பத் தேர்வினைக் கொண்டுள்ளது. எங்கிருந்து வேண்டுமானாலும் என்விடிஏவின் பேச்சுக் குறியீடுகளை கட்டுப்படுத்தும் மாற்று வழியைப் பற்றி அறிய, ஒலிப்பான் அமைப்புகள் வளையம் பிரிவைக் காணவும்.

குரல் அமைப்புகள் உரையாடல் பெட்டியில், பின்வரும் விருப்பத் தேர்வுகள் உள்ளன:

குரல்

இவ்வுரையாடல் பெட்டியின் முதல் விருப்பத் தேர்வாக, தாங்கள் நிறுவியுள்ள ஒலிப்பானிலுள்ள குரல்களின் பட்டியலைக் கொண்ட சேர்க்கைப் பெட்டியை முதலில் அடைவீர்கள். அம்பு விசைகளைக் கொண்டு, பட்டியலில் உள்ள அனைத்து குரல்களையும் தாங்கள் கேட்கலாம். மேலம்பு, இடதம்பு விசைகலைப் பயன்படுத்தினால், வரிசைப் பட்டியலில் மேல்நோக்கி நகரலாம். கீழம்பு, வலதம்பு விசைகளைப் பயன்படுத்தினால், வரிசைப் பட்டியலில் கீழ்நோக்கி நகரலாம்.

குரல் மாற்றுரு

என்விடிஏவினுள் கட்டப்பட்டு வெளிவரும் [ஈஸ்பீக்] ஒலிப்பானைத் தாங்கள் பயன்படுத்துவதாக இருந்தால், இச்சேர்க்கைப் பெட்டியில் தோன்றும் குரலின் பல மாற்றுருகளிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். ஈஸ்பீக் குரல்களின் தன்மையில் சில மாறுதல்களை செய்துப் பேசுவதால், இக்குரல் மாற்றுருகளும் ஒரு வகையில் தனிப்பட்ட குரல்களே. சில குரல் மாற்றுருகள் ஆண் போலவும், சில பெண் போலவும், இன்னும் சில தவளைப் போலவும் பேசும்.

விகிதம்

இந்த விருப்பத் தேர்வு, தாங்கள் தேர்ந்தெடுத்துள்ள குரலின் வேகத்தை மாற்றியமைக்க உதவுகிறது. குரலின் வேகம், வழுக்கி கட்டுப்பாடு மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. வழுக்கியில், 0 மிகக் குறைந்த வேகத்தையும், 100 உட்சபட்ச வேகத்தையும் குறிக்கும்.

சுருதி

இந்த விருப்பத் தேர்வு, தற்போதைய குரலின் சுருதியை மாற்ற உதவுகிறது. குரலின் சுருதி, வழுக்கி கட்டுப்பாடு மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. வழுக்கியில், 0 மிகக் குறைந்த சுருதியையும், 100 உட்சபட்ச சுருதியையும் குறிக்கும்.

ஒலியளவு

இந்த விருப்பத் தேர்வு, ஒரு வழுக்கியாகும். வழுக்கியில், 0 மிகக் குறைந்த ஒலியளவையும், 100 உட்சபட்ச ஒலியளவையையும் குறிக்கும்.

குரல் ஏற்ற இறக்கம்

இந்த விருப்பத் தேர்வு, ஒரு வழுக்கியாகும். இவ்வழுக்கியைக் கொண்டு, ஒரு குரலின் ஏற்ற இறக்கத்தை வரையறுக்கலாம். தற்போதைக்கு, ஈஸ்பீக் ஒலிப்பான் மட்டுமே இதற்கு ஆதரவு தருகிறது.

தானாக ஒரு மொழிக்கு மாறும் வசதி

ஒரு உரையில் மொழிக் குறியீடு இருந்தால், இத்தேர்வுப் பெட்டியின் மூலம், என்விடிஏ படித்துக் கொண்டிருக்கையிலேயே, ஒலிப்பானின் மொழியை அம்மொழிக்கு மாற்றும் வசதியை இயக்கவோ, நிறுத்தவோ செய்யலாம். இயல்பில், இவ்வசதி இயக்கத்திலிருக்கும். தற்போதைக்கு, ஈஸ்பீக் ஒலிப்பான் மட்டுமே, ஒரு மொழிக்கு மாறும் வசதியை வழங்குகிறது.

ஒரு வட்டார மொழிக்கு மாறும் வசதி

ஒரு மொழிக்கு மாறும் வசதி இயக்கத்திலிருந்தால், இத்தேர்வுப் பெட்டியைத் தேர்ந்தெடுத்தவுடன், ஒரு மொழிக்குள் இருக்கும் வட்டார மாறுதலையும் கண்டுணர்ந்துப் படிக்கும். எடுத்துக்காட்டாக, ஆங்கில மொழியில் இருக்கும் இரு வட்டார மொழிகளான பிரிட்டிஷ் ஆங்கிலம், அமெரிக்க ஆங்கிலம் ஆகியவைகளை வேறுபடுத்திப் படிக்கும். இயல்பில், இவ்வசதி இயக்கத்திலிருக்காது.

நிறுத்தற்குறிகள்/குறியெழுத்துகளின் நிலை

விசை: என்விடிஏ+p

எந்த நிறுத்தற் குறி/குறியெழுத்து, எந்த நிலையில் சொற்களாகப் படிக்கப்பட வேண்டுமென்று இது வரையறுக்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு குறியெழுத்தின் நிலை 'அனைத்தும்' என்று வரையறுத்தால், அக்குறியெழுத்து எப்பொழுதும் சொல்லாகப் படிக்கப்படும். இந்த விருப்பத் தேர்வு, தற்போதைய ஒலிப்பானுக்கு மட்டுமல்லாமல், பிற ஒலிப்பான்களுக்கும் பொருந்தும்.

ஆங்கில முகப்பெழுத்திற்கான சுருதி மாற்று விழுக்காடு

ஆங்கில முகப்பெழுத்தைப் படிக்க, எந்த அளவு சுருதியை மாற்ற வேண்டுமென்று தாங்கள் கருதுகிறீர்களோ, அந்த மதிப்பை இந்த தொகு களத்தில் தட்டச்சிடவும். இதன் மதிப்பு விழுக்காட்டில் குறிக்கப்படுகிறது. சுழியத்திற்கு கீழிருக்கும் மதிப்பு, சுருதியைக் குறைக்கும், சுழியத்திற்கு மேலிருக்கும் மதிப்பு, சுருதியை மேலேற்றும். சுருதியில் மாற்றம் தேவையில்லையென்றால், 0 எண்ணைத் தட்டச்சிடவும்.

ஆங்கில முகப்பெழுத்துகளுக்கு முன் cap என்று சொல்க

இந்தத் தேர்வுப் பெட்டியை தேர்வு செய்தால், ஆங்கில உரைகளை எழுத்துகளாக படிக்கும் தருணங்களில், முகப்பெழுத்துகள் எதிர்பட்டால், என்விடிஏ 'cap' என்று சொல்லியப் பிறகுதான், அவ்வெழுத்தைப் படிக்கும். ஆங்கில முகப்பெழுத்துகளைப் என்விடிஏ படிக்கும்பொழுது, சுருதியை சற்றே மேலேற்றிப் படிக்கும். ஆனால், சில ஒலிப்பான்கள், இந்த வசதியை சரிவர ஆதரிப்பதில்லை.

ஆங்கில முகப்பெழுத்துகளுக்கு சிற்றொலியை எழுப்புக

இந்தத் தேர்வுப் பெட்டியை தேர்வு செய்தால், ஆங்கில உரைகளை எழுத்துகளாகப் படிக்கும் தருணங்களில், முகப்பெழுத்துகளைப் படிக்கும்பொழுது என்விடிஏ ஒரு சிற்றொலியை எழுப்பும். ஆங்கில எழுத்துகளுக்கு முன் 'cap' என்று சொல் என்கிற அமைப்பை ஆதரிக்காத ஒலிப்பான்களைப் பயன்படுத்தும்பொழுது, இந்த விருப்பத் தேர்வு பயன்படும்.

எழுத்துகளாக படிக்கும் வசதியிருந்தால், அதைப் பயன்படுத்துக

சில சொற்கள், வெறும் ஒற்றை எழுத்தை மட்டுமே கொண்டிருக்கும். இத்தகைய சொற்களின் பலுக்கல், அவ்வெழுத்து, பிற சொற்களின் ஒரு பகுதியாக இருக்கும்பொழுது, அது ஒலிக்கப்படும் விதத்திலிருந்து மாறுபடும். எடுத்துக்காட்டாக, ஆங்கில எழுத்து 'a', ஒரு தனிச் சொல்லாகவும், சொல்லின் ஒரு எழுத்தாகவும் வருகிறது. ஒலிப்பான் ஆதரித்தால், இந்தத் தேர்வுப் பெட்டி, இந்த இரு வகைகளையும் வேறுபடுத்திப் படிக்க உதவுகிறது. பொதுவில், எல்லா ஒலிப்பான்களும், இதை ஆதரிக்கின்றன.

பொதுவாக, இந்த விருப்பத் தேர்வு, தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சில மைக்ரோசாப்ட் SAPI ஒலிப்பான்கள், இதை சரிவர செயல்படுத்த முடிவதில்லையென்பதால், இந்த விருப்பத் தேர்வைத் தேர்ந்தெடுத்தால், அவ்வொலிப்பான்கள் விநோதமாக செயற்படும். ஒற்றை எழுத்துகளின் பலுக்கலில் பிழையிருந்தால், இத்தேர்வுப் பெட்டியின் தேர்வை நீக்கிவிடுங்கள்.

8.1.4. ஒலிப்பான் அமைப்புகள் வளையம்

என்விடிஏ இயக்கத்திலிருக்கும்பொழுது, குரல் அமைப்புகள் உரையாடலுக்குச் செல்லாமல், இருக்குமிடத்திலிருந்து குரல் அமைப்புகளை மாற்றியமைக்க, என்விடிஏ சில கட்டளை விசைகளைக் கொடுக்கிறது.

பெயர் மேசைக்கணினி விசை மடிக்கணினி விசை விளக்கம்
அடுத்த ஒலிப்பான் அமைப்பிற்கு நகர் என்விடிஏ+கட்டுப்பாடு+வலதம்பு என்விடிஏ+கட்டுப்பாடு+மாற்றழுத்தி+வலதம்பு தற்போதைய அமைப்பிற்கு அடுத்ததாக இருக்கும் பேச்சமைப்பிற்கு நகரும். கடைசி அமைப்பை அடைந்தவுடன், மீண்டும் முதல் அமைப்பிற்கு வந்து சேரும்
முந்தைய ஒலிப்பான் அமைப்பிற்கு நகர் என்விடிஏ+கட்டுப்பாடு+இடதம்பு என்விடிஏ+கட்டுப்பாடு+மாற்றழுத்தி+இடதம்பு தற்போதைய அமைப்பிற்கு முந்தையதாக இருக்கும் பேச்சமைப்பிற்கு நகரும். முதல் அமைப்பை அடைந்தவுடன், மீண்டும் கடைசி அமைப்பிற்கு வந்து சேரும்
தற்போதைய அமைப்பைக் கூட்டு என்விடிஏ+கட்டுப்பாடு+மேலம்பு என்விடிஏ+கட்டுப்பாடு+மாற்றழுத்தி+மேலம்பு தற்போதைய பேச்சமைப்பை என்விடிஏ கூட்டும். எடுத்துக்காட்டாக, விகிதத்தை கூட்டுதல், அடுத்த குரலுக்குச் செல்லுதல், ஒலியளவைக் கூட்டுதல் ஆகியவைகளைக் கூறலாம்
தற்போதைய அமைப்பைக் குறை என்விடிஏ+கட்டுப்பாடு+கீழம்பு என்விடிஏ+கட்டுப்பாடு+மாற்றழுத்தி+கீழம்பு தற்போதைய பேச்சமைப்பை என்விடிஏ குறைக்கும். எடுத்துக்காட்டாக, விகிதத்தை குறைத்தல், முந்தைய குரலுக்குச் செல்லுதல், ஒலியளவைக் குறைத்தல் ஆகியவைகளைக் கூறலாம்

8.1.5. பிரெயில் அமைப்புகள்

பிரெயில் அமைப்புகள் உரையாடலை இயக்க, முதன்மை விருப்பங்கள் உட்பட்டியலுக்குள் சென்று, பிரெயில் அமைப்புகள் மீது உள்ளிடு விசையை அழுத்தவும்.

பிரெயில் காட்சியமைவு

பிரெயில் அமைப்புகள் உரையாடல் பெட்டியில், தாங்கள் முதலாவதாக எதிர்கொள்ளும் விருப்பத் தேர்வு, 'பிரெயில் காட்சியமைவு' என்கிற சேர்க்கைப் பெட்டியாகும். தங்கள் கணினியில் எந்த பிரெயில் இயக்கிகள் இருக்கின்றன என்பதைக் கருத்தில் கொண்டு, பல விருப்பத் தேர்வுகள், முன் வைக்கப்படும். அம்பு விசைகளைக் கொண்டு, இந்த விருப்பத் தேர்வுகளுக்கிடையே நகரவும்.

'பிரெயில் ஏதுமில்லை' என்றால், தாங்கள் பிரெயிலைப் பயன்படுத்துவதில்லை என்று பொருள்.

பிரெயில் காட்சியமைவுகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள, ஆதரவளிக்கப்படும் பிரெயில் காட்சியமைவுகள் பிரிவைக் காணவும்.

நுழைவாயில்

இந்த விருப்பத் தேர்வு இருக்கும்பட்சத்தில், தாங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் பிரெயில் காட்சியமைவுடன் தகவல் பரிமாற்றம் செய்ய, எந்த நுழைவாயில், அல்லது தொடர்பை பயன்படுத்த வேண்டும் என்று தீர்மானிக்க அது உதவும். இது, தங்களின் பிரெயில் காட்சியமைவிற்கான இயன்ற தேர்வுகளைக் கொண்டிருக்கும் சேர்க்கைப் பெட்டியாகும்.

இயல்பில், கணினியில் இருக்கும் நுழைவாயில்களை என்விடிஏ தானாகக்் கண்டறியும். அதாவது, கணினியில் இருக்கக் கூடிய யுஎஸ்பி, அல்லது இழையிலா பரிமாற்றியைக் கண்டறிந்து, அதன் மூலம் பிரெயில் காட்சியமைவுடன் தொடர்பை ஏற்படுத்தும். ஆனால், சில பிரெயில் காட்சியமைவுகளுக்கு, பயன்படுத்தத்தக்க நுழைவாயிலை தாங்கள் தேர்வு செய்யக் கூடியதாக இருக்கும். தன்னியக்கம், யுஎஸ்பி, இழையிலா பரிமாற்றி ஆகியவைகள் பொதுவான விருப்பத் தேர்வுகளாகும். தன்னியக்கம் என்றால், நுழைவாயிலை தானாகக் கண்டறியும் முறைமையை என்விடிஏ பயன்படுத்தும். மேலும், தங்கள் பிரெயில் காட்சியமைவு, லெகசி தொடர் தகவல் நுழைவாயிலுக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில், அதுவும் ஒரு விருப்பத் தேர்வாக அமையும்.

தங்களின் பிரெயில் காட்சியமைவு, நுழைவாயிலைத் தானாகக் கண்டறியும் வசதியை மட்டும் கொண்டிருந்தால், இவ்விருப்பத் தேர்வு காணப்பட மாட்டாது.

ஆதரவளிக்கப்படும் தகவல் பரிமாற்றங்கள், நுழைவாயில்கள் குறித்து மேலும் அறிய, ஆதரவளிக்கப்படும் பிரெயில் காட்சியமைவுகள் பகுதியில் காணப்படும் ஆவணத்தைக் காணவும்.

வெளியீடு அட்டவணை

அடுத்ததாக தாங்கள் எதிர்கொள்ளும் விருப்பத் தேர்வு, 'வெளியீடு அட்டவணை' சேர்க்கைப் பெட்டியாகும். இந்த சேர்க்கைப் பெட்டியில், பிரெயில் அட்டவணைகள், பிரெயில் செந்தரங்கள், நிலைகள் ஆகியவைகளைக் காணலாம். தங்களின் பிரெயில் காட்சியமைவில், உரையை மொழிபெயர்க்க, தேர்வு செய்யப்படும் அட்டவணை பயன்படுத்தப்படும். வரிசைப் பட்டியலில் இருக்கும் பிரெயில் அட்டவணைகளுக்கிடையே நகர, அம்பு விசைகளை பயன்படுத்தவும்.

உள்ளீடு அட்டவணை

முந்தைய விருப்பத் தேர்வினை நிறைவு செய்வதுபோல் அமைந்திருக்கும் 'உள்ளீடு அட்டவணை', தாங்கள் அடுத்ததாக காணும் சேர்க்கைப் பெட்டியாகும். தங்களின் பிரெயில் காட்சியமைவின் பெர்க்கின்ஸ் வகை விசைப் பலகை மூலம் உள்ளிடப்படும் பிரெயில் உள்ளீடுகள், உரைக்கு மொழிபெயர்க்கப்பட, தேர்வு செய்யப்படும் அட்டவணை பயன்படுத்தப்படும். தற்போதைக்கு கணினி பிரெயில் உள்ளீடுகளை மட்டுமே என்விடிஏ ஆதரிப்பதால், எட்டு புள்ளி பிரெயில் அட்டவணைகள் மட்டுமே காண்பிக்கப்படும். வரிசைப் பட்டியலில் இருக்கும் பிரெயில் அட்டவணைகளுக்கிடையே நகர, அம்பு விசைகளை பயன்படுத்தவும்.

தங்களின் பிரெயில் காட்சியமைவில் பெர்க்கின்ஸ் வகை விசைப் பலகை இருந்து, பிரெயில் காட்சியமைவின் இயக்கி அதனை ஆதரித்தால் மட்டுமே, இந்த விருப்பத் தேர்வு பயன்படும். காட்சியமைவில் பிரெயில் விசைப் பலகை இருந்தபோதிலும், உள்ளீடு ஆதரிக்கப்படாமல் இருந்தால், அதுகுறித்து ஆதரவளிக்கப்படும் பிரெயில் காட்சியமைவுகள் பிரிவில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

சுட்டியினிடத்திலிருக்கும் சொல்லுக்கு கணினி பிரெயிலைக் காண்பிக்கவும்

இந்தத் தேர்வுப் பெட்டியை தேர்வு செய்தால், சுட்டியின் கீழிருக்கும் சொல்லிற்கு, குறுக்கப்படாதக் கணினி பிரெயிலைக் காண்பிக்கும்.

சுட்டி இமைக்கும் விகிதம்

இந்த விருப்பத் தேர்வு, ஒரு எண் களமாகும். சுட்டி இமைக்கும் விகிதத்தை நுண்ணொடிகளின் கணக்கில் மாற்றியமைக்கலாம்.

தகவல் காட்சியளிக்கும் நேரம்

இந்த விருப்பத் தேர்வு, ஒரு எண் களமாகும். என்விடிஏவின் தகவல்கள், பிரெயில் காட்சியமைவில் எத்தனை நொடிகள் காட்டப்பட வேண்டுமென்று, இந்தக் களத்தில் குறிப்பிடலாம். 0 என்றுக் குறிப்பிட்டால், இத்தகவல்கள் காட்டப்படுவது முழுவதுமாக செயலிழக்கும்.

பிரெயில் இதனுடன் கட்டப்பட்டுள்ளது

விசை: என்விடிஏ+கட்டுப்பாடு+t

இந்த விருப்பத் தேர்வு, பிரெயில் காட்சியமைவு, கணினிக் குவிமையத்தைப் பின்தொடர வேண்டுமா, அல்லது வழிகாட்டிப் பொருள்/மறுபரிசீலனைச் சுட்டியைப் பின்தொடர வேண்டுமா என்று தீர்மானிக்க உதவுகிறது.

பத்தியாகப் படிக்கவும்

இந்தத் தேர்வுப் பெட்டியைத் தேர்வு செய்தால், பிரெயில், வரியாக அல்லாமல், பத்தியாக காட்டப்படும். மேலும், அடுத்த/முந்தைய வரி நகர்வு கட்டளைகள், பிரெயில் காட்சியமைவை அடுத்த/முந்தைய பத்திக்கு நகர்த்தும். இதனால், ஒவ்வொரு வரியின் இறுதியிலும் பிரெயில் காட்சியமைவை அடுத்த வரிக்கு நகர்த்தும் தேவையை நீக்குகிறது. இது, பெருமளவு உரைகளை எளிதாக படிக்க உதவுகிறது. இயல்பில், இந்த வசதி இயக்கத்தில் இருக்காது.

8.1.6. விசைப்பலகை அமைப்புகள் (என்விடிஏ+கட்டுப்பாடு+k)

விசைப்பலகை அமைப்புகள் உரையாடல் பெட்டி, முதன்மை விருப்பங்கள் உட்பட்டியலின் கீழ் உள்ளது. இது, கீழ்வரும் விருப்பத் தேர்வுகளைக் கொண்டுள்ளது:

விசைப்பலகை வரைவு

என்விடிஏ, எந்த விசைப்பலகை வரைவைப் பயன்படுத்த வேண்டுமென்று தீர்மானிக்க, இந்த சேர்க்கைப் பெட்டி உதவுகிறது. தற்போது, மேசைக்கணினி, மடிக்கணினி ஆகிய இரு வரைவுகளைக் கொண்டு என்விடிஏ வெளிவருகிறது.

முகப்பெழுத்துப் பூட்டு விசையை என்விடிஏ மாற்று விசையாகப் பயன்படுத்துக

இந்தத் தேர்வுப் பெட்டியை தேர்வு செய்தால், முகப்பெழுத்துப் பூட்டு விசையை, என்விடிஏ மாற்று விசையாகப் பயன்படுத்தலாம்.

முதன்மை செருகு விசையை என்விடிஏ மாற்று விசையாகப் பயன்படுத்துக

இந்தத் தேர்வுப் பெட்டியை தேர்வு செய்தால், அம்பு விசைகளுக்கு மேல் காணப்படும் முதன்மை செருகு விசையை, என்விடிஏ மாற்று விசையாகப் பயன்படுத்தலாம்.

=== எண் திட்டு செருகு விசையை என்விடிஏ மாற்று விசையாகப் பயன்படுத்துக ==== இந்தத் தேர்வுப் பெட்டியை தேர்வு செய்தால், எண் திட்டில் இருக்கும் செருகு விசையை, என்விடிஏ மாற்று விசையாகப் பயன்படுத்தலாம்.

எந்த ஒரு விசையும் என்விடிஏ விசையாக தேர்ந்தெடுக்கப்படாதிருந்தால், குறிப்பிட்ட சில என்விடிஏ கட்டளைகளை அணுக இயலாமல் போகலாம். ஆகவே, எல்லா விசைகளும் தேர்வாகாதிருக்கும் பொழுது, 'சரி' பொத்தானை அழுத்தினால், விசைப் பலகை அமைப்புகள் உரையாடல் ஒரு பிழைத் தகவலை காண்பிக்கும். பிழைத் தகவலை விலக்கிவிட்டு, குறைந்தபட்சம் ஒரு விசையை தேர்ந்தெடுத்தப் பின்னரே, விசைப் பலகை அமைப்புகள் உரையாடலை 'சரி' பொத்தானை அழுத்தி மூட இயலும்.

தட்டச்சிடப்பட்ட வரியுருக்களை பேசுக

விசை: என்விடிஏ+2

இந்தத் தேர்வுப் பெட்டியை தேர்வு செய்தால், தட்டச்சிடப்படும் எல்லா வரியுருக்களையும் என்விடிஏ அறிவிக்கும்.

தட்டச்சிடப்பட்ட சொற்களை பேசுக

விசை: என்விடிஏ+3

இந்தத் தேர்வுப் பெட்டியை தேர்வு செய்தால், தட்டச்சிடப்படும் எல்லா சொற்களையும் என்விடிஏ அறிவிக்கும்.

வரியுருக்கள் தட்டச்சிடப்பட்டால் பேச்சை இடைநிறுத்துக

இந்தத் தேர்வுப் பெட்டி தேர்வாகியிருந்தால், ஒரு வரியுரு ஒவ்வொரு முறையும் தட்டச்சிடப்படும்பொழுது, பேச்சு இடைநிறுத்தப்படும். இயல்பில், இந்தத் தேர்வுப் பெட்டி தேர்வாகியிருக்கும்.

உள்ளிடு விசை அழுத்தப்பட்டால் பேச்சை இடைநிறுத்துக

இந்தத் தேர்வுப் பெட்டி தேர்வாகியிருந்தால், உள்ளிடு விசை ஒவ்வொரு முறையும் அழுத்தப்படும்பொழுது, பேச்சு இடைநிறுத்தப்படும். இயல்பில், இந்தத் தேர்வுப் பெட்டி தேர்வாகியிருக்கும்.

எல்லாம் படிக்கும்பொழுது மேலோட்டப் படித்தலை அனுமதிக்கவும்

இந்தத் தேர்வுப் பெட்டி தேர்வாகியிருந்தால், உலாவும் நிலையில் பயன்படுத்தப்படும் கட்டளைகளை, அல்லது அடுத்த வரி, அடுத்த பத்திக்கு செல்ல பயன்படுத்தப்படும் கட்டளைகளை இயக்கும் பொழுது, எல்லாம் படித்தலை நிறுத்தாமல், புதிய நிலைக்கு தாவி, எல்லாம் படித்தலைத் தொடரும்.

முகப்பெழுத்துப் பூட்டப்பட்டிருக்கும்பொழுது, கீழ்தட்டு விசையை அழுத்தினால், சிற்றொலியை எழுப்புக
இந்தத் தேர்வுப் பெட்டியை தேர்வு செய்தால், முகப்பெழுத்துப் பூட்டு இடப்பட்டிருக்கும்பொழுது, முகப்பெழுத்துகளைத் தட்டச்சிட தவறுதலாக மாற்றழுத்தி விசையை அழுத்தினால், என்விடிஏ சிற்றொலியை எழுப்பும்.

முகப்பெழுத்துப் பூட்டு இடப்பட்டிருக்கும்பொழுது, முகப்பெழுத்தைத் தட்டச்சிட, மாற்றழுத்தி விசையை அழுத்தத் தேவையில்லை. முகப்பெழுத்துப் பூட்டு இடப்பட்டிருக்கிறது என்பதை அறியாததுதான், இந்தத் தவறுதலுக்குக் காரணம். ஆகவே, இதுபோன்று தவறு செய்யும் தருணங்களில், என்விடிஏ எச்சரிப்பது மிகவும் தேவையானதாகும்.

கட்டளை விசைகளைப் பேசுக

விசை: என்விடிஏ+4

இந்தத் தேர்வுப் பெட்டியை தேர்வு செய்தால், கட்டுப்பாடு விசையுடன் அழுத்தப்படும் கட்டளை விசைகள் உட்பட, வரியுருக்கள் அல்லாத விசை உள்ளீடுகளும் படிக்கப்படும்.

8.1.7. சொடுக்கி அமைப்புகள் (என்விடிஏ+கட்டுப்பாடு+m)

சொடுக்கி அமைப்புகள் உரையாடல், முதன்மை விருப்பங்கள் உட்பட்டியலில் உள்ளது. இது, கீழ்க்கண்ட விருப்பத் தேர்வுகளைக் கொண்டுள்ளது:

சொடுக்கியின் உருவ மாற்றங்களை அறிவிக்கவும்

இந்தத் தேர்வுப் பெட்டியை தேர்வு செய்தால், சொடுக்கியின் குறிமுள், ஒவ்வொரு முறை உருவம் மாறும்பொழுதும், என்விடிஏ அறிவிக்கும். சாளரத்தில், தொகுக்கப்படும் வகையில் ஏதேனும் உள்ளதா, அல்லது ஏதேனும் ஏற்றப்படுகிறதா போன்ற தகவல்களை அறிவிக்க, சொடுக்கியின் உருவம் மாறும்.

சொடுக்கியின் பின்தொடருதலை இயங்கச்செய்க

விசை: என்விடிஏ+m

இந்தத் தேர்வுப் பெட்டியை தேர்வு செய்தால், கணினித் திரையில், சொடுக்கியின் குறிமுள்ளை நகர்த்தும்பொழுது, குறிமுள்ளின் கீழிருக்கும் உரை படிக்கப்படும். பொருள் வழிநடத்தலைப் பயன்படுத்தாமல், சொடுக்கியைப் பயன்படுத்தும்பொழுது, இது உதவும்.

உரைத் தொகுதியின் துல்லியம்

சொடுக்கியின் பின்தொடருதல் இயக்கத்தில் இருக்கும்பொழுது, இந்த விருப்பத் தேர்வு, எந்த அளவு துல்லியத்துடன் உரை படிக்கப்பட வேண்டுமென்று வரையறுக்க உதவுகிறது. வரியுரு, சொல், வரி, பத்தி ஆகியவைகளே அந்த விருப்பத் தேர்வுகளாகும்.

சொடுக்கி, ஒரு பொருளின் ஊடாக நுழையும்பொழுது அப்பொருளின் வகையை அறிவிக்கவும்

இந்தத் தேர்வுப் பெட்டியை தேர்வு செய்தால், ஒரு பொருளின் ஊடாக சொடுக்கி நகரும்பொழுது, அப்பொருளின் வகையை அறிவிக்கும்.

சொடுக்கி நகரும்பொழுது ஒலி இசைவுகளை இயக்குக

இந்தத் தேர்வுப் பெட்டியை தேர்வு செய்தால், சொடுக்கியின் குறிமுள் நகரும்பொழுது, என்விடிஏ சிற்றொலிகளை எழுப்பும். திரையின் பரிமாணத்தை ஒப்புநோக்கி, குறிமுள் எங்கிருக்கிறது என்றறிய, இது உதவும்.

ஒலி இசைவுகலின் ஒலியளவை ஒளிர்வுக் கட்டுப்படுத்துகிறது

சொடுக்கி நகரும்பொழுது ஒலி இசைவுகளை இயக்கு தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருந்து, இந்தத் தேர்வுப் பெட்டியையும் தேர்வு செய்தால், குறிமுள்ளின் கீழிருக்கும் திரையின் ஒளிர்வு, சிற்றொலிகளின் ஒலியளவைக் கட்டுப்படுத்தும். இயல்பில், இந்தத் தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருக்காது.

8.1.8. மறுபரிசீலனைச் சுட்டி அமைப்புகள்

இந்த உரையாடல் பெட்டி, முதன்மை விருப்பங்கள் உட்பட்டியலில் உள்ளது. கீழ்வரும் விருப்பத் தேர்வுகள், இந்த உரையாடல் பெட்டியில் உள்ளன:

கணினிக் குவிமையத்தை பின்தொடர்க

விசை: என்விடிஏ+7

இந்தத் தேர்வுப் பெட்டியை தேர்வு செய்தால், கணினிக் குவிமையத்திலிருக்கும் பொருளின் மீது மறுபரிசீலனைச் சுட்டியும் வைக்கப்படும். குவிமையத்தின் பொருள் மாறும்பொழுதெல்லாம், மறுபரிசீலனைச் சுட்டியும் உடன் நகரும்.

கணினிச் சுட்டியைப் பின்தொடர்க

விசை: என்விடிஏ+6

இந்தத் தேர்வுப் பெட்டியை தேர்வு செய்தால், கணினிச் சுட்டி இருக்குமிடத்தில் மறுபரிசீலனைச் சுட்டியும் வைக்கப்படும். கணினிச் சுட்டி நகரும்பொழுது, மறுபரிசீலனைச் சுட்டியும் உடன் நகரும்.

சொடுக்கியைப் பின்தொடர்க

இந்தத் தேர்வுப் பெட்டியை தேர்வு செய்தால், மறுபரிசீலனைச் சுட்டி, சொடுக்கியின் குறிமுள்ளைப் பின்தொடரும்.

எளிய மறுபரிசீலனை நிலை

இந்தத் தேர்வுப் பெட்டியை தேர்வு செய்தால், பொருட்களின் அடுக்குகளில் இருக்கும் தென்படாத பொருட்கள், வரைவிற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கும் பொருட்கள் போன்ற பயனர்களுக்குத் தேவைப்படாத பொருட்களை என்விடிஏ வடிகட்டி விலக்கும்.

8.1.9. பொருளளிக்கை அமைப்புகள் (என்விடிஏ+கட்டுப்பாடு+o)

இந்த உரையாடல் பெட்டி, முதன்மை விருப்பங்கள் உட்பட்டியலில் உள்ளது. பின்வரும் விருப்பத் தேர்வுகளை, இந்த உரையாடல் பெட்டியில் காணலாம்:

கருவித் துணுக்குதவிகளை அறிவிக்கவும்

இந்தத் தேர்வுப் பெட்டியை தேர்வு செய்தால், கருவித் துணுக்குதவிகள் தோன்றும்பொழுது, அவைகளைப் படிக்கும். பல சாளரங்கள், கட்டுப்பாடுகள் மீது சொடுக்கியின் குறிமுள், அல்லது குவிமையத்தை நகர்த்தும்பொழுது, அவை சில தகவல்களை/கருவித் துணுக்குதவிகளைக் காண்பிக்கும்.

உதவிக்குமிழிகளை அறிவிக்கவும்

இந்தத் தேர்வுப் பெட்டியை தேர்வு செய்தால், திரைகளில் தோன்றும் உதவிக்குமிழிகளை அறிவிக்கும். உதவிக்குமிழிகள், கருவித் துணுக்குதவிகளைப் போன்றதாகும். ஆனால், இது உருவத்தில் பெரியதாகவும், கணினியில் ஏற்படும் செயல் மாற்றங்களை அறிவிப்பதாகவும் இருக்கும். எடுத்துக்காட்டாக, பிணையத்தின் இணைப்புத் துண்டிக்கப்பட்டிருத்தல், சாளர பாதுகாப்புக் குறித்த தகவல் ஆகியவைகளைக் கூறலாம்.

பொருளின் குறுக்கு விசைகளை அறிவிக்கவும்

இந்தத் தேர்வுப் பெட்டியை தேர்வு செய்தால், ஒரு பொருள் மீது நகரும்பொழுது, அப்பொருளுக்கான குறுக்கு விசை ஏதுமிருந்தால், என்விடிஏ அதை அறிவிக்கும். எடுத்துக்காட்டாக, கிடநீளப் பட்டியலில் இருக்கும் 'ஃபைல்' உருப்படி, நிலைமாற்றி+f என்கிற குறுக்கு விசையைக் கொண்டிருக்கும்.

பொருள் நிலையின் தகவலை அறிவிக்கவும்

இந்தத் தேர்வுப் பெட்டியை தேர்வு செய்தால், பொருள் வழிகாட்டியுடன் நகரும்பொழுது, ஒரு பொருளின் நிலையை அறிவிக்கும். எடுத்துக்காட்டாக, வரிசைப் பட்டியலில், ஒரு உருப்படியின் நிலையை 1, மொத்தம் 4 என்ரு அறிவிப்பதைக் கூறலாம்.

பொருள் நிலையின் தகவல் இல்லாதபொழுது, அதை ஊகிக்கவும்

'பொருள் நிலையின் தகவலை அறிவி' தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருந்து, சில கட்டுப்பாடுகளில் பொருளின் நிலை இல்லாதபொழுது, இந்த விருப்பத் தேர்வு அதை ஊகிக்கும்.

இந்த வசதி, பட்டியல், கருவிப்பட்டை போன்ற பல கட்டுப்பாடுகளில் செயற்பட்டாலும், அறிவிக்கப்படும் பொருள் நிலையின் தகவல் துல்லியமாக இருக்காது.

பொருள் விளக்கங்களை அறிவிக்கவும்

பொருட்களின் மீது என்விடிஏ நகரும்பொழுது, அப்பொருட்களின் விளக்கத்தை என்விடிஏ அறிவிக்க வேண்டாமென்றுத் தாங்கள் கருதினால், இந்தத் தேர்வுப் பெட்டியின் தேர்வை நீக்கிவிடவும்.

முன்னேற்றப் பட்டையின் வெளியீடு

விசை: என்விடிஏ+u

இந்த விருப்பத் தேர்வு, முன்னேற்றப் பட்டையின் இற்றாக்கங்களை எவ்வாறு அறிவிக்க வேண்டுமென்று கட்டுப்படுத்துகிறது.

இது, பின்வரும் விருப்பத் தேர்வுகளைக் கொண்டிருக்கிறது:

பின்னணி முன்னேற்றப்பட்டைகளின் இயக்கத்தை அறிவிக்கவும்

இந்தத் தேர்வுப் பெட்டியை தேர்வு செய்தால், திரையின் முன்னணியில் இல்லாத முன்னேற்றப் பட்டைகளின் இற்றாக்கங்களை அறிவிக்கும். முன்னேற்றப் பட்டையைக் கொண்டுள்ள ஒரு சாளரத்தைத் தாங்கள் குறுக்க, அல்லது விட்டு விலக நேர்ந்தால், என்விடிஏ அந்த சாளரத்தை கவனத்தில் வைத்துக் கொண்டு, முன்னேற்றப் பட்டையின் இற்றாக்கங்களை அறிவிக்கும்.

இயங்குநிலை உள்ளடக்க மாற்றங்களை அறிவிக்கவும்

விசை: என்விடிஏ+5

முனையம், அரட்டை நிரலிகளின் வரலாறு போன்ற குறிப்பிட்ட பொருட்களில் தோன்றும் புதிய உள்ளடக்கங்களை என்விடிஏ பேசுவதை இயக்கவோ, நிறுத்தவோ செய்கிறது.

8.1.10. உள்ளீடு இயற்றல் அமைப்புகள்

உள்ளீடு இயற்றல் அமைப்புகள், என்விடிஏ பட்டியலிலுள்ள முதன்மை விருப்பங்கள் உட்பட்டியலில் காணப்படுகிறது. ஐ.எம்.இ., அல்லது உரைத் தொண்டு உள்ளீடு முறைக் கொண்டு ஆசிய எழுத்துகளை உள்ளீடு செய்யும்பொழுது, என்விடிஏ இவ்வுள்ளீடுகளை எவ்வாறு அறிவிக்கிறது எந்பதனை உள்ளீடு இயற்றல் அமைப்புகள் கட்டுப்படுத்துகிறது. உள்ளீடு முறைகளின் அம்சங்களும், தகவல்களை அவைகள் அறிவிக்கும் முறையும் மிகவும் வேறுபடுவதால், சிறப்பான தட்டச்சு அனுபவத்தைப் பெற, அனேகமாக ஒவ்வொரு உள்ளீடு முறைக்கான விருப்பத்தேர்வுகளையும் தனித் தனியே அமைவடிவமாக்க வேண்டியிருக்கும் என்பதை கவனிக்கவும்.

இருக்கும் எல்லா பரிந்துரை எழுத்துகளையும் தானாக அறிவிக்கவும்

இயல்பில் தேர்வாகியிருக்கும் இந்தத் தேர்வுப் பெட்டி, ஒரு பரிந்துரை எழுத்துகள் உரையாடல் பெட்டி தோன்றும்பொழுது, அல்லது அதன் பக்கம் மாற்றப்படும்பொழுது, பார்வையில் இருக்கும் எல்லா பரிந்துரை எழுத்துகளையும் தானாக அறிவிக்க வேண்டுமா என்று தீர்மானிக்க உதவுகிறது. இந்தத் தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருந்தால், புதிய சீன சான்ஜாய், பாஷ்யமி போன்ற வரைகலை உள்ளீடு முறையை பயன்படுத்தும்பொழுது, எல்லா குறியீடுகளும், அதன் எண்களும் தானாக அறிவிக்கப்படும். ஒரு எழுத்தினை தாங்கள் எளிதில் தேர்வு செய்துக் கொள்ள இது பயன்படுகிறது. ஆனால், புதிய சீன ஃபொனடிக் போன்ற ஒலிப்பு முறை சார்ந்த உள்ளீடு முறையை பயன்படுத்தும்பொழுது, இந்தத் தேர்வுப் பெட்டியின் தேர்வினை நீக்கிவிடவும். இவ்வுள்ளீட்டு முறையில் எல்லா குறியீடுகளும் ஒன்றுப் போலவே ஒலிப்பதால், அம்பு விசைகளை பயன்படுத்தி, ஒவ்வொரு எழுத்திற்கும் நகர்ந்து அதன் எழுத்து விளக்கங்களைக் கொண்டு தேவைப்படும் எழுத்தினை தேர்வு செய்துக் கொள்ளவும்.

தெரிவாகியுள்ள பரிந்துரை எழுத்தினை அறிவி

இயல்பில் தேர்வாகியிருக்கும் இந்தத் தேர்வுப் பெட்டி, தோன்றும் பரிந்துரை எழுத்துகள் பட்டியலில் தெரிவாகியிருக்கும் எழுத்தினை, அல்லது தெரிவு மாறும்பொழுது, புதிதாக தெரிவாகியிருக்கும் எழுத்தினை அறிவிக்க வேண்டுமா என்று தீர்மானிக்க உதவுகிறது. அம்பு விசைகளைக் கொண்டு தெரிவினை மாற்றக் கூடிய புதிய சீன ஃபொனடிக் போன்ற உள்ளீடு முறைகளுக்கு, இந்தத் தேர்வுப் பெட்டியைத் தேர்வு செய்துக் கொள்ளலாம். ஆனால், சில உள்ளீடு முறைகளுக்கு இந்தத் தேர்வினை நீக்குவது, சிறப்பான முறையில் தட்டச்சிட உதவும். இந்தத் தேர்வினை நீக்கினாலும்கூட, தெரிவாகியுள்ள பரிந்துரை எழுத்தின் மீது மறுபரிசீலனைச் சுட்டி வைக்கப்பட்டிருப்பதால், தெரிவாகியுள்ள பரிந்துரை எழுத்தினை, அல்லது பிற பரிந்துரை எழுத்துகளை, பொருள் வழிகாட்டி/மறுபரிசீலனையைப் பயன்படுத்திப் படிக்க இயலும்.

பரிந்துரை எழுத்திற்கான குறுகிய எழுத்து விளக்கத்தை எப்பொழுதும் சேர்த்துக் கொள்க

இயல்பில் தேர்வாகியிருக்கும் இந்தத் தேர்வுப் பெட்டி, தெரிவாகியிருக்கும் பரிந்துரை எழுத்தின், அல்லது பரிந்துரை எழுத்துகளின் பட்டியல் தோன்றும்பொழுது தானாகப் படிக்கப்படும் பரிந்துரை எழுத்தின் குறுகிய எழுத்து விளக்கத்தை என்விடிஏ வழங்க வேண்டுமா என்று தீர்மானிக்க உதவுகிறது. சீனம் போன்ற மொழிகளில், தெரிவாகியிருக்கும் பரிந்துரை எழுத்துகளுக்கு வழங்கப்படும் கூடுதல் எழுத்து விளக்கங்கள், இத்தேர்வினால் தாக்கத்திற்கு உள்ளாவதில்லை என்பதை கவனிக்கவும். இந்த விருப்பத் தேர்வு, கொரிய, ஜப்பானிய உள்ளீடு முறைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

படிக்கும் சரத்தில் ஏற்படும் மாற்றங்களை அறிவிக்கவும்

புதிய சீன ஃபொனடிக், புதிய சான்ஜாய் போன்ற சில உள்ளீடு முறைகள், முன் இயற்றப்பட்ட சரம் என்று சில தருணங்களில் அழைக்கப்படும் படிக்கும் சரத்தினை கொண்டிருக்கும். இந்தப் படிக்கும் சரத்தில் உள்ளீடு செய்யப்படும் புதிய எழுத்துகளை என்விடிஏ அறிவிக்க வேண்டுமா என்று தீர்மானிக்க இந்தத் தேர்வுப் பெட்டி உதவுகிறது. இயல்பில், இந்தத் தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருக்கும். சீன சாஞ்சாய் போன்ற பழைய உள்ளீடு முறைகளில், முன்னியற்றப்பட்ட சரங்களைக் கொள்ள, படிக்கும் சரத்தைப் பயன்படுத்துவதில்லை. ஆனால், இயற்றல் சரத்தை இம்முறைகள் நேரடியாகப் பயன்படுத்துகின்றன. இயற்றல் சரத்தினை அமைவடிவமாக்குவது குறித்து அறிய, அடுத்து வரும் விருப்பத் தேர்வினைப் பார்க்கவும்.

இயற்றல் சரத்தில் ஏற்படும் மாற்றங்களை அறிவிக்கவும்

படிக்கும் , அல்லது முன்னியற்றப்பட்ட சரம், ஏற்புடைய வரைகலைக் குறியீடுகளாக ஒருங்கிணைக்கப்படும். பிறகு, பல உள்ளீடு முறைகள், இக்குறியீடுகளையும், பிற ஒருங்கிணைக்கப்பட்ட குறியீடுகளையும், ஆவணத்தில் இறுதியாக செருகுவதற்கு முன், ஒரு இயற்றல் சரத்தில் தற்காலிகமாக வைத்துக் கொள்ளும். இயற்றல் சரத்தில் தோன்றும் புதிய குறியீடுகளை, என்விடிஏ அறிவிக்க வேண்டுமா என்று தீர்மானிக்க இது உதவுகிறது. இயல்பில், இந்தத் தேர்வுப் பெட்டி தேர்வாகியிருக்கும்.

8.1.11. உலாவும் நிலை அமைப்புகள் (என்விடிஏ+கட்டுப்பாடு+b)

உலாவும் நிலை அமைப்புகள், முதன்மை விருப்பங்கள் உட்பட்டியலில் உள்ளது.

இந்த உரையாடல் பெட்டி, பின்வரும் விருப்பத் தேர்வுகளைக் கொண்டுள்ளது:

ஒரு வரியில் இருக்கக்கூடிய வரியுருக்களின் உச்ச அளவு

இந்த எண் களம், உலாவும் நிலையில், ஒரு வரியில் இருக்கக் கூடிய வரியுருக்களின் உட்சபட்ச அளவை வரையறுக்க உதவுகிறது.

ஒரு பக்கத்தில் இருக்கக்கூடிய வரிகளின் எண்ணிக்கை

உலாவும் நிலையில், பக்கம் மேல், பக்கம் கீழ் ஆகிய விசைகளை அழுத்தும்பொழுது, திரையில் தோன்ற வேண்டிய வரிகளின் உச்ச எண்ணிக்கையை, இந்த எண் களம் கட்டுப்படுத்துகிறது.

திரை வரைவைப் பயன்படுத்துக

விசை: என்விடிஏ+v

இந்தத் தேர்வுப் பெட்டியை தேர்வு செய்தால், தொடுப்புகள், தலைப்புகள் போன்றவை பார்வையுள்ளவர்கள், திரையில் காண்பதுபோலவே வைக்கப்படும். தேர்வினை நீக்கினால், அவைகள், அதனதன் வரிகளிலேயே வைக்கப்படும்.

பக்கம் ஏற்றப்படும்பொழுது, எல்லாம் படி

இந்தத் தேர்வுப் பெட்டி, உலாவும் நிலையில், ஒரு பக்கம் ஏற்றப்படும்பொழுது, அதுத் தானாகப் படிக்கப்படும் வசதியை இயக்கவோ, நிறுத்தவோ செய்கிறது. இயல்பில், இந்தத் தேர்வுப் பெட்டித் தேர்வாகியிருக்கும்.

வரைவு அட்டவணைகளை சேர்த்துக் கொள்ளவும்

இந்தத் தேர்வுப் பெட்டி, வரைவுகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் அட்டவணைகளை என்விடிஏ எவ்வாறு கையாள வேண்டுமென்பதை வரையறுக்க உதவுகிறது. தேர்வுப் பெட்டி தேர்வாகியிருந்தால், அட்டவணைகளை இயல்பானவைகளாகத் தீர்மானித்து, ஆவண வடிவூட்டம் அமைப்புகளைக் கொண்டு அவைகளை அறிவிப்பதுடன், விரைவுக் கட்டளைகளைக் கொண்டும் அவைகளை கண்டறியும். தேர்வாகியிருக்கவில்லை எனில், அட்டவணைகளை அறிவிக்காது என்பதோடில்லாமல், அவைகளை கண்டறிய விரைவுக் கட்டளைகளையும் பயன்படுத்தாது. இருப்பினும், அட்டவணைகளின் உள்ளடக்கங்களை எளிய உரைகளாகக் காண்பிக்கும். இயல்பில், இந்தத் தேர்வுப் பெட்டி தேர்வாகியிருக்காது.

தொடுப்புகள், தலைப்புகள் போன்ற களங்களின் அறிவித்தலை அமைவடிவமாக்கல்

தொடுப்புகள், தலைப்புகள், அட்டவணைகள் போன்ற களங்களின் அறிவித்தலை அமைவடிவமாக்க, ஆவண வடிவூட்டம் உரையாடலைக் காணவும்.

குவிமையம் மாறும்பொழுது, குவிமைய நிலையை தானாக இயக்கு

இந்தத் தேர்வுப் பெட்டியை தேர்வு செய்தால், குவிமையம் மாறும்பொழுது, குவிமைய நிலை தானாக இயக்கப்படும். எடுத்துக்காட்டாக, ஒரு இணையப் பக்கத்தில், தத்தல் விசையை அழுத்தி தாங்கள் ஒரு படிவக் களத்திற்குச் சென்றால், குவிமைய நிலை உடனே தானாக இயக்கப்படும்.

கணினிச் சுட்டி நகரும்பொழுது, குவிமைய நிலையை தானாக இயக்குக

இந்தத் தேர்வுப் பெட்டியை தேர்வு செய்தால், அம்பு விசைகளைக் கொண்டு நகரும்பொழுது, உலாவும் நிலை, குவிமைய நிலை ஆகிய இருநிலைகளுக்கிடையே என்விடிஏ தானாக மாறும். எடுத்துக்காட்டாக, ஒரு இணையப் பக்கத்தில், கீழம்பு விசையைக் கொண்டு ஒரு தொகு களத்தை வந்தடைந்தால், குவிமைய நிலை தானாக இயக்கப்படும். கீழம்பு விசைக் கொண்டு தொகு களத்தைவிட்டு வெளியேறும்பொழுது, உலாவும் நிலை தானாக மீண்டும் இயக்கப்படும்.

குவிமைய நிலை, உலாவும் நிலைக்கான ஒலி சைகை

இந்தத் தேர்வுப் பெட்டியை தேர்வு செய்தால், உலாவும் நிலை, குவிமைய நிலைகளுக்கிடையே மாறும்பொழுது, என்விடிஏ, மாற்றத்தைப் பேசாமல், ஒலி சைகையை எழுப்பும்.

8.1.12. ஆவண வடிவூட்டம் (என்விடிஏ+கட்டுப்பாடு+d)

இந்த விருப்பத் தேர்வு, முதன்மை விருப்பங்கள் உட்பட்டியலில் உள்ளது.

இவ்வுரையாடல் பெட்டியில் இடம்பெற்றிருக்கும் அநேகத் தேர்வுப் பெட்டிகள், சுட்டியை நகர்த்தி ஆவணங்களைப் படிக்கும்பொழுது, எந்தெந்த வடிவூட்டங்களை என்விடிஏ அறிவிக்க வேண்டுமென்று தீர்மானிக்கப் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, 'எழுத்துரு பெயரை அறிவி' தேர்வுப் பெட்டியை தேர்வு செய்தால், மற்றொரு எழுத்துருக் கொண்ட உரையின் மீது சுட்டியை நகர்த்தும்பொழுது, அந்த உரையின் எழுத்துருப் பெயரை அறிவிக்கும்.

கீழ்வரும் வடிவூட்டங்களை அறிவிக்க, என்விடிஏவை அமைவடிவமாக்கலாம்:

சுட்டிக்கு பிறகு ஏற்படும் வடிவூட்ட மாற்றங்களை அறிவிக்கவும்

இந்தத் தேர்வுப் பெட்டியை தேர்வு செய்தால், படிக்கப்படும் வரிகளிலுள்ள வடிவூட்ட மாற்றங்களை அறிவிக்க, என்விடிஏ அறிவுருத்தப்படும்.

இயல்பில், கணினிச் சுட்டி/மறுபரிசீலனைச் சுட்டியின் கீழிருக்கும் வடிவூட்டத்தை மட்டுமே அறிவிக்கும். ஆனால், என்விடிஏவின் செயற்பாடு இடர்படாது என்கிற நிலையிருந்தால், மொத்த வரியின் வடிவூட்டத்தையும் அறிவிக்கும்.

Microsoft Word போன்று, வடிவூட்டங்கள் முக்கியத்துவம் பெறும் ஆவணங்களை சரிபார்க்கும் தருணங்களில், இந்த விருப்பத் தேர்வினைப் பயன்படுத்தலாம்.

8.1.13. பேச்சு அகராதிகள்

முதன்மை விருப்பங்கள் உட்பட்டியலில் இருக்கும் இந்த உரையாடல் பெட்டி, சொற்களையும், சொற்றொடர்களையும் என்விடிஏ எவ்வாறு கையாள வேண்டுமென்று அறிவுறுத்தப் பயன்படுகிறது. தற்பொழுது, மூன்று வகையான பேச்சு அகராதிகள் உள்ளன. அவையாவன:

எல்லா அகராதி உரையாடல் பெட்டிகளும் பேச்சை செய்முறைப் படுத்த, விதிகளின் வரிசைப் பட்டியலைக் கொண்டிருக்கும். இந்த உரையாடல், ஏற்றுக, தொகு, நீக்குக ஆகிய பொத்தான்களையும் கொண்டிருக்கும்.

ஒரு விதியை ஏற்ற, 'ஏற்றுக' பொத்தானை அழுத்தி, உரையாடல் பெட்டியில் தோன்றும் களங்களை நிரப்பியவுடன், 'சரி' பொத்தானை அழுத்தவும். இதன் பிறகு, தாங்கள் ஏற்றிய புதிய விதியை, விதிகளின் வரிசைப் பட்டியலில் காண்பீர்கள். தாங்கள் ஏற்றியுள்ள விதி சேமிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய, ஏற்றுக, தொகு ஆகிய பணிகள் முடிவடைந்தவுடன், 'சரி' பொத்தானை அழுத்தி, அகராதி உரையாடல் பெட்டியை விட்டு முழுமையாக வெளியேறவும்.

பேச்சு அகராதிகளின் விதிகள், எழுத்துகளின் ஒரு தொகுதியை மற்றொன்றாகப் பேச வைக்க உதவுகிறது. எடுத்துக்காட்டாக, 'நான்' என்கிற சொல்லை 'நாங்கள்' என்று தாங்கள் மாற்ற விரும்புவதாக வைத்துக் கொள்வோம். இதை செய்ய, அகராதியின் உரையாடல் பெட்டியில் 'அசலுரை' எந்கிற தொகு களத்தில் 'நான்' என்று தட்டச்சிடப்பட்டபிறகு, 'மாற்றமர்வு' என்கிற தொகு களத்தில் 'நாங்கள்' என்று தட்டச்சிட்டு, 'சரி' பொத்தானை அழுத்தவும். தாங்கள் செய்துள்ள மாற்றத்தை, 'கருத்து' தொகு களத்தில் குறிப்பிடலாம். எடுத்துக்காட்டாக, "'நான்' என்கிற சொல் 'னாங்கள்' என்று மாற்றப்பட்டுள்ளது" என்று குறிப்பிடலாம்.

சொற்களின் மாற்றமர்வைத் தவிர, இந்தப் பேச்சு அகராதிகள், மேலும் பல வலுவான கூறுகளைக் கொண்டுள்ளது. 'ஏற்றுக' உரையாடல் பெட்டியில், தாங்கள் ஏற்றும் விதி, முகப்பெழுத்து, கீழ்தட்டு எழுத்து ஆகியவைகளைப் பிரித்துணர வேண்டுமா என்று தீர்மானிக்க, ஒரு தேர்வுப் பெட்டியும் கொடுக்கப்பட்டுள்ளது. இயல்பில் என்விடிஏ, இந்த வேறுபாட்டை பிரித்துணர்வதில்லை. தங்களுடைய அசலுரை, ஒரு வழக்கமான வெளிப்பாடா என்று குறிப்பிட, ஒரு தேர்வுப் பெட்டியும் கொடுக்கப்பட்டுள்ளது. ஒன்றிற்கு மேற்பட்ட எழுத்துகளையோ, எண்களையோ, அல்லது வெறும் ஒற்றை எழுத்தினையோ ஒப்புநோக்கிக் காணப் பயன்படுத்தப்படும் குறியெழுத்துகளே 'வழக்கமான வெளிப்பாடு' என்று அறியப்படுகிறது. வழக்கமான வெளிப்பாடு குறித்து இந்தப் பயனர் வழிகாட்டியில் விளக்கப்படவில்லை. ஆனால், இணையதளத்தில் இதுகுறித்து பல தகவல்களைத் தாங்கள் காணலாம்.

8.1.14. நிறுத்தற்குறிகள்/குறியெழுத்துகளின் பலுக்கல்

நிறுத்தற் குறிகள்/குறியெழுத்துகள் எவ்வாறு ஒலிக்கப்பட வேண்டுமென்பதையும், அவை எந்த நிலையில் பேசப்பட வேண்டுமென்பதையும் கட்டுப்படுத்த இந்த உரையாடல் பெட்டிப் பயன்படுகிறது.

ஒரு குறியெழுத்தின் பலுக்கலை மாற்ற, வரிசைப் பட்டியலில் அந்தக் குறியெழுத்தை முதலில் தெரிவு செய்யவும். 'மாற்றமர்வு' தொகு களத்தில், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குறியெழுத்தை ஒலிக்கச் செய்ய கையாளப்படும் உரையைத் தட்டச்சிடவும். தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குறியெழுத்து, பேசப்பட வேண்டிய குறைந்த நிலையை, 'நிலை' களத்தில் வரையறுக்கலாம்.

தாங்கள் மாற்றத்தை முடித்தவுடன், மாற்றங்களை சேமிக்க, 'சரி' பொத்தானை அழுத்தவும். மாற்றங்களை சேமிக்காமல் வெளியேற, 'விலக்குக' பொத்தானை அழுத்தவும்.

8.1.15. உள்ளீடு சைகைகள்

என்விடிஏ கட்டளைகளில் பயன்படுத்தப்படும் விசைப்பலகை உள்ளீடுகள், பிரெயில் காட்சியமைவின் பொத்தான்கள் போன்றவைகளை இவ்வுரையாடல் பெட்டியில் தனிப்பயனாக்கலாம்.

உரையாடல் பெட்டி தோன்றுவதற்கு உடனடியாக முன்னிருந்த நிலைக்கு பொருத்தமான கட்டளைகள் மட்டுமே காண்பிக்கப்படும். எடுத்துக்காட்டாக, உலாவும் நிலைக்கான கட்டளைகளை தாங்கள் தனிப்பயனாக்க விரும்பினால், உலாவும் நிலையில் இருந்துக் கொண்டு, உள்ளீடு சைகைகள் உரையாடலை திறக்க வேண்டும்.

இவ்வுரையாடலில் இருக்கும் கிளை, பொருத்தமான எல்லா என்விடிஏ கட்டளைகளையும், வகைகளின் அடிப்படையில் குழுவாக்கிக் காண்பிக்கிறது. கட்டளையுடன் இணைக்கப்பட்டிருக்கும் சைகைகள், கட்டளையின் கீழ் பட்டியலிட்டுக் காண்பிக்கப்படும்.

ஒரு கட்டளைக்கு உள்ளீடு சைகையை இணைக்க விரும்பினால், அக்கட்டளையை தெரிவு செய்து, 'ஏற்றுக' பொத்தானை அழுத்தவும். பிறகு, இணைக்க விரும்பும் சைகையை செயற்படுத்தவும். எடுத்துக்காட்டாக, விசைப்பலகையின் விசையை, அல்லது பிரெயில் காட்சியமைவின் பொத்தானை அழுத்தவும். பெரும்பாலான தருணங்களில், ஒரு சைகையை, ஒன்றிற்கும் மேற்பட்ட முறையில் வரையறுக்கலாம். எடுத்துக்காட்டாக, அழுத்தப்பட்டிருக்கும் உள்ளீடு சைகை, மேசைக்கணினி, அல்லது மடிக் கணினி போன்ற தற்போதைய விசைப்பலகை வரைவிற்கு மட்டும் வரையறுக்கலாம், அல்லது எல்லா விசைப்பலகை வரைவுகளுக்கும் பொருந்துமாறு அமைக்கலாம். தங்களின் விருப்பத் தேர்வினை தெரிவு செய்ய, ஒரு பட்டியல் தோன்றும்.

ஒரு கட்டளையிடமிருந்து ஒரு சைகையை நீக்க, அச்சைகையை தெரிவு செய்து, 'நீக்குக' பொத்தானை அழுத்தவும்.

தாங்கள் மாற்றத்தை முடித்தவுடன், மாற்றங்களை சேமிக்க, 'சரி' பொத்தானை அழுத்தவும். மாற்றங்களை சேமிக்காமல் வெளியேற, 'விலக்குக' பொத்தானை அழுத்தவும்.

8.2. அமைவடிவத்தை சேமித்தல்/மறுஏற்றம் செய்தல்

இயல்பில், என்விடிஏவை விட்டு வெளியேறும்பொழுது, அமைவடிவ மாற்றங்கள் தானாக சேமிக்கப்படுகிறது. குறிப்பு: ஆனால், இந்த விருப்பத் தேர்வினை, முதன்மை விருப்பங்கள் உட்பட்டியலில் இருக்கும் பொது அமைப்புகள் உரையாடலில் மாற்றியமைக்கலாம். எந்தத் தருணத்திலும் தாங்களே அமைவடிவத்தை சேமிக்க, என்விடிஏ பட்டியலில் இருக்கும் 'அமைவடிவத்தை சேமிக்கவும்' உருப்படியின் மீது உள்ளிடு விசையை அழுத்தவும்.

அமைவடிவத்தில் தவறு செய்துவிட்டு, அதிலிருந்து மீள நினைத்தால், என்விடிஏ பட்டியலில் இருக்கும் 'சேமிக்கப்பட்டுள்ள அமைவடிவத்திற்குத் திரும்பிச் செல்க' உருப்படியின் மீது உள்ளிடு விசையை அழுத்தவும். என்விடிஏ பட்டியலிலுள்ள 'அமைவடிவத்தை தொழிற்சாலை இயல்பிற்கு மாற்றியமைக்கவும்' உருப்படியின் மீது உள்ளிடு விசையை அழுத்துவதன் மூலமும், தங்களின் அமைப்புகளை தொழிற்சாலை இயல்பிற்கு மாற்றியமைக்கலாம்.

கீழ்வரும் என்விடிஏ விசைக் கட்டளைகளும் பயன்படும்:

பெயர் மேசைக்கணினி விசை மடிக்கணினி விசை விளக்கம்
அமைவடிவத்தை சேமி என்விடிஏ+கட்டுப்பாடு+c என்விடிஏ+கட்டுப்பாடு+c என்விடிஏவை விட்டு வெளியேறும்பொழுது, அமைவடிவத்தை இழக்காமலிருக்க, தற்போதைய அமைவடிவத்தை சேமிக்கும்
சேமிக்கப்பட்டுள்ள அமைவடிவத்திற்குத் திரும்பிச் செல் என்விடிஏ+கட்டுப்பாடு+r என்விடிஏ+கட்டுப்பாடு+r ஒரு முறை அழுத்தினால், அண்மையில் சேமிக்கப்பட்ட அமைவடிவத்திற்குத் திரும்பிச் செல்லும். மும்முறை அழுத்தினால், அமைவடிவத்தை தொழிற்சாலை இயல்பிற்கு மாற்றியமைக்கும்.

8.3. அமைவடிவ தனியமைப்புகள்

சில தருணங்களில், மாறுபட்ட சூழ்நிலைகளுக்கேற்ப மாறுபட்ட அமைப்புகளை வைத்துக் கொள்ள விரும்புவீர்கள். எடுத்துக்காட்டாக, ஒரு ஆவணத்தை தொகுக்கும் பொழுதோ, அதிலுள்ள பிழைகளை சரிபார்க்கும் பொழுதோ, வரித் துவக்க ஒழுங்கினை அறிவிக்கும் வசதியை செயற்படுத்த விரும்புவீர்கள். அமைவடிவ தனியமைப்புகளைக் கொண்டு இதை செய்ய என்விடிஏ அனுமதிக்கிறது.

ஒரு தனியமைப்பு தொகுக்கப்படும்பொழுது ஏற்படுத்தப்படும் அமைப்புகளின் மாற்றங்களை மட்டுமே அமைவடிவ தனியமைப்பு தன்னுள் கொண்டிருக்கும். என்விடிஏ முழுமைக்கும் செயல்படும் பொது அமைப்புகளில் காணப்படும் அமைப்புகளைத் தவிர, பெரும்பாலான பிற அமைப்புகளை அமைவடிவ தனியமைப்புகளில் மாற்றிக் கொள்ளலாம்.

அமைவடிவ அமைப்புகளை கைமுறையில் இயங்கச் செய்யலாம். ஒரு பயன்பாட்டிற்கு மாறுவது போன்ற தூண்டுதல்களினாலும், அவைகளை தானாக இயங்கச் செய்யலாம்.

8.3.1. அடிப்படை மேலாண்மை

என்விடிஏ பட்டியலில் காணப்படும் 'அமைவடிவ தனியமைப்புகள்' உருப்படியை தெரிவு செய்வதின் மூலம், அமைவடிவ தனியமைப்புகளை தாங்கள் மேலாளுகிறீர்கள். தாங்கள் ஒரு விசைக் கட்டளையைக் கொண்டும் இதை செய்யலாம்.

இந்த உரையாடலின் முதல் கட்டுப்பாடாக இருப்பது தனியமைப்புகளின் வரிசைப் பட்டியலாகும். இப்பட்டியலிலிருந்து ஒரு தனியமைப்பை தாங்கள் தெரிவு செய்துக் கொள்ளலாம். உரையாடலை தாங்கள் திறந்தவுடன், தாங்கள் தற்பொழுது பயன்படுத்திக் கொண்டிருக்கும் தனியமைப்பு தெரிவு செய்யப்படும். இயக்கத்திலிருக்கும் தனியமைப்பிற்கான கூடுதல் தகவலையும் இவ்வுரையாடல் காண்பிக்கும். இயக்கத்திலிருக்கும் தனியமைப்பு, கைமுறையில் இயக்கப்பட்டதா, தூண்டப்பட்டதா, அல்லது தற்பொழுது தொகுக்கப்படுகிறதா போன்ற தகவல்களை காண்பிக்கும்.

ஒரு தனியமைப்பை மறுபெயரிட, அல்லது அழிக்க, மறுபெயரிடுக, அல்லது அழிக்கவும் பொத்தானை முறையே அழுத்தவும்.

உரையாடலை மூட, 'மூடுக' பொத்தானை அழுத்தவும்.

8.3.2. தனியமைப்பை உருவாக்குதல்

ஒரு தனியமைப்பை உருவாக்க, 'புதிது' பொத்தானை அழுத்தவும்.

'புதிய தனியமைப்பு' உரையாடலில், தனியமைப்பிற்கான பெயரை தாங்கள் உள்ளிடலாம். இந்த தனியமைப்பு எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டுமென்பதையும் தாங்கள் தெரிவு செய்யலாம். இந்த தனியமைப்பை தாங்கள் கைமுறையில் மட்டுமே பயன்படுத்த விரும்பினால், இயல்பில் அமைந்திருக்கும் 'கைமுறை இயக்கம்' வானொலிப் பொத்தானை தெரிவு செய்யவும். கைமுறையில் இயக்க விரும்பவில்லையென்றால், இத்தனியமைப்பை தானாக இயங்கச் செய்யும் தூண்டுதலின் பெயரைக் கொண்டிருக்கும் வானொலிப் பொத்தானை தெரிவு செய்யவும். தனியமைப்பின் பெயரை தாங்கள் குறிப்பிடவில்லை என்றால், தூண்டுதலின் பெயரைக் கொண்டிருக்கும் வானொலிப் பொத்தானை தெரிவு செய்யும் பொழுது, தனியமைப்பின் பெயரும் தக்கவாறு நிரப்பப்படும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. தூண்டுதல்கள் குறித்த கூடுதல் தகவல்களுக்கு, கீழே காணவும்.

'சரி' பொத்தானை அழுத்தியவுடன், தனியமைப்பு உருவாக்கப்பட்டு, தாங்கள் அத்தனியமைப்பை தொகுக்க வசதியாக 'அமைவடிவ தனியமைப்புகள்' உரையாடல் மூடப்படும்.

8.3.3. கைமுறை இயக்கம்

ஒரு தனியமைப்பை தெரிவு செய்து, 'கைமுறை இயக்கம்' பொத்தானை அழுத்துவதன் மூலம், அத்தனியமைப்பை கைமுறையில் இயங்கச் செய்யலாம். இயங்கச் செய்த பின்னரும் கூட, தூண்டுதல்களினால் பிற தனியமைப்புகளும் இயக்கப் படலாம். இருந்தாலும், கைமுறையில் இயக்கப்பட்டிருக்கும் தனியமைப்பின் அமைப்புகளுக்கு முன்னுரிமை அளித்த பின்னரே, தூண்டுதல்களினால் செயற்படும் தனியமைப்புகளின் அமைப்புகள் செயற்படுத்தப்படும். எடுத்துக்காட்டாக, தற்போதைய பயன்பாட்டிற்கான தனியமைப்பு தூண்டப்பட்ட நிலையில், அத்தனியமைப்பில் தொடுப்புகளை அறிவிக்கும் வசதி செயற்படுத்தப்பட்டிருந்து, கைமுறையில் இயக்கப்பட்ட தனியமைப்பில் தொடுப்புகளை அறிவிக்கும் வசதியை செயலிழக்கச் செய்திருந்தால், என்விடிஏ தொடுப்புகளை அறிவிக்காது. ஆனால், தூண்டப்பட்டிருக்கும் தனியமைப்பில் குரலை தாங்கள் மாற்றியிருந்து, கைமுறையில் இயக்கப்பட்டிருக்கும் தனியமைப்பில் குரலை மாற்றியிருக்கவில்லை எனில், தூண்டப்பட்ட தனியமைப்பின் குரல் பயன்படுத்தப்படும். தாங்கள் மாற்றிய அமைப்புகள், கைமுறையில் இயக்கப்பட்ட தனியமைப்பில் சேமிக்கப்படும். கைமுறையில் இயக்கப்பட்ட தனியமைப்பின் இயக்கத்தை நிறுத்த, அத்தனியமைப்பை அமைவடிவ தனியமைப்புகள் உரையாடலில் தெரிவு செய்து, 'கைமுறை இயக்க நிறுத்தம்' பொத்தானை அழுத்தவும்.

8.3.4. தூண்டுதல்கள்

தனியமைப்புகள் உரையாடலில் காணப்படும் 'தூண்டுதல்கள்' பொத்தானை அழுத்துவது, பலதரப்பட்ட தூண்டுதல்களினால் தானாக இயக்கப்பட வேண்டிய தனியமைப்புகளை மாற்றியமைக்க அனுமதிக்கிறது.

தூண்டுதல்களின் பட்டியல், கிடைப்பிலிருக்கும் தூண்டுதல்களை காண்பிக்கும். அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

ஒரு தூண்டுதலுக்கு தானாக செயற்பட வேண்டிய தனியமைப்பை மாற்ற, முதலில் தூண்டுதலை தெரிவு செய்துக் கொண்டு, தோன்றும் வரிசைப் பட்டியலில் காணப்படும் தனியமைப்புகளில் ஒன்றை தெரிவு செய்யவும். எந்த தனியமைப்பையும் தாங்கள் பயன்படுத்த வேண்டாமென்றால், இயல்பான அமைவடிவத்தை தெரிவு செய்யவும்.

அமைவடிவ தனியமைப்புகள் உரையாடலுக்குத் திரும்ப, 'மூடுக' பொத்தானை அழுத்தவும்.

8.3.5. தனியமைப்பைத் தொகுத்தல்

ஒரு தனியமைப்பை கைமுறையில் தாங்கள் இயக்கியிருந்தால், அமைப்புகளில் தாங்கள் மேற்கொள்ளும் எந்த மாற்றமும், அத்தனியமைப்பில் சேமிக்கப்படும். எந்த தனியமைப்பும் கைமுறையில் இயக்கப்படாத தருணத்தில், அமைப்புகளில் தாங்கள் மேற்கொள்ளும் எந்த மாற்றமும், மிக அண்மையில் தூண்டப்பட்டிருக்கும் தனியமைப்பில் சேமிக்கப்படும். எடுத்துக்காட்டாக, நோட்பேட் பயன்பாட்டிற்கு ஒரு தனியமைப்பைத் தாங்கள் இணைத்திருந்து, நோட்பேடிற்கு தாங்கள் மாறினால், அமைப்புகளில் தாங்கள் செய்யும் மாற்றங்கள் அத்தனியமைப்பில் சேமிக்கப்படும். இறுதியாக, கைமுறையில் இயக்கப்பட்ட, அல்லது தூண்டப்பட்ட தனியமைப்பு ஏதுமில்லாதபொழுது, அமைப்புகளில் தாங்கள் மேற்கொள்ளும் மாற்றங்கள், இயல்பான அமைவடிவத்தில் சேமிக்கப்படும்.

எல்லாம் படித்தலுக்கு இணைக்கப்பட்டிருக்கும் தனியமைப்பைத் தாங்கள் தொகுக்க வேண்டுமானால், அத்தனியமைப்பை கைமுறையில் தொகுக்க வேண்டும்.

8.3.6. தூண்டுதல்களை தற்காலிகமாக செயலிழக்கச் செய்தல்

சில தருணங்களில், எல்லா தூண்டுதல்களையும் தற்காலிகமாக செயலிழக்கச் செய்வது பயனளிப்பதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, தூண்டுதல்களின் இடையூறு இல்லாமல், கைமுறையில் இயக்கப்பட்ட தனியமைப்பையோ, இயல்பான அமைவடிவத்தையோ தாங்கள் தொகுக்க விரும்புவீர்கள். இதை செய்ய, அமைவடிவ தனியமைப்புகள் உரையாடலில் காணப்படும் 'எல்லாத் தூண்டுதல்களையும் தற்காலிகமாக செயலிழக்கச் செய்க' தேர்வுப் பெட்டியைத் தேர்வு செய்யவும்.

8.4. அமைவடிவ கோப்புகளின் இருப்பிடம்

என்விடிஏவின் பெயர்த்தகு பதிப்புகள், ஒரு பயனரின் அமைப்புகள், தனிப்பயனாக்கப்பட்ட நிரற்கூறுகள் போன்றவைகளை, என்விடிஏ அடைவில் இருக்கும் UserConfig என்கிற கோப்புறையில் சேமித்து வைக்கும்.

ஒரு பயனரின் அமைப்புகள், தனிப்பயனாக்கப்பட்ட நிரற்கூறுகள் போன்றவைகளை, தங்களின் சாளர பயனர் தனியமைப்பில் இருக்கும் ஒரு சிறப்பு அடைவில் என்விடிஏவின் நிறுவி பதிப்புகள் சேமிக்கும். இதன்மூலம் அறிவது என்னவென்றால், கணினியை பயன்படுத்தும் ஒவ்வொருப் பயனரும், தன்னுடையத் தனிப்பட்ட அமைப்புகளைப் பயன்படுத்தலாம். என்விடிஏ நிறுவியில், தங்களுக்கென்று இருக்கும் தனிப்பட்ட அமைப்புகளுக்கு செல்ல, துவக்கு பட்டியலில் இங்கு செல்லவும்: programs -> NVDA -> explore user configuration directory.

புகுபதிவு, பயனர் கணக்கு கட்டுப்பாடு சாளரங்களில் பயன்படுத்தப்படும் அமைப்புகள், என்விடிஏவின் நிறுவு அடைவின் கீழிருக்கும் SystemConfig அடைவில் சேமிக்கப்பட்டிருக்கும். இவ்வமைப்புகளை, போதுமான காரணமின்றி தாங்கள் மாற்றக் கூடாது. புகுபதிவு, பயனர் கணக்குக் கட்டுப்பாடு சாளரங்களில் என்விடிஏவின் அமைப்புகளை மாற்ற, முதலில் விண்டோஸ் சாளரத்தில் என்விடிஏவை தங்களின் விருப்பத்திற்கேற்ப அமைவடிவமாக்கி சேமியுங்கள். பிறகு, பொது அமைப்புகள் உரையாடலுக்கு சென்று, "சாளர புகுபதிவு, பிற பாதுகாப்பான திரைகளில் தற்போதைய அமைப்புகளைப் பயன்படுத்துக" பொத்தானை அழுத்தி, இவ்வமைப்புகளைப் படியெடுக்கவும்.

9. கூடுதல் கருவிகள்

9.1. செயற்குறிப்பேட்டுத் தோற்றம்

செயற்குறிப்பேட்டுத் தோற்றம், என்விடிஏ பட்டியலின் கருவிகள் உட்பட்டியலில் உள்ளது. என்விடிஏ துவக்கப்பட்ட தருணத்திலிருந்து தற்பொழுது வரையிலான எல்லா என்விடிஏ செயல்களும் இதில் பதிவாகியிருக்கும்.

இந்த செயற்குறிப்பேட்டின் உள்ளடக்கங்களைப் படிப்பதோடு மட்டுமல்லாமல், குறிப்பேட்டினை சேமிக்கலாம், அண்மையில் சேமிக்கப்பட்டுள்ள தகவல்களைக் காண, அதைப் புத்தாக்கம் செய்யலாம். இந்த செயல்களை நிறைவேற்ற, குறிப்பேட்டின் 'செயற் குறிப்பேடு' பட்டியலுக்கு செல்லவும்.

9.2. பேச்சுத் தோற்றம்

என்விடிஏவை உருவாக்கும் பார்வையுள்ளவர்களும், என்விடிஏவின் செயல் விளக்கத்தைப் பார்வையாளர்களுக்கிடையே காண்பிக்கும் தருணங்களிலும், என்விடிஏவின் எல்லா பேச்சுகளும் ஒரு மிதக்கும் திரையில் உரைகளாகக் காண்பிக்கப்படும்.

பேச்சுத் தோற்றத்தை இயக்க, கருவிகள் உட்பட்டியலில் இருக்கும் 'பேச்சுத் தோற்றம்' உருப்படியைத் தேர்வு செய்யவும். பேச்சுத் தோற்றத்தை நிறுத்த, இத்தேர்வினை நீக்கவும்.

பேச்சுத் தோற்றம் இயக்கத்திலிருக்கும்பொழுது, பேசப்படும் எல்லா உரைகளும் திரையில் தொடர்ந்துப் புதுப்பிக்கப்பட்டு வரும். பேச்சுத் தோற்றத்தை சொடுக்கினாலோ, அதைக் குவிமையத்திற்குள் கொண்டு வந்தாலோ, இற்றாக்கங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படும். இது தாங்கள் உரைகளைத் தெரிவு செய்யவும், படியெடுக்கவும் உதவும்.

9.3. கூட்டுறுப்பு மேலாளர்

என்விடிஏ பட்டியலின் கருவிகள் உட்பட்டியலில் இருக்கும் கூட்டுறுப்பு மேலாண்மை உருப்படியைக் கொண்டு, என்விடிஏவிற்கான கூட்டுறுப்புகளை நிறுவவோ, நிறுவு நீக்கம் செய்யவோ இயலும். சமூகத்தினால் வழங்கப்படும் தனிக் குறியீடுகளைக் கொண்டிருக்கும் இக்கூட்டுறுப்புகள், என்விடிஏவின் தன்மைகளைக் கூட்டும், அல்லது மாற்றும்,, அல்லது கூடுதல் பிரெயில் காட்சியமைவுகளுக்கும், பேச்சு ஒலிப்பான்களுக்கும் ஆதரவு அளிப்பதாக இருக்கும்.

கூட்டுறுப்பு மேலாளர், தங்களின் என்விடிஏ அமைவடிவத்தில் நிறுவப்பட்டிருக்கும் எல்லாக் கூட்டுறுப்புகளையும் காண்பிக்கும் வரிசைப் பட்டியலைக் கொண்டிருக்கும். கூட்டுறுப்பின் பெயர், பதிப்பு, படைப்பாளர் பெயர் ஆகியவைகளை இப்பட்டியலில் காண்பீர்கள். கூட்டுறுப்பின் விளக்கம், இணைய முகவரி போன்ற தகவல்களைக் காண, அக்கூட்டுறுப்பைத் தெரிவு செய்து, 'கூட்டுறுப்பு குறித்து...' என்கிற பொத்தானை அழுத்தவும்.

இணைய வழியில் கூட்டுறுப்புகளை உலாவித் தரவிறக்க, 'கூட்டுறுப்புகளைப் பெறுக' பொத்தானை அழுத்தவும். இப்பொத்தான் அழுத்தப்பட்டவுடன், என்விடிஏவின் கூட்டுறுப்புகள் இணையப் பக்கம் திறக்கப்படும். தங்கள் கணினியில் என்விடிஏ நிறுவப்பட்டிருந்தால், கீழே விளக்கப்பட்டிருப்பது போல், உலாவியிலிருந்து கூட்டுறுப்புகளை நேரடியாகத் திறந்து, நிறுவிக் கொள்ளலாம். இல்லாவிடில், கூட்டுறுப்புத் தொகுதியை சேமித்து, கீழ்க் காணும் விளக்கத்தை பின் பற்றவும்.

ஒரு கூட்டுறுப்பை நிறுவ, 'நிறுவுக' பொத்தானை அழுத்தவும். கூட்டுறுப்பின் தொகுப்புக் கோப்பினை, கணினியிலோ, பிணையத்திலோ உலாவித் தேட இது உதவும். 'திற' பொத்தானை அழுத்தியவுடந், நிறுவுதல் துவக்கப்படும்.

ஒரு கூட்டுறுப்பு நிறுவப்படும்பொழுது, தாங்கள் அந்த கூட்டுறுப்பை கட்டாயம் நிறுவ விரும்புகிறீர்களா என்று என்விடிஏ தங்களை முதலில் வினவும். நிறுவப்படும் கூட்டுறுப்புகள் என்விடிஏவில் எந்தத் தடையுமின்றி செயல்படுவதால், தங்களின் தனிப்பட்ட தகவலோ, அல்லது நிறுவப்பட்ட என்விடிஏவாக இருந்தால், தங்களின் கணினியின் தகவலையோ அது அணுக இயலும். ஆகவே, நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து பெறப்படும் கூட்டுறுப்புகளை மட்டுமே நிறுவ வேண்டும். கூட்டுறுப்பு நிறுவப்பட்டவுடன், அதை செயற்படுத்த என்விடிஏவை மறுதுவக்க வேண்டும். மறுதுவக்கும் வரை, அக்கூட்டுறுப்பின் நிலை வரிசைப் பட்டியலில் "நிறுவுக" என்றே காண்பிக்கப்படும்.

ஒரு கூட்டுறுப்பை நிறுவு நீக்கம் செய்ய, அக்கூட்டுறுப்பைத் தெரிவு செய்து, 'நீக்குக' பொத்தானை அழுத்தவும். கூட்டுறுப்பை தாங்கள் கட்டாயம் நிறுவு நீக்கம் செய்ய வேண்டுமா என்று என்விடிஏ தங்களை வினவும். நிறுவுதலில் செய்தது போல, கூட்டுறுப்பின் நிறுவு நீக்கம் முழுமையடைய, என்விடிஏவை மறுதுவக்க வேண்டும். மறுதுவக்கும் வரை, அக்கூட்டுறுப்பின் நிலை வரிசைப் பட்டியலில் "நீக்குக" என்றே காண்பிக்கப்படும்.

உரையாடல் பெட்டியை மூட, மேலாளரில் ஒரு 'மூடுக' பொத்தானும் கொடுக்கப்பட்டிருக்கும். கூட்டுறுப்புகளை நிறுவியிருந்தாலோ, நிறுவு நீக்கம் செய்திருந்தாலோ, மாற்றங்களை செயலிற்குக் கொண்டு வர என்விடிஏவை மறுதுவக்க வேண்டுமா என்று முதலில் கேட்கப்படும்.

இதுநாள் வரை, என்விடிஏவின் உட்பொருத்திகளையும், இயக்கிகளையும் தனித் தனியே என்விடிஏ பயனர் அமைவடிவ அடைவில் படியெடுத்து, என்விடிஏவின் செயற்பாட்டை நீட்டிக்க முடிந்தது. என்விடிஏவின் தற்போதைய பதிப்பு இதை அனுமதித்தாலும், கூட்டுறுப்பு மேலாளரில் இவை காட்டப்படுவதில்லை. பழைய கோப்புகளை நீக்கிவிட்டு, பொருத்தமான புதிய உட்பொருத்திகள் ஏதேனும் இருந்தால், அதை நிறுவிக் கொள்ளலாம்.

9.4. பைத்தன் கட்டுப்பாட்டு மையம்

என்விடிஏ பட்டியலின் கருவிகள் உட்பட்டியலில் உள்ள பைத்தன் கட்டுப்பாட்டு மையம், ஒரு மேம்பாட்டுக் கருவியாகும். இது, என்விடிஏவின் உள்ளடக்கங்களின் பொது ஆய்வு, வழுநீக்கம், ஒரு பயன்பாட்டின் அணுகுமுறை ஆய்வு போன்ற செயல்களுக்கு பயன்படுகிறது. கூடுதல் தகவல்களுக்கு, என்விடிஏ இணையப்பக்கத்தில் இருக்கும் மேம்படுத்துநர் வழிகாட்டிப் பிரிவிற்குச் செல்லவும்.

9.5. உட்பொருத்திகளை மறுஏற்றம் செய்

இந்த ுறுப்படியை இயக்கினால், என்விடிஏவை மறுதுவக்க தேவையில்லாமல், நிரற்கூறுகளையும், பொது உட்பொருத்திகளையும் மறுஏற்றம் செய்யும். இது, என்விடிஏ மேம்படுத்துநர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

10. ஆதரவளிக்கப்படும் பேச்சொலிப்பான்கள்

இந்தப் பிரிவில், என்விடிஏ ஆதரவளிக்கும் பேச்சொலிப்பான்கள் பற்றிய தகவல்களைக் காணலாம். என்விடிஏவுடன் பயன்படுத்தப்படக் கூடிய பிற இலவச/வர்த்தக ஒலிப்பான்களின் விரிவான பட்டியலை என்விடிஏவின் இந்த இணையப் பக்கத்தில் காணலாம்.

10.1. ஈஸ்பீக்

என்விடிஏவினுள் ஈஸ்பீக் ஒலிப்பான் கட்டப்பட்டு வெளிவருவதால், வேறு சிறப்பு இயக்கிகளையோ, பகுதிகளையோ நிறுவத் தேவையில்லை. ஈஸ்பீக் ஒலிப்பானை இயல்பான ஒலிப்பானாகக் கொண்டு, என்விடிஏ துவங்கும். இந்த ஒலிப்பான், என்விடிஏவினுள் கட்டப்பட்டு வெளிவருவதால், பெருவிரல் இயக்ககத்தைக் கொண்டு பிற கணினிகளில் என்விடிஏவை இயக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஈஸ்பீக்கில் இருக்கும் ஒவ்வொரு குரலும், வெவ்வேறு மொழியைப் பேசும். நாற்பத்து மூன்றிற்கும் மேலான மொழிகளுக்கு ஈஸ்பீக் ஆதரவளிக்கிறது.

குரலின் ஒலியை மாற்றியமைக்க, ஈஸ்பீக்கில் பல குரல் மாற்றுருகளும் உள்ளன.

10.2. மைக்ரோசாப்ட் ஸ்பீச் ஏ.பி.ஐ. 4 (SAPI 4)

SAPI 4 என்பது மென்பொறுள் பேச்சொலிப்பான்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் வரையறுத்திருந்த பழைய செந்தரமாகும். இச்செந்தரத்துடன் ிணங்கக் கூடிய பல ஒலிப்பான்களை, விலை கொடுத்து வாங்கவோ, இணையதளங்களிலிருந்து இலவசமாக தரவிறக்கவோ முடியும். இந்தப் பேச்சொலிப்பானிலிருக்கும் குரல்களை, குரல் அமைப்புகள் உரையாடல், ஒலிப்பான் அமைப்புகள் வளையத்தைக் கொண்டு அணுகும்பொழுது, கணினியில் நிறுவப்பட்டிருக்கும் எல்லா SAPI 4 ஒலிப்பான்களின் அனைத்து குரல்களையும் வரிசைப் பட்டியலில் காண்பீர்கள்.

தாங்கள் SAPI 4 குரல்களை நிறுவியிருந்தாலும், தங்களின் ஒலிப்பான், என்விடிஏவின் ஒலிப்பான்கள் பட்டியலில் காணப்படவில்லையென்றால், SAPI 4.0 இயக்க நேர இருமங்களை (runtime binaries) மீண்டும் நிறுவவும். இந்த இருமங்களை இந்த ிணையப்பக்கத்தில் பெறலாம்.

10.3. மைக்ரோசாப்ட் ஸ்பீச் ஏ.பி.ஐ. 5 (SAPI 5)

SAPI 5 என்பது மென்பொறுள் பேச்சொலிப்பான்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் வரையறுத்திருக்கும் செந்தரமாகும். இச்செந்தரத்துடன் ிணங்கக் கூடிய பல ஒலிப்பான்களை, விலை கொடுத்து வாங்கவோ, இணையதளங்களிலிருந்து இலவசமாக தரவிறக்கவோ முடியும்ென்றாலும், தங்கள் கணினியில், குறைந்தபட்சம் ஒரு SAPI 5 குரலாவது ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும். இந்தப் பேச்சொலிப்பானிலிருக்கும் குரல்களை, குரல் அமைப்புகள் உரையாடல், ஒலிப்பான் அமைப்புகள் வளையத்தைக் கொண்டு அணுகும்பொழுது, கணினியில் நிறுவப்பட்டிருக்கும் எல்லா SAPI 5 ஒலிப்பான்களின் அனைத்து குரல்களையும் வரிசைப் பட்டியலில் காண்பீர்கள்.

10.4. மைக்ரோசாப்ட் பேச்சுத் தளம்

வழங்கி இயக்கமுறைமைகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும் பேச்சு பயன்பாடுகளுக்கான பல மொழிகளை, மைக்ரோசாப்ட் பேச்சுத் தளம் வழங்குகிறது. இந்த குரல்களை என்விடிஏவுடனும் பயன்படுத்தலாம்.

இந்தக் குரல்களைப் பயன்படுத்த, இரு பகுதிகளை தாங்கள் நிறுவ வேண்டும்.

10.5. ஆடியோ லாஜிக் டி.டி.எஸ். 3

இது இத்தாலிய மொழிக்கென்று வடிவமைக்கப்பட்டுள்ள வணிகநோக்கிலான பேச்சொலிப்பானாகும். என்விடிஏவுடன் இந்த ஒலிப்பானைப் பயன்படுத்த, முதலில் அதைத் தங்கள் கணினியில் நிறுவுதல் வேண்டும். இதுகுறித்து மேலும் அறிய, ஆடியோ லாஜிக்கின் இந்த இணையதளத்தைக் காணவும்.

இந்த ஒலிப்பான், எழுத்துகளாகப் படிக்கும் வசதியைக் கொண்டிருப்பதில்லை.

10.6. நியூஃபான்

இது, ருஷ்ய, உக்ரேனிய மொழிகளுக்காக, செர்ஜி ஷிஷ்மின்சேவ் (Sergey Shishmintzev) என்பவரால் உருவாக்கப்பட்டிருக்கும் இலவச ஒலிப்பானாகும். நியூஃபான் ஒலிப்பானைத் தரவிறக்க, இந்த ருஷ்ய என்விடிஏ சமூகப் பக்கத்திற்குச் செல்லவும்.

இந்த ஒலிப்பான், எழுத்துகளாகப் படிக்கும் வசதியைக் கொண்டிருப்பதில்லை.

10.7. என்விடிஏவிற்கான நுவான்ஸ் வோக்கலைசர்

Nuance Communications Inc., நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு, Tiflotecnia, Lda நிறுவனத்தால் என்விடிஏவிற்கென்று குறிப்பாக தொகுக்கப்படும் நுவான்ஸ் வோக்கலைசர், வர்த்தக ரீதியில் கிடைக்கப் பெறும் உயர் தர பேச்சொலிப்பானாகும். இது, 50 வகையான குரல்களில் 30 மொழிகளுக்கும் மேலாக பேசக்் கூடியது. பெயர்த்தகு என்விடிஏவிலும் முழுமையாக பயன்படுத்தும் வண்ணம், ஒலிப்பானின் எல்லாப் பகுதிகளும், குரல்களும், கூட்டுறுப்புத் தொகுதிகளாக கட்டப்பட்டுள்ளன.

நுவான்ஸ் வோக்கலைசர் பற்றி கூடுதல் தகவல்கலைப் பெறவும், அதை எவ்வாறு விலைக்கு வாங்குவது என்பதை அறியவும், என்விடிஏவின் இந்த இணையப் பக்கத்திற்குச் செல்லவும். என்விடிஏவை தொடர்ந்து மேம்படுத்த, இம்மென்பொருளின் விற்பனையில் ஒரு பகுதி NV Access நிறுவனத்திற்கு நன்கொடையாக அளிக்கப்படுகிறது.

11. ஆதரவளிக்கப்படும் பிரெயில் காட்சியமைவுகள்

இந்தப் பிரிவு, என்விடிஏ ஆதரவளிக்கும் பிரெயில் காட்சியமைவுகள் பற்றிய தகவல்களைக் கொண்டுள்ளது.

11.1. ஃப்ரீடம் சைண்டிஃபிக் ஃபோக்கஸ்/PAC Mate தொடர்

ஃப்ரீடம் சைண்டிஃபிக்கின் எல்லா ஃபோக்கஸ், PAC Mate காட்சியமைவுகளும், யுஎஸ்பி, இழையிலா பரிமாற்றி மூலம் இணைக்கப்படும்பொழுது, என்விடிஏ அதை ஆதரிக்கிறது. ஃப்ரீடம் சைண்டிஃபிக்கின் பிரெயில் காட்சியமைவு இயக்கிகளைத் தாங்கள் கணினியில் நிறுவியிருக்க வேண்டும். இவ்வியக்கிகள் தங்களிடம் ஏற்கனவே இல்லையென்றால், இந்த இணையப் பக்கத்திலிருந்து அவைகளை தரவிறக்கிக் கொள்ளலாம்: http://www.freedomscientific.com/downloads/focus-40-blue/focus-40-blue-downloads.asp. இந்த இணையப் பக்கம், ஃபோக்கஸ் 40 ப்ளூ காட்சியமைவை மட்டுமே குறிப்பிட்டாலும், இயக்கிகள், ஃப்ரீடம் சைண்டிஃபிக்கின் எல்லா பிரெயில் காட்சியமைவுகளையும் ஆதரிக்கும். தாங்கள் 64-பிட் இயக்கமுறைமையைப் பயன்படுத்தி, பிறிதொரு திரைநவிலி இந்த இயக்கிகளை ஏற்கனவே நிறுவியிருந்தாலும், மேலே கொடுக்கப்பட்டுள்ள தொடுப்பிலிருந்து மீண்டும் அந்த ியக்கிகளை நிறுவ நேரிடலாம். ஏனென்றால், அந்த பிறிதொரு திரைநவிலி, என்விடிஏவிற்குத் தேவைப்படும் இயக்கிகளை நிறுவாமல் விட்டிருக்கக் கூடும்.

இயல்பில், இக்காட்சியமைவுகளை யுஎஸ்பி, இழையிலா பரிமாற்றி மூலம் என்விடிஏ தானாகக் கண்டறிந்து தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும். ஆனால், பயன்படுத்த வேண்டிய இணைப்பு வகையை கட்டுப்படுத்த, யுஎஸ்பி நுழைவாயில், அல்லது இழையிலா பரிமாற்றி நுழைவாயில் ஆகியவைகளுள் ஏதேனும் ஒன்றை, காட்சியமைவை அமைவடிவமாக்கும்பொழுது தெரிவு செய்துக் கொள்ளலாம். இது, தங்கள் கணினியில் இருக்கும் மின்சாரத்தைக் கொண்டு, போக்கஸ் காட்சியமைவை இயக்கிய வண்ணம், காட்சியமைவை என்விடிஏவுடன் இழையிலா பரிமாற்றி மூலம் இணைக்கும்பொழுது பயன்படக்கூடும்.

பின்வரும் என்விடிஏ விசைகள், இக்காட்சியமைவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன: இந்த விசைகள் எங்கிருக்கின்றன என்பதை விளக்கமாக அறிய, காட்சியமைவுடன் வரும் வழிகாட்டி ஆவணத்தைப் பார்க்கவும்.

பெயர் விசை
பிரெயில் காட்சியமைவை பின்னுருட்டு topRouting1 (காட்சியமைவில் உள்ள முதல் கட்டம்)
பிரெயில் காட்சியமைவை முன்னுருட்டு topRouting20/40/80 (காட்சியமைவில் உள்ள கடைசி சிறுகட்டம்)
பிரெயில் காட்சியமைவை பின்னுருட்டு leftAdvanceBar
பிரெயில் காட்சியமைவை முன்னுருட்டு rightAdvanceBar
பிரெயில் கட்டப்படுவதை மாற்றியமை leftGDFButton+rightGDFButton
இடது விஸ் சக்கரத்தின் செயலை மாற்றியமை leftWizWheelPress
இடது விஸ் சக்கரத்தின் செயலைப் பயன்படுத்தி பின் நகர் leftWizWheelUp
இடது விஸ் சக்கரத்தின் செயலைப் பயன்படுத்தி முன் நகர் leftWizWheelDown
வலது விஸ் சக்கரத்தின் செயலை மாற்றியமை rightWizWheelPress
வலது விஸ் சக்கரத்தின் செயலைப் பயன்படுத்தி பின் நகர் rightWizWheelUp
வலது விஸ் சக்கரத்தின் செயலைப் பயன்படுத்தி முன் நகர் rightWizWheelDown
பிரெயில் சிறுகட்டத்திற்கு வழியிடு routing
பின்நகர் விசை dot7
உள்ளிடு விசை dot8
மாற்றழுத்தி+தத்தல் விசை brailleSpaceBar+dot1+dot2
தத்தல் விசை brailleSpaceBar+dot4+dot5
மேலம்பு விசை brailleSpaceBar+dot1
கீழம்பு விசை brailleSpaceBar+dot4
கட்டுப்பாடு+இடதம்பு விசை brailleSpaceBar+dot2
கட்டுப்பாடு+வலதம்பு விசை brailleSpaceBar+dot5
இடதம்பு brailleSpaceBar+dot3
வலதம்பு brailleSpaceBar+dot6
தொடக்க விசை brailleSpaceBar+dot1+dot3
முடிவு விசை brailleSpaceBar+dot4+dot6
கட்டுப்பாடு+தொடக்க விசை brailleSpaceBar+dot1+dot2+dot3
கட்டுப்பாடு+முடிவு விசை brailleSpaceBar+dot4+dot5+dot6
நிலைமாற்றி விசை brailleSpaceBar+dot1+dot3+dot4
நிலைமாற்றி+தத்தல் விசை brailleSpaceBar+dot2+dot3+dot4+dot5
விடுபடு விசை brailleSpaceBar+dot1+dot5
சாளரங்கள் விசை brailleSpaceBar+dot2+dot4+dot5+dot6
இடைவெளி விசை brailleSpaceBar
சாளரங்கள்+d key (எல்லா பயன்பாடுகளையும் சிறிதாக்கு) brailleSpaceBar+dot1+dot2+dot3+dot4+dot5+dot6
தற்போதைய வரியை அறிவி brailleSpaceBar+dot1+dot4
என்விடிஏ பட்டியல் brailleSpaceBar+dot1+dot3+dot4+dot5

ஃபோக்கஸ் 40, ஃபோக்கஸ் 80, ஃபோக்கஸ் ப்ளூ போன்ற ராக்கர் பட்டை விசைகளைக் கொண்ட புதிய வகை ஃபோக்கஸ் பிரெயில் காட்சியமைவுகளுக்கான விசைக் கட்டளைகள்:

பெயர் விசை
பிரெயில் காட்சியமைவை முந்தைய வரிக்கு நகர்த்து leftRockerBarUp, rightRockerBarUp
பிரெயில் காட்சியமைவை அடுத்த வரிக்கு நகர்த்து leftRockerBarDown, rightRockerBarDown

ஃபோக்கஸ் 80 காட்சியமைவிற்கு மட்டும்:

பெயர் விசை
பிரெயில் காட்சியமைவை பின்னுருட்டு leftBumperBarUp, rightBumperBarUp
பிரெயில் காட்சியமைவை முன்னுருட்டு leftBumperBarDown, rightBumperBarDown

11.2. ஆப்டிலெக் ALVA BC640/680

ஆப்டிலெக் நிறுவனத்தின் ALVA BC640, BC680 ஆகிய இரு காட்சியமைவுகளும், யுஎஸ்பி, அல்லது இழையிலா பரிமாற்றி மூலம் இணைக்கப்பட்டிருந்தால், என்விடிஏ அவைகளை ஆதரிக்கும். இந்த காட்சியமைவுகளைப் பயன்படுத்த, எந்தக் குறிப்பிட்ட இயக்கிகளையும் நிறுவத் தேவையில்லை. பிரெயில் காட்சியமைவை வெறுமனே கணினியில் செருகிவிட்டு, என்விடிஏவை அமைவடிவமாக்குங்கள்.

இக்காட்சியமைவுகள், பிரெயில் விசைப் பலகையைக் கொண்டிருந்தாலும், தாமாகவே பிரெயிலை உரைக்கு மொழிபெயர்த்துக் கொள்கின்றன. ஆகவே, என்விடிஏவின் பிரெயில் உள்ளீடு அட்டவணை அமைப்புகள் பொருந்துவதில்லை.

பின்வரும் என்விடிஏ விசைகள், இக்காட்சியமைவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன: இந்த விசைகள் எங்கிருக்கின்றன என்பதை விளக்கமாக அறிய, காட்சியமைவுடன் வரும் வழிகாட்டி ஆவணத்தைப் பார்க்கவும்.

பெயர் விசை
பிரெயில் காட்சியமைவைப் பின்னுருட்டு t1
பிரெயில் காட்சியமைவை முந்தைய வரிக்கு நகர்த்து t2
பிரெயில் காட்சியமைவை அடுத்த வரிக்கு நகர்த்து t4
பிரெயில் காட்சியமைவை முன்னுருட்டு t5
பிரெயில் சிறுகட்டத்திற்கு வழியிடு routing
மாற்றழுத்தி+தத்தல் key sp1
நிலைமாற்றி விசை sp2
விடுபடு விசை sp3
தத்தல் விசை sp4
மேலம்பு விசை spUp
கீழம்பு விசை spDown
இடதம்பு விசை spLeft
வலதம்பு விசை spRight
உள்ளிடு விசை spEnter
என்விடிஏ பட்டியல் sp1+sp3
சாளரங்கள்+d விசை (minimise all applications) sp1+sp4
சாளரங்கள் விசை sp2+sp3
நிலைமாற்றி+தத்தல் விசை sp2+sp4

11.3. Handy Tech காட்சியமைவுகள்

Handy Tech நிறுவனத்தின் எல்லா காட்சியமைவுகளும், யுஎஸ்பி, அல்லது இழையிலா பரிமாற்றி மூலம் இணைக்கப்பட்டிருந்தால், அவைகளை என்விடிஏ ஆதரிக்கும். பழைய யுஎஸ்பி காட்சியமைவுகளுக்கு, இந்நிறுவனத்தின் யுஎஸ்பி இயக்கிகளை நிறுவ வேண்டும்.

பிரெயில் உள்ளீட்டிற்கு இதுவரை ஆதரவில்லை.

பின்வரும் என்விடிஏ விசைகள், இக்காட்சியமைவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன: இவ்விசைகள் எங்கிருக்கின்றன என்பதைப் பற்றி விளக்கமாக அறிய, காட்சியமைவின் வழிகாட்டி ஆவணத்தைப் பார்க்கவும்.

பெயர் விசை
பிரெயில் காட்சியமைவைப் பின்னுருட்டு| left, up
பிரெயில் காட்சியமைவை முன்னுருட்டு right, down
பிரெயில் காட்சியமைவை முந்தைய வரிக்கு நகர்த்து b4
பிரெயில் காட்சியமைவை அடுத்த வரிக்கு நகர்த்து b5
பிரெயில் சிறுகட்டத்திற்கு வழியிடு routing
மாற்றழுத்தி+தத்தல் esc
நிலைமாற்றி விசை b2+b4+b5
விடுபடு விசை b4+b6
தத்தல் விசை enter
உள்ளிடு விசை esc+enter
மேலம்பு விசை leftSpace
கீழம்பு விசை rightSpace
என்விடிஏ பட்டியல் b2+b4+b5+b6
Handy Tech அமைவடிவம் b4+b8

11.4. எம்டிவி லில்லி

எம்டிவி பிரெயில் காட்சியமைவை என்விடிஏ ஆதரிக்கிறது. இந்த காட்சியமைவைப் பயன்படுத்த, எந்தக் குறிப்பிட்ட இயக்கிகளையும் தாங்கள் நிறுவத் தேவையில்லை. காட்சியமைவைப் பயன்படுத்த, அதைக் கணினியில் செருகிவிட்டு, என்விடிஏவை அமைவடிவமாக்குங்கள்.

பின்வரும் என்விடிஏ விசைகள், இக்காட்சியமைவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன: இவ்விசைகள் எங்கிருக்கின்றன என்பதைப் பற்றி விளக்கமாக அறிய, காட்சியமைவின் வழிகாட்டி ஆவணத்தைப் பார்க்கவும்.

பெயர் விசை
பிரெயில் காட்சியமைவைப் பின்னுருட்டு LF
பிரெயில் காட்சியமைவை முன்னுருட்டு RG
பிரெயில் காட்சியமைவை முந்தைய வரிக்கு நகர்த்து UP
பிரெயில் காட்சியமைவை அடுத்த வரிக்கு நகர்த்து DN
பிரெயில் சிறுகட்டத்திற்கு வழியிடு route
மாற்றழுத்தி+தத்தல் SLF
தத்தல் SRG
நிலைமாற்றி+தத்தல் SDN
நிலைமாற்றி+மாற்றழுத்தி+தத்தல் SUP

11.5. Baum/Humanware/APH பிரெயில் காட்சியமைவுகள்

இந்நிறுவனங்களின் Baum, Humanware, APH பிரெயில் காட்சியமைவுகள், யுஎஸ்பி, அல்லது இழையிலா பரிமாற்றி மூலம் இணைக்கப்பட்டிருந்தால், அவைகளை என்விடிஏ ஆதரிக்கிறது. ஆதரவளிக்கப்படும் காட்சியமைவுகள், இவைகளையும் உள்ளடக்கும்:

Baum நிறுவனம் உற்பத்தி செய்யும் இன்னும் பிற பிரெயில் காட்சியமைவுகளும் செயற்படும். ஆனால், இது பரிசோதித்துப் பார்க்கப்படவில்லை.

யுஎஸ்பி மூலம் இணைப்பதாக இருந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் யுஎஸ்பி இயக்கிகளை முதலில் நிறுவ வேண்டும். APH Refreshabraille காட்சியமைவிற்கு, யுஎஸ்பி நிலையை சீரியலுக்கு மாற்ற வேண்டும்.

பின்வரும் என்விடிஏ விசைகள், இக்காட்சியமைவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன: இவ்விசைகள் எங்கிருக்கின்றன என்பதைப் பற்றி விளக்கமாக அறிய, காட்சியமைவின் வழிகாட்டி ஆவணத்தைப் பார்க்கவும்.

பெயர் விசை
பிரெயில் காட்சியமைவை பின்னுருட்டு d2
பிரெயில் காட்சியமைவை முன்னுருட்டு d5
பிரெயில் காட்சியமைவை முந்தைய வரிக்கு நகர்த்து d1
பிரெயில் காட்சியமைவை அடுத்த வரிக்கு நகர்த்து d3
பிரெயில் சிறுகட்டத்திற்கு வழியிடு routing

ஜாய் குச்சிகளைக் கொண்டிருக்கும் காட்சியமைவுகளுக்கு:

பெயர் விசை
மேலம்பு விசை up
கீழம்பு விசை down
இடதம்பு விசை left
வலதம்பு விசை right
உள்ளிடு விசை select

11.6. ஹீடோ ஃப்ரொஃபிலைன் யுஎஸ்பி

ஹீடோ ரேஹா டெக்னிக் நிறுவனத்தின் ஹீடோ ஃப்ரொஃபிலைன் யுஎஸ்பி காட்சியமைவிற்கு என்விடிஏ ஆதரவளிக்கிறது. உற்பத்தியாளரின் யுஎஸ்பி இயக்கிகளை முதலில் தாங்கள் நிறுவ வேண்டும்.

பின்வரும் என்விடிஏ விசைகள், இக்காட்சியமைவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன: இவ்விசைகள் எங்கிருக்கின்றன என்பதைப் பற்றி விளக்கமாக அறிய, காட்சியமைவின் வழிகாட்டி ஆவணத்தைப் பார்க்கவும்.

பெயர் விசை
பிரெயில் காட்சியமைவை பின்னுருட்டு K1
பிரெயில் காட்சியமைவை முன்னுருட்டு K3
பிரெயில் காட்சியமைவை முந்தைய வரிக்கு நகர்த்து B2
பிரெயில் காட்சியமைவை அடுத்த வரிக்கு நகர்த்து B5
பிரெயில் சிறுகட்டத்திற்கு வழியிடு routing
பிரெயில் கட்டப்படுதலை மாற்றியமை K2
எல்லாம் படி B6

11.7. ஹீடோ மொபில்லைன் யுஎஸ்பி

ஹீடோ ரேஹா டெக்னிக் நிறுவனத்தின் ஹீடோ மொபில்லைன் யுஎஸ்பி பிரெயில் காட்சியமைவிற்கு என்விடிஏ ஆதரவளிக்கிறது. உற்பத்தியாளரின் யுஎஸ்பி இயக்கிகளை தாங்கள் முதலில் நிறுவ வேண்டும்.

பின்வரும் என்விடிஏ விசைகள், இக்காட்சியமைவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன: இவ்விசைகள் எங்கிருக்கின்றன என்பதைப் பற்றி விளக்கமாக அறிய, காட்சியமைவின் வழிகாட்டி ஆவணத்தைப் பார்க்கவும்.

பெயர் விசை
பிரெயில் காட்சியமைவை பின்னுருட்டு K1
பிரெயில் காட்சியமைவை முன்னுருட்டு K3
பிரெயில் காட்சியமைவை முந்தைய வரிக்கு நகர்த்து B2
பிரெயில் காட்சியமைவை அடுத்த வரிக்கு நகர்த்து B5
பிரெயில் சிறுகட்டத்திற்கு வழியிடு routing
பிரெயில் கட்டப்படுதலை மாற்றியமை K2
எல்லாம் படி B6

11.8. ஹ்யூமன் வேர் பிரெயிலண்ட் BI/B தொடர்

BI 32, BI 40, B 80 உட்பட எல்லா ஹ்யூமன் வேர் பிரெயிலண்ட் பிரெயில் காட்சியமைவுகளுக்கும், அவைகள் யுஎஸ்பி, அல்லது இழையிலா பரிமாற்றி மூலம் இணைக்கப்பட்டிருந்தால், என்விடிஏ ஆதரவளிக்கிறது. யுஎஸ்பி மூலம் இணைப்பதாகவிருந்தால், உற்பத்தியாளரின் இயக்கிகளை முதலில் நிறுவ வேண்டும்.

பின்வரும் என்விடிஏ விசைகள், இக்காட்சியமைவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன: இவ்விசைகள் எங்கிருக்கின்றன என்பதைப் பற்றி விளக்கமாக அறிய, காட்சியமைவின் வழிகாட்டி ஆவணத்தைப் பார்க்கவும்.

பெயர் விசை
பிரெயில் காட்சியமைவை பின்னுருட்டு left
பிரெயில் காட்சியமைவை முன்னுருட்டு right
பிரெயில் காட்சியமைவை முந்தைய வரிக்கு நகர்த்து up
பிரெயில் காட்சியமைவை அடுத்த வரிக்கு நகர்த்து down
பிரெயில் சிறுகட்டத்திற்கு வழியிடு routing
பிரெயில் இதனுடன் கட்டப்படுவதை மாற்றியமை up+down
மேலம்பு விசை space+dot1
கீழம்பு விசை space+dot4
இடதம்பு விசை space+dot3
வலதம்பு விசை space+dot6
என்விடிஏ பட்டியல் c1+c3+c4+c5 (command n)
மாற்றழுத்தி+தத்தல் விசை space+dot1+dot3
தத்தல் விசை space+dot4+dot6
நிலைமாற்றி விசை space+dot1+dot3+dot4 (space+m)
விடுபடு விசை space+dot1+dot5 (space+e)
உள்ளிடு விசை dot8
சாளரங்கள் விசை+d (எல்லா பயன்பாடுகளையும் சிறிதாக்கு) c1+c4+c5 (command d)
சாளரங்கள் விசை space+dot3+dot4
நிலைமாற்றி+தத்தல் விசை space+dot2+dot3+dot4+dot5 (space+t)
எல்லாம் படி c1+c2+c3+c4+c5+c6

11.9. ஹிம்ஸ் பிரெயில் சென்ஸ்/பிரெயில் எட்ஜ் தொடர்

யுஎஸ்பி, அல்லது இழையிலா பரிமாற்றி மூலம் இணைக்கப்பட்டிருந்தால், ஹிம்ஸ் நிறுவனத்தின் பிரெயில் சென்ஸ், பிரெயில் எட்ஜ் காட்சியமைவுகளுக்கு என்விடிஏ ஆதரவளிக்கிறது. யுஎஸ்பி மூலம் இணைப்பதாக இருந்தால், ஹிம்ஸ் நிறுவனத்தின் யுஎஸ்பி இயக்கிகளை தங்கள் கணினியில் முதலில் நிறுவ வேண்டும்.

பின்வரும் என்விடிஏ விசைகள், இக்காட்சியமைவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன: இவ்விசைகள் எங்கிருக்கின்றன என்பதைப் பற்றி விளக்கமாக அறிய, காட்சியமைவின் வழிகாட்டி ஆவணத்தைப் பார்க்கவும்.

பெயர் விசை
பிரெயில் காட்சியமைவை பின்னுருட்டு இடப் பக்க scroll down
பிரெயில் காட்சியமைவை முன்னுருட்டு வலப் பக்க scroll down
பிரெயில் காட்சியமைவை முந்தைய வரிக்கு நகர்த்து இடப் பக்க scroll up
பிரெயில் காட்சியமைவை அடுத்த வரிக்கு நகர்த்து வலப் பக்க scroll up
பிரெயில் சிறுகட்டத்திற்கு வழியிடு routing
மாற்றழுத்தி+தத்தல் விசை dot1+dot2+space
நிலைமாற்றி விசை dot1+dot3+dot4+Space
விடுபடு விசை dot1+dot5+Space
தத்தல் விசை dot4+dot5+Space
உள்ளிடு விசை dot8
பின்நகர்வு விசை dot7
மேலம்பு விசை dot1+Space
கீழம்பு விசை dot4+Space
முகப்பெழுத்துப் பூட்டு dot1+dot3+dot6+space
மாற்றழுத்தி+நிலைமாற்றி+தத்தல் விசை advance2+advance3+advance1
நிலைமாற்றி+தத்தல் விசை advance2+advance3
முடிவு விசை dot4+dot6+space
கட்டுப்பாடு+முடிவு விசை dot4+dot5+dot6+space
தொடக்கம் விசை dot1+dot3+space
கட்டுப்பாடு+தொடக்கம் விசை dot1+dot2+dot3+space
இடதம்பு விசை dot3+space
கட்டுப்பாடு+மாற்றழுத்தி+இடதம்பு விசை dot2+dot8+space+advance1
கட்டுப்பாடு+இடதம்பு விசை dot2+space
மாற்றழுத்தி+நிலைமாற்றி+இடதம்பு விசை dot2+dot7+advance1
நிலைமாற்றி+இடதம்பு விசை dot2+dot7
வலதம்பு விசை dot6+space
கட்டுப்பாடு+மாற்றழுத்தி+வலதம்பு விசை dot5+dot8+space+advance1
கட்டுப்பாடு+வலதம்பு விசை dot5+space
மாற்றழுத்தி+நிலைமாற்றி+வலதம்பு விசை dot5+dot7+advance1
நிலைமாற்றி+வலதம்பு விசை dot5+dot7
பக்கம் மேல் விசை dot1+dot2+dot6+space
கட்டுப்பாடு+பக்கம் மேல் விசை dot1+dot2+dot6+dot8+space
கட்டுப்பாடு+மாற்றழுத்தி+மேலம்பு விசை dot2+dot3+dot8+space+advance1
கட்டுப்பாடு+மேலம்பு விசை dot2+dot3+space
மாற்றழுத்தி+நிலைமாற்றி+மேலம்பு விசை dot2+dot3+dot7+advance1
நிலைமாற்றி+மேலம்பு விசை dot2+dot3+dot7
மாற்றழுத்தி+மேலம்பு விசை இடப் பக்க scroll down + space
பக்கம் கீழ் விசை dot3+dot4+dot5+space
கட்டுப்பாடு+பக்கம் கீழ் விசை dot3+dot4+dot5+dot8+space
கட்டுப்பாடு+மாற்றழுத்தி+கீழம்பு விசை dot5+dot6+dot8+space+advance1
கட்டுப்பாடு+கீழம்பு விசை dot5+dot6+space
மாற்றழுத்தி+நிலைமாற்றி+கீழம்பு விசை dot5+dot6+dot7+advance1
நிலைமாற்றி+கீழம்பு விசை dot5+dot6+dot7
மாற்றழுத்தி+கீழம்பு விசை வலப் பக்க scroll down + space
அழி விசை dot1+dot3+dot5+space
f1 விசை dot1+dot2+dot5+space
f3 விசை dot1+dot2+dot4+dot8
f4 விசை dot7+advance3
சாளரம்+b விசை dot1+dot2+advance1
சாளரம்+d விசை dot1+dot4+dot5+advance1

11.10. ஹிம்ஸ் SyncBraille

ஹிம்ஸ் நிறுவனத்தின் சிங்க் பிரெயில் காட்சியமைவிற்கு என்விடிஏ ஆதரவளிக்கிறது. ஹிம்ஸ் நிறுவனத்தின் யுஎஸ்பி இயக்கிகளை தங்கள் கணினியில் நிறுவ வேண்டும்.

பின்வரும் என்விடிஏ விசைகள், இக்காட்சியமைவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன: இவ்விசைகள் எங்கிருக்கின்றன என்பதைப் பற்றி விளக்கமாக அறிய, காட்சியமைவின் வழிகாட்டி ஆவணத்தைப் பார்க்கவும்.

பெயர் விசை
பிரெயில் காட்சியமைவை பின்னுருட்டு இடப் பக்க scroll down
பிரெயில் காட்சியமைவை முன்னுருட்டு வலப் பக்க scroll down
பிரெயில் சிறுகட்டத்திற்கு வழியிடு routing

11.11. சேக்கா பிரெயில் காட்சியமைவுகள்

நிப்பான் டெலிசாஃப்ட் நிறுவனத்தின் 40 சிறுகட்ட பதிப்புகளான 3, 4 மற்றும் 5 பிரெயில் காட்சியமைவுகளுக்கும், 80 சிறுகட்ட Seika80 பிரெயில் காட்சியமைவுகளுக்கும் ஆதரவு அளிக்கப்படுகிறது. இந்நிறுவனத்தின் இணைய முகவரி: http://www.nippontelesoft.com/. இந்த பிரெயில் காட்சியமைவுகள் குறித்த கூடுதல் தகவல்களுக்கு, தாங்கள் செல்ல வேண்டிய இணைய முகவரி: http://www.seika-braille.com/. உற்பத்தியாளரின் யுஎஸ்பி இயக்கிகளை தாங்கள் முதலில் நிறுவ வேண்டும்.

பின்வரும் என்விடிஏ விசைகள், இக்காட்சியமைவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன: இவ்விசைகள் எங்கிருக்கின்றன என்பதைப் பற்றி விளக்கமாக அறிய, காட்சியமைவின் வழிகாட்டி ஆவணத்தைப் பார்க்கவும்.

பெயர் விசை
பிரெயில் காட்சியமைவை பின்னுருட்டு left
பிரெயில் காட்சியமைவை முன்னுருட்டு right
பிரெயில் காட்சியமைவை முந்தைய வரிக்கு நகர்த்து b3
பிரெயில் காட்சியமைவை அடுத்த வரிக்கு நகர்த்து b4
பிரெயில் கட்டப்படுவதை சுழற்றியமை b5
எல்லாம் படி b6
தத்தல் b1
மாற்றழுத்தி+தத்தல் b2
நிலைமாற்றி+தத்தல் b1+b2
என்விடிஏ பட்டியல் left+right
பிரெயில் சிறுகட்டத்திற்கு வழியிடு routing

11.12. பேப்பன்மேயர் பிரெயிலெக்ஸ் புதிய மாதிரிகள்

கீழ்க்கண்ட பிரெயில் காட்சியமைவுகள் ஆதரிக்கப்படுகின்றன:

BrxCom நிறுவப்பட்டிருந்தால், என்விடிஏ BrxCom-ஐ பயன்படுத்திக் கொள்ளும். BrxCom என்பது, திரைநவிலியிலிருந்து பிரெயில் உள்ளீடுகளை சார்பில்லாமல் பயன்படுத்த அனுமதிக்கிறது. என்விடிஏவுடன் செயற்படக்கூடிய BrxCom-ன் புதிய பதிப்பை, பேப்பன்மேயர் விரைவில் வெளியிடவிருக்கிறது. ஆனால், Trio கருவியைக் கொண்டு, BrxCom இல்லாமல் பிரெயிலை உள்ளிட இயலும்.

தன்னிச்சையாகவும், விரைவாகவும் செயற்பட, பல கருவிகள் இலகுவான அணுகு பட்டையை (Easy Access Bar - EAB) கொண்டிருக்கும். இந்த அணுகுப் பட்டையை நான்கு திசைகளில் நகர்த்தலாம். பொதுவாக, ஒவ்வொரு திசைக்கும் இரு இயக்கிகள் இருக்கும். இவ்விதிக்கு c-தொடர் மட்டுமே விலக்காகும்.

c-தொடர் மற்றும் பிற காட்சியமைவுகளில் வழியிடும் இரு வரிசைகள் காணப்படும். இதிலுள்ள மேல் வரிசை, வடிவூட்டத் தகவலை அறிவிக்க பயன்படுத்தப்படுகிறது. c-தொடர் கருவிகளில், மேல் வரிசையில் உள்ள ஒரு வழியிடும் விசையை அழுத்திய வண்ணம், அணுகுப் பட்டையை அழுத்துவது, இரண்டாம் இயக்கியை இயங்கச் செய்வதற்கு ஈடாகும். கீழ், மேல், வலது, இடது, அல்லது EAB விசைகளை அழுத்திப் பிடிப்பது, அவைகளுக்கான செயல்களை திரும்பச் செய்விக்கும்.

இந்தக் காட்சியமைவுகளில், கீழ்க்கண்ட விசைகள் பொதுவாகக் காணப்படுகின்றன:

பெயர் விசை
l1 இடது முன் விசை
l2 இடது பின் விசை
r1 வலது முன் விசை
r2 வலது பின் விசை
up ஒரு படி மேல்
up2 இரு படிகள் மேல்
left ஒரு படி இடமாக
left2 இரு படிகள் இடமாக
right ஒரு படி வலமாக
right2 இரு படிகள் வலமாக
dn ஒரு படி கீழ்
dn2 இரு படிகள் கீழ்

என்விடிஏவிற்காக ஒதுக்கப்பட்டுள்ள பேப்பன்மேயர் கட்டளைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

பெயர் விசை
பிரெயில் காட்சியமைவை பின்னுருட்டு left
பிரெயில் காட்சியமைவை முன்னுருட்டு right
பிரெயில் காட்சியமைவை முந்தைய வரிக்கு நகர்த்து up
பிரெயில் காட்சியமைவை அடுத்த வரிக்கு நகர்த்து dn
பிரெயில் சிறுகட்டத்திற்கு வழியிடு routing
மறுபரிசீலனையில் இருக்கும் தற்போதைய எழுத்தினை அறிவி l1
தற்போதைய வழிகாட்டிப் பொருளை இயக்கு l2
தட்டை மறுபரிசீலனை/குவிமையத்திற்கு நகர் r1
தலைப்பை அறிவி l1+up
நிலைமைப் பட்டையை அறிவி l2+down
கொண்டுள்ள பொருளுக்கு நகர் up2
கொள்ளப்பட்டிருக்கும் முதல் பொருளுக்கு நகர் dn2
முந்தைய பொருளுக்கு நகர் left2
அடுத்த பொருளுக்கு நகர் right2
உரை வடிவூட்டத் தகவலை அறிவி upper routing row

Trio மாதிரி, பிரெயில் விசைப் பலகைக்கு முன், நான்கு கூடுதல் விசைகளைக் கொண்டுள்ளது. இவை, இடமிருந்து வலமாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

தற்போதைக்கு, வலது பெருவிரல் விசை பயன்பாட்டிலில்லை. இரு உள்விசைகளும், இடைவெளி பட்டைக்கு வரையறுக்கப்பட்டுள்ளன

பெயர் விசை
பின்நகர் விசை dot 7
உள்ளிடு விசை dot 8
விடுபடு விசை space with dot 7
மேலம்பு விசை space with dot 2
இடதம்பு விசை space with dot 1
வலதம்பு விசை space with dot 4
கீழம்பு விசை space with dot 5
கட்டுப்பாடு விசை lt+dot2
நிலைமாற்றி விசை lt+dot3
கட்டுப்பாடு+விடுபடு விசை space with dot 1 2 3 4 5 6
தத்தல் விசை space with dot 3 7

11.13. பேப்பன்மேயர் பிரெயிலெக்ஸ் பழைய மாதிரிகள்

கீழ்க்காணும் பிரெயில் காட்சியமைவுகள் ஆதரவளிக்கப்படுகின்றன:

இக்காட்சியமைவுகளை, தொடர் நுழைவாயில் மூலம்தான் இணைக்க முடியுமென்பதை கவனிக்கவும். ஆகவே, இவ்வியக்கியை பிரெயில் அமைப்புகள் உரையாடலில் தேர்வு செய்த பின்னர், பிரெயில் காட்சியமைவு இணைக்கப்பட்டிருக்கும் நுழைவாயிலைத் தாங்கள் தெரிவு செய்ய வேண்டும்.

தன்னிச்சையாகவும், விரைவாகவும் செயற்பட, சில கருவிகள், இலகுவான அணுகு பட்டையை (Easy Access Bar - EAB) கொண்டிருக்கும். இந்த அணுகுப் பட்டையை நான்கு திசைகளில் நகர்த்தலாம். பொதுவாக, ஒவ்வொரு திசைக்கும் இரு இயக்கிகள் இருக்கும். கீழ், மேல், வலது, இடது, அல்லது EAB விசைகளை அழுத்திப் பிடிப்பது, அவைகளுக்கான செயல்களை திரும்பச் செய்விக்கும். பழைய கருவிகளில் இலகு அணுகுப் பட்டை இல்லையென்பதால், முன் விசைகள் மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தக் காட்சியமைவுகளில், கீழ்க்கண்ட விசைகள் பொதுவாகக் காணப்படுகின்றன:

பெயர் விசை
l1 இடது முன் விசை
l2 இடது பின் விசை
r1 வலது முன் விசை
r2 வலது பின் விசை
up ஒரு படி மேல்
up2 இரு படிகள் மேல்
left ஒரு படி இடமாக
left2 இரு படிகள் இடமாக
right ஒரு படி வலமாக
right2 இரு படிகள் வலமாக
dn ஒரு படி கீழ்
dn2 இரு படிகள் கீழ்

என்விடிஏவிற்காக ஒதுக்கப்பட்டுள்ள பேப்பன்மேயர் கட்டளைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

இலகு அணுகுப் பட்டை கொண்டுள்ள கருவிகள்:

பெயர் விசை
பிரெயில் காட்சியமைவை பின்னுருட்டு left
பிரெயில் காட்சியமைவை முன்னுருட்டு right
பிரெயில் காட்சியமைவை முந்தைய வரிக்கு நகர்த்து up
பிரெயில் காட்சியமைவை அடுத்த வரிக்கு நகர்த்து dn
பிரெயில் சிறுகட்டத்திற்கு வழியிடு routing
மறுபரிசீலனையில் இருக்கும் தற்போதைய எழுத்தினை அறிவி l1
தற்போதைய வழிகாட்டிப் பொருளை இயக்கு l2
தட்டை மறுபரிசீலனை/குவிமையத்திற்கு நகர் r1
தலைப்பை அறிவி l1+up
நிலைமைப் பட்டையை அறிவி l2+down
கொண்டுள்ள பொருளுக்கு நகர் up2
கொள்ளப்பட்டிருக்கும் முதல் பொருளுக்கு நகர் dn2
அடுத்த பொருளுக்கு நகர் right2
முந்தைய பொருளுக்கு நகர் left2
உரை வடிவூட்டத் தகவலை அறிவி upper routing strip

பிரெயிலெக்ஸ் Tiny:

பெயர் விசை
மறுபரிசீலனையில் இருக்கும் தற்போதைய எழுத்தினை அறிவி l1
தற்போதைய வழிகாட்டிப் பொருளை இயக்கு l2
பிரெயில் காட்சியமைவை பின்னுருட்டு left
பிரெயில் காட்சியமைவை முன்னுருட்டு right
பிரெயில் காட்சியமைவை முந்தைய வரிக்கு நகர்த்து up
பிரெயில் காட்சியமைவை அடுத்த வரிக்கு நகர்த்து dn
பிரெயில் கட்டப்படுவதை மாற்றியமை r2
தட்டை மறுபரிசீலனை/குவிமையத்திற்கு நகர் r1
கொண்டுள்ள பொருளுக்கு நகர் r1+up
கொள்ளப்பட்டிருக்கும் முதல் பொருளுக்கு நகர் r1+dn
முந்தைய பொருளுக்கு நகர் r1+left
அடுத்த பொருளுக்கு நகர் r1+right
உரை வடிவூட்டத் தகவலை அறிவி reportf

பிரெயிலெக்ஸ் 2D திரை:

பெயர் விசை
மறுபரிசீலனையில் இருக்கும் தற்போதைய எழுத்தினை அறிவி l1
தற்போதைய வழிகாட்டிப் பொருளை இயக்கு l2
பிரெயில் கட்டப்படுவதை மாற்றியமை r2
உரை வடிவூட்டத் தகவலை அறிவி reportf
பிரெயில் காட்சியமைவை முந்தைய வரிக்கு நகர்த்து up
பிரெயில் காட்சியமைவை பின்னுருட்டு left
தட்டை மறுபரிசீலனை/குவிமையத்திற்கு நகர் r1
பிரெயில் காட்சியமைவை முன்னுருட்டு right
பிரெயில் காட்சியமைவை அடுத்த வரிக்கு நகர்த்து dn
அடுத்த வரிக்கு நகர் left2
கொண்டுள்ள பொருளுக்கு நகர் up2
கொள்ளப்பட்டிருக்கும் முதல் பொருளுக்கு நகர் dn2
முந்தைய பொருளுக்கு நகர் right2

11.14. ஹ்யூமன்வேர் பிரெயில்நோட்

ஒரு திரைநவிலிக்கு காட்சியமைவு முனையமாக செயற்படும்பொழுது, ஹ்யூமன்வேர் பிரெயில்நோட்டின் நோட்டேக்கர்களுக்கு என்விடிஏ ஆதரவளிக்கிறது. பின்வரும் மாதிரிகளுக்கு ஆதரவளிக்கப்படுகிறது:

தங்களின் கருவி, ஒன்றிற்கும் மேற்பட்ட இணைப்புகளுக்கு ஆதரவளிக்குமாயின், பிரெயில்நோட்டை என்விடிஏவுடன் இணைக்கும்பொழுது, பிரெயில் முனையம் விருப்பத் தேர்வில் பிரெயில் முனையத்தின் நுழைவாயிலை அமைக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு, பிரெயில்நோட்டின் கையேட்டைக் காணவும். என்விடிஏவில், பிரெயில் அமைப்புகள் உரையாடலில் பிரெயில் நுழைவாயிலை அமைக்க வேண்டியிருக்கலாம். யுஎஸ்பி, அல்லது இழையிலா பரிமாற்றி மூலம் இணைப்பை ஏற்படுத்தும்பொழுது, இருக்கும் விருப்பத் தேர்வுகளைக் கருத்தில் கொண்டு, தன்னியக்கம், யுஎஸ்பி, அல்லது இழையிலா பரிமாற்றி ஆகியவற்றுள் ஒன்றிற்கு நுழைவாயிலை அமைக்கலாம். லெகசி தொடர் தகவல் பரிமாற்றம், யுஎஸ்பியிலிருந்து தொடர் மாற்றி ஆகியவை மூலம் இணைப்பை ஏற்படுத்தும்பொழுது,, அல்லது முந்தைய விருப்பத் தேர்வுகள் ஏதும் இல்லாதபொழுது, வன்பொறுள் நுழைவாயில்களின் பட்டியலிலிருந்து, பயன்படுத்தப்படவேண்டிய நுழைவாயிலை தாங்கள் குறிப்பாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

பிரெயில்நோட் அபெக்ஸை அதன் யுஎஸ்பி வழங்கி இடைமுகப்பை கொண்டு இணைப்பை ஏற்படுத்தும் முன்னர், ஹ்யூமன்வேர் நிறுவனத்தின் இயக்கிகளை தாங்கள் முதலில் நிறுவ வேண்டும்.

பின்வரும் என்விடிஏ விசைகள், பிரெயில்நோட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன: இவ்விசைகள் எங்கிருக்கின்றன என்பதைப் பற்றி விளக்கமாக அறிய, பிரெயில்நோட்டின் வழிகாட்டி ஆவணத்தைப் பார்க்கவும்.

பெயர் விசை
பிரெயில் காட்சியமைவை பின்னுருட்டு back
பிரெயில் காட்சியமைவை முன்னுருட்டு advance
பிரெயில் காட்சியமைவை முந்தைய வரிக்கு நகர்த்து previous
பிரெயில் காட்சியமைவை அடுத்த வரிக்கு நகர்த்து next
பிரெயில் சிறுகட்டத்திற்கு வழியிடு routing
பிரெயில் கட்டப்படுவதை மாற்றியமை previous+next
மேலம்பு விசை space+dot1
கீழம்பு விசை space+dot4
இடதம்பு விசை space+dot3
வலதம்பு விசை space+dot6
பக்கம் மேல் விசை space+dot1+dot3
பக்கம் கீழ் விசை space+dot4+dot6
தொடக்க விசை space+dot1+dot2
முடிவு விசை space+dot4+dot5
கட்டுப்பாடு+தொடக்க விசைகள் space+dot1+dot2+dot3
கட்டுப்பாடு+முடிவு விசைகள் space+dot4+dot5+dot6
இடைவெளி விசை space
உள்ளிடு விசை space+dot8
பின்நகர் விசை space+dot7
தத்தல் விசை space+dot2+dot3+dot4+dot5 (space+t)
மாற்றழுத்தி+தத்தல் விசைகள் space+dot1+dot2+dot5+dot6
சாளரங்கள் விசை space+dot2+dot4+dot5+dot6 (space+w)
நிலைமாற்றி விசை space+dot1+dot3+dot4 (space+m)
உள்ளீடு உதவியை மாற்றியமை space+dot2+dot3+dot6 (space+lower h)

11.15. BRLTTY

BRLTTY என்பது, இன்னும் பல பிரெயில் காட்சியமைவுகளைப் பயன்படுத்த உருவாக்கப்பட்டிருக்கும் தனிப்பட்ட பயன்பாடாகும். இதைப் பயன்படுத்த, விண்டோசிற்கான BRLTTY நிறுவ வேண்டும். இதன் அண்மைய நிறுவிப் படியை பதிவிறக்கம் செய்து நிறுவ வேண்டும். எடுத்துக்காட்டு: brltty-win-4.2-2.exe. உற்பத்தியாளரின் இயக்கிகளை நிறுவி, யுஎஸ்பி காட்சியமைவைப் பயன்படுத்துவதாக இருந்தால், காட்சியமைவையும், நுழைவாயிலையும் அமைவடிவமாக்கும்பொழுது, வழிகாட்டு நெறிமுறைகளை கவனமாகப் பின்பற்றவும்.

பிரெயில் விசைப் பலகையைக் கொண்டுள்ள காட்சியமைவுகளுக்கு, BRLTTY, தானே பிரெயில் உள்ளீட்டை கையாளுகிறது. ஆகவே, என்விடிஏவின் பிரெயில் உள்ளீடு அட்டவணை அமைப்புகள் பொருந்துவதில்லை.

என்விடிஏவிற்கான BRLTTY கட்டளை ஒதுக்கீடுகள், பின்வருகின்றன: பிரெயில் காட்சியமைவுடன் BRLTTY கட்டளைகள் எவ்வாறு கட்டப்பட்டுள்ளன என்பதை அறிய, இக்காட்சியமைவின் விசை அட்டவணைகள் ஆவணத்தைப் பார்க்கவும்.

பெயர் BRLTTY கட்டளை
பிரெயில் காட்சியமைவைப் பின்னுருட்டு fwinlt (ஒவ்வொரு சாளரமாக இடப்பக்கம் நகர்)
பிரெயில் காட்சியமைவை முன்னுருட்டு fwinrt (ஒவ்வொரு சாளரமாக வலப் பக்கம் நகர்)
பிரெயில் காட்சியமைவை முந்தைய வரிக்கு நகர்த்து lnup (ஒவ்வொரு வரியாக மேல் நகர்)
பிரெயில் காட்சியமைவை அடுத்த வரிக்கு நகர்த்து lndn (ஒவ்வொரு வரியாக கீழ் நகர்)
பிரெயில் சிறுகட்டத்திற்கு வழியிடு route (எழுத்திருக்கும் இடத்திற்கு சுட்டியை நகர்த்த்ு)

12. மேம்பட்ட தலைப்புகள்

12.1. குறியெழுத்துகளின் பலுக்கலை மேம்பட்ட வகையில் தனிப்பயனாக்கல்

நிறுத்தற் குறிகள்/குறியெழுத்துகளின் பலுக்கல் உரையாடல் பெட்டியின் மூலம் அவைகளை தனிப்பயனாக்குவதைக் கடந்து, மேலுமொரு வழியிலும் இவைகளை தனிப்பயனாக்கலாம். எடுத்துக்காட்டாக, பேச்சில் சிறு நிறுத்தத்தை ஏற்படுத்தலாம், குரலில் ஏற்ற இறக்கத்தில் மாற்றங்களை செய்யலாம், ஒரு குறியெழுத்தை அப்படியே ஒலிப்பானுக்கு அனுப்பி வைக்கலாம், பயனரின் தனிப்பயனாக்கப்பட்ட குறியெழுத்துகளையும் சேர்க்கலாம்.

இதை செய்ய, பயனர் அமைவடிவ அடைவில் இருக்கும் குறியெழுத்துகளின் பலுக்கல் கோப்பினைத் திருத்த வேண்டும். இந்தக் கோப்பின் பெயர் symbols-xx.dic. இதில், xx என்பது, ஒரு மொழிக்கான ஈரெழுத்துக் குறியாகும். இக்கோப்பின் வடிவத்தை, என்விடிஏ மேம்படுத்துநர் வழிகாட்டியின் குறியெழுத்துகளின் பலுக்கல் பிரிவில் தாங்கள் காணலாம். ஆனால், சிக்கலான குறியெழுத்துகளை பயனர்கள் விளக்க இயலாது.

13. கூடுதல் தகவல்

கூடுதல் தகவல்கள், அல்லது என்விடிஏ குறித்து உதவி தேவைப்படுமாயின், என்விடிஏவின் இணையப் பக்கத்திற்குச் செல்லவும். இதில், தொழில்நுட்ப உதவி, சமூக வளங்கள் தவிர, கூடுதல் ஆவணங்களையும் காண்பீர்கள். மேலும், என்விடிஏவின் மேம்பாடு குறித்த தகவல்களையும், வளங்களையும் இந்த இணையதளத்தில் காணலாம்.

14. சொற்களஞ்சியம்

இந்த ஆவணமும், என்விடிஏ இடைமுகப்பும், ஆங்கிலத்திலிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டபொழுது, சில சொற்கள் எவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்பதை, கீழுள்ள பட்டியல்களில் காணலாம்:

14.1. விசைகள்

ஆங்கிலச் சொல் தமிழ் மொழிபெயர்ப்பு
Alt நிலைமாற்றி
Applications பயன்பாடுகள்
Backspace பின்நகர்
Caps lock முகப்பெழுத்துப் பூட்டு
Control கட்டுப்பாடு
Delete அழி
Enter உள்ளிடு
Escape விடுபடு
Insert செருகு
Num lock எண் பூட்டு
Num pad எண் திட்டு
Shift மாற்றழுத்தி
Scroll lock உருள் பூட்டு
Space bar இடைவெளிப் பட்டை
Tab தத்தல்
Windows சாளரங்கள்
Up arrow மேலம்பு
Down arrow கீழம்பு
Left arrow இடதம்பு
Right arrow வலதம்பு
Home தொடக்கம்
End முடிவு
Page up பக்கம் மேல்
Page down பக்கம் கீழ்
Left click இடது சொடுக்கு
Right click வலது சொடுக்கு

14.2. கட்டுப்பாடுகளும், அவை தொடர்பான சொற்களும்

ஆங்கிலச் சொல் தமிழ் மொழிபெயர்ப்பு
Button பொத்தான்
Check box தேர்வுப் பெட்டி
Container கொள்களம்
Combo box சேர்க்கைப் பெட்டி
Drop down button கீழ்விடு பொத்தான்
Menu bar கிடைநீளப் பட்டியல்
Menu பட்டியல்
Progress bar முன்னேற்றப் பட்டை
Radio button வானொலிப் பொத்தான்
Split button பிளவுப் பொத்தான்
Slider வழுக்கி
Status bar நிலைமைப் பட்டை
System tray கணினித் தட்டு
Tab control கீற்றுக் கட்டுப்பாடு
Task bar பணிப்பட்டை
Tree view கிளைத் தோற்றம்

14.3. களங்கள்

ஆங்கிலச் சொல் தமிழ் மொழிபெயர்ப்பு
Block quote உரைத் தொகுதி
Column செங்குத்து வரிசை
Cell சிறுகட்டம்
Edit field தொகு களம்
Elements list அவயவங்களின் பட்டியல்
Embedded object பதிந்துள்ள பொருள்
Form field படிவக் களம்
Frame சட்டகம்
Graphic வரைகலை
Heading தலைப்பு
Landmark நிலக்குறி
Link தொடுப்பு
List வரிசைப் பட்டியல்
Row கிடை வரிசை
Separator பிரிப்பான்
Table அட்டவணை

14.4. பிற சொற்கள்

ஆங்கிலச் சொல் தமிழ் மொழிபெயர்ப்பு
Add-on கூட்டுறுப்பு
Alignment ஒழுங்கமைப்பு
Beep சிற்றொலி
Bitmap நுண்படம்
Bluetooth இழையிலா பரிமாற்றி
Browse உலாவு
Bug வழு
Candidate பரிந்துரை எழுத்து
Carriage return ஏந்தி மீளல்
Character வரியுரு
Client வாங்கி
Clipboard பிடிப்புப்பலகை
Composition இயற்றல்
Compact disk குறுந்தட்டு
Configuration அமைவடிவம்
Copy படி
Cursor சுட்டி
Dialog உரையாடல்
Directory அடைவு
Display காட்சியமைவு
Drive இயக்ககம்
Driver இயக்கி
Dynamic content இயங்குநிலை உள்ளடக்கம்
Focus குவிமையம்
Flick சுண்டுதல்
Format வடிவூட்டம்
Gesture சைகை
Grid வளையம்
Hard disk வன்தட்டு
Help balloon உதவிக் குமிழி
Icon படவுரு
Indent வரித் துவக்க ஒழுங்கு
Interface இடைமுகப்பு
Line feed வரியூட்டம்
Log செயற்குறிப்பேடு
Log-on புகுபதிவு
Module நிரற்கூறு
Mouse சொடுக்கி
Navigator வழிகாட்டி
Object presentation பொருளளிக்கை
Open source திற மூலம்
Operating system இயக்கமுறைமை
Place holder (In Powerpoint) பிடிப்பிடம்
Plug-in உட்பொருத்தி
Port நுழைவாயில்
Portable பெயர்த்தகு
Profile தனியமைப்பு
Programme நிரல்
Pronunciation பலுக்கல்/ஒலிப்பு
Regular expression வழக்கமான வெளிப்பாடு
Review cursor மறுபரிசீலனைச் சுட்டி
Screen reader திரைநவிலி
Server வழங்கி
Settings அமைப்புகள்
Slide (In PowerPoint) படவில்லை
Standard செந்தரம்
Style பாங்கு
Syntax நிரல்தொடரி
Synthesizer ஒலிப்பான்
Tapping தட்டுதல்
Thumb Drive பெருவிரல் இயக்ககம்
Thumbnail சிறுபடம்
Toolbar கருவிப் பட்டை
Tool tip கருவித் துணுக்குதவி
Touch screen தொடு திரை
Trigger தூண்டுதல்
Unavailable கிடைப்பிலில்லை
Update இற்றாக்கம்/இற்றைப்படுத்தல்
User Account Control (UAC) பயனர் கணக்குக் கட்டுப்பாடு
தமிழாக்கம்

தி.தே. தினகர், பார்வையற்றோர் உரிமைக்கான சங்கம், கதவு எண் 9B, சர்க்கரைச் செட்டியார் நகர், வரதராஜபுரம், கோயம்புத்தூர் - 641 015, இந்தியா.

மின்னஞ்சல்: td.dinkar@gmail.com